கவிதைகள்

நீயாகப்படரும் முற்றம்

விரவிக் கிடக்கும் சடைத்த மர நிழல்கள்… ரயில் தண்டவாளத்தை இரு கோடாக முதுகில் கீறிய அணில் குஞ்சு, என் சித்திரத்திலிருந்து தப்பித்த தும்பிகள் படபடக்கும் வண்ணாத்திப்பூச்சி,பொன் வண்டு வேலியோர தொட்டாச்சிணுங்கி. குப்பை மேனிச் செடி இணுங்கும் சாம்பல் பூனை… இறைந்துகிடக்கும் சருகு, நான் கூட்டக் கூட்ட இலைப்பச்சையாகி வளர்கிறது! யாரோ வெயிலைப் பிய்த்து துண்டு...

நீலவ்னா

என் கனவு பிரதிமை நீலவ்னா தொலைதூர மலைத்தொடரில் காட்டு மிருகங்கள்  இனப்பெருக்கம் செய்துகொண்டிருக்கலாம் ஆரண்யம் முயங்கும் உயிரியக்கம் பரிணாமத்தை மேலும் உண்டு பண்ணிக்கொண்டிருக்கிறது வான் வெளி மண்டலத்தில் நீலம் தரித்திருக்கிறதை  இப்போழ்து பார்க்க வேண்டுமே நீ மகா அற்புதம்  நட்சத்திரக் கூட்டு மந்தையில்  தனித்து ஔிரும்...

உதிரும் கணத்தின் மகரந்தம்.

சமீபமாக துர்நாற்றத்தை கசிந்து பரப்பிக்கொண்டிருந்த அஹமத் ஈஸாக்கின் வீட்டு பேய்க்கிணற்றை தூர் வாரத் துவங்கியது பொக்லைன் இயந்திரம் அரைகுறை ஆடைகளோடு தாதியின் தடிக்குப்பின்னிருந்து அவ்விடம் தப்பியோடிட பிரயத்தனித்ததின் பலனாய் ஹிஜாப்பை எடுத்துவர சென்ற சில நொடிகள் வாய்த்தது ஒவ்வொருமுறையும் இயந்திரத்தின் கொண்டிகளிலிருந்து சிந்தைக்கெட்டாத அசாத்திய பொருட்கள் அகப்படும்படியானது ஏழு ஆண்டுகளுக்கு...

ச.துரை கவிதைகள்

செம்மந்தி கிழவி தனது விற்பனை மீன்களுக்குத் தானாகவே புதுப் பெயரிடுவாள் தரிசு தாண்டி சர்ச் போகும் வழியே அந்தக் கூடையை தூக்கித்தாவென்றாள் என்ன மீனென்று கேட்டேன் செம்மந்தி என்றாள் வித்தியாசமான பெயர் உச்சரித்துக்கொண்டே கரையில் நிற்கிறேன் அதைக் கேட்டதும் கடல் தனது உடலை பாத்திரத்தைப் போல...

ஸ்ரீநேசன் கவிதைகள்

  1.கவிதை ஆவது சொற்களில் சொற்சேர்க்கையில் அதுவாக்கும் கருத்தில் விரவிய அணியில் அலங்காரத்தில் ஓசை நயத்தில் சொற்களிடைவெளியில் அங்குக் கண்சிமிட்டும் மறைபொருளில் பொருள்மயக்கத்தில் தொனியில் வடிவத்தோற்றத்தில் கற்பனையில் சிந்தனையில் வாசகனில் அவன் கூர்ந்த வாசிப்பில் அவனும்...