கவிதைகள்

ஸ்ரீவள்ளி கவிதைகள்

திருவிருந்து விரல்கள் என நாம் நினைப்பவை நிஜத்தில் கோரைக் கிழங்குகள் கைகள் எனத் தரப்பட்டிருப்பவை நிஜத்தில் காட்டுக் காளான்கள் பயனில்லை அவற்றால் நேசிப்பவரைத் தொடும் போது இருப்பின் சிவப்பு மொத்தமும் விரல்களாகித் தொட வேண்டும் துடிக்கும் மூளைப் பிசுபிசுப்பைக் கைகளாகக் குழைத்து அணைக்க வேண்டும். காதலின் பரிசுத்த...

அழுகைக்கு மார்பை திருப்புதல்

இந்த வாழ்வில் என்ன இருக்கிறதென தேடினேன் என்னோடு ஒரு மருத்துவச்சியும் தேடினாள் அப்போதுதான் முதன்முறையாக சுடரைப் பெற்றெடுத்துக்கொண்டிருந்த பெண்ணுறுப்பை பார்த்தேன் அச்சு அசல் அது மாடத்தில் விளக்கெரிவதை ஒத்திருந்தது நெல்லிக்கட்டையூரிய இனிப்புக்கிணற்றின் தண்ணீரை கைகளில் அள்ளினேன் அதன் முதல் சுவாசம் பின்னப்பட்டது ஆகாசமயத்தோடு வலியும்...

செல்வசங்கரன் கவிதைகள்

லலிதா அக்கா எனக்குச் சின்ன வயதில் பக்கத்து வீட்டில்லலிதா அக்கா இருந்தார்எனக்குச் சின்ன வயதில் ரயிலில் மோதி அவர் இறந்து போனார்எனக்குச் சின்ன வயதில் அவருக்கு கவிதா மஞ்சு என இரண்டு மகள்கள்எனக்குச் சின்ன...

பா.திருச்செந்தாழை கவிதைகள்.

ரகசியங்களற்றவனின் நிழலில் கண்ணாடி வளர்கிறது. எப்படியாயினும், இதற்கு ரகசியமெனப் பெயரிட நான் இன்னொருவருக்கும் இதனை தத்துக்கொடுக்க வேண்டியதிருக்கிறது. ரகசியங்கள் பெறுமதியானவை என்பதிலிருந்து வெளியேறிவிட்ட என் புதுவயதில் நான் சிறிய காற்றாடிகளை நீண்ட தொலைவில் செலுத்தும் ஞானம் பெற்றேன். எல்லாவற்றிலிருக்கும் ரகசியங்களை என் வெகுளித்தனம் சுரண்டி விலக்குகிறது. அங்கே குருதியற்ற ஓருடல்...

ரவி சுப்பிரமணியன் கவிதைகள்

ஞானம் போதும் போதும் இருந்ததென அப்போதுதான் உதிர்ந்தது மரத்திலிருந்து இன்னும் ஒரு நாளோ இரு நாளோ புகாரேதுமின்றி வான் நோக்கிக் கிடக்கிறது வெயிலையும் வாங்கிக்கொண்டு காற்றுக்கு அசையும் அதை அதன் சொற்ப வாழ்வில் என் கரங்களும் ஸ்பரிசிக்கட்டுமேயென எடுத்தேன் எத்தனை மருது, வண்ணம், வாசனை, வடிவம். தான்மை...

சிவசங்கர். எஸ். ஜே. கவிதைகள்

1) நந்தினிக்குட்டி நத்தாருக்கு இன்னும் ஒரு வாரம் கேரல் குழுவின் வழக்கமான மார்கழி சங்கீர்த்தனங்கள் ஒவ்வொரு நாளும் நத்தார் தாத்தா நடனமாடி தாவிக்குதித்து வருகிறார் தெருவெங்கும். குழந்தைகளுக்கு மிட்டாயும் பலூனும் தருகிறார்   மாடியிலிருந்து எட்டிப்பார்க்கும் நந்தினிக்குட்டிக்கும் மிட்டாய் கிடைக்கிறது. அவளுக்கு சந்தோசமில்லை   தாத்தா நம்ம வீட்டுக்கு...

ஔஷதக் கூடம்

அப்பாவுக்கு புற்றுதானாம். உறுதியாகிவிட்டது. மூப்பின் பொருட்டு இரண சிகிச்சையை நிராகரித்துவிட்டார் மருத்துவர். சங்கதி தெரியாமல் பேத்தியின் பிரதாபங்களில் தோய்கிறார் அப்பா. கதாபிரசங்கியின் துடிமேளக்காரனாக அப்பாவின் பேச்சுக்கெல்லாம் பக்கத்துப் படுக்கைக்காரர் முகிழ்நகை செய்கிறார். அவரது தொண்டையில் துளையிட்டிருக்கிறார்கள். இப்போது எப்படி இருக்கிறது? ’பரவாயில்லை’ ’காற்றோட்டமில்லை .... நல்ல படுக்கையில்லை’ ’பரவாயில்லை’ ”செவிலியர் இல்லை ......மருந்து போதவில்லை’ ’பரவாயில்லை..... பரவாயில்லை’ ’வலி மிகும்...

நீரை. மகேந்திரன் கவிதைகள்

1. வரிசையில் நிற்கும் பள்ளி ஆசிரியை அந்த வரிசையில், பத்தொன்பதாவது நபருக்கு பின்னால் நிற்கிறேன் இருபது என்று சொல்லலாம் இடித்துக் கொண்டு நிற்கிறான் இன்னொருவனும். முதலாவது நிற்பவனுக்கு ஏ.டி.எம்மில் பணம் எடுக்க வேண்டும். இரண்டாவதாக நிற்பவனுக்கும்,ஏழாவதாக உள்ளவனுக்கும் காலைக்கடனுக்கான அவசரம். மூன்றாவதாக நிற்பவன் கே.எப்.சி கவுண்டருக்கு...

சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகள்

1). சாட்சியமிருக்க நேர்ந்துவிட்டது எந்த அநீதியின் பிள்ளைகள்நாங்கள்?செய்த செய்யாத எல்லாவற்றுக்கும்சாட்சியமிருந்தபடி இருந்தோம்.அந்திகள் அவசியமா?அதுபோலபகல்களும் இரவுகளும்.அறுத்தோடும் காலத்தில்எம்மீன் என் மீன்அல்லதுதூண்டிலாகும் விதியாஅறுத்தறுத்துக்கடந்தால்வழியெங்கும் மணற்பாதைகள்வெகுதூர கானலின் மயக்கங்கள். 2). தொட்டதெல்லாம் பரிபூரணமாய் நிகழ்ந்தது அழிவுமதுவிடுதிகள்வேசையர் விடுதிகள்போதை வஸ்துக்கள்காதல்கள்பணம்நீதி கோரல்கள்எல்லாவற்றையும்தாண்டிநிகழ்ந்துகொண்டிருந்தது அதுதொட்டதெல்லாம்...

செல்வசங்கரன் கவிதைகள்

பொன் நிற டிசைன்பண்டிகை தினத்தன்று இறந்தவன்துக்கத்தின் அளவை சிறியதாக்கினான்பெரிய பாறாங்கல் சிறிய கல்லாக மாறஒப்புக் கொள்ளாதுஅப்படி வேண்டுமென்றால் அங்கிருந்துநகர்ந்து செல்ல வேண்டும்துக்கத்திலிருந்து கிளம்பிஎல்லாரும் வெகுதூரம் சென்றனர்இறுதிஊர்வலத்தில் தான்அந்த நிகழ்வு எல்லாருக்கும் நடந்தேறியதுஒலியெழுப்பியபடி வானத்திற்குச்...