நீலவ்னா


ன் கனவு பிரதிமை நீலவ்னா

தொலைதூர மலைத்தொடரில் காட்டு மிருகங்கள் 

இனப்பெருக்கம் செய்துகொண்டிருக்கலாம்

ஆரண்யம் முயங்கும் உயிரியக்கம்

பரிணாமத்தை மேலும் உண்டு பண்ணிக்கொண்டிருக்கிறது

வான் வெளி மண்டலத்தில் நீலம் தரித்திருக்கிறதை 

இப்போழ்து பார்க்க வேண்டுமே நீ

மகா அற்புதம் 

நட்சத்திரக் கூட்டு மந்தையில் 

தனித்து ஔிரும் வெளிச்சம் 

அணைந்துவிடுமா என்ன

பாதி நிலா  மௌனித்து குளிர்ந்துகொண்டிருக்கும்போது

மனதின் அடியாழத்தில் தங்கி நிற்கும்  

நினைவின் குவியல்களில் ஓராழ்ந்த ஈர்ப்பு

சில்லிட வைக்கின்ற மகத்துவம் அறிந்திருக்கிறாயா நீ

தனித்திருத்தலில் கண்டடைந்திருக்கிறேன்  

மேலும்

நீ எனக்கு தூக்கத்தை  அருளிவிட்டு சென்றிருக்கிறாய்

கனவுகளை காண அனுமதித்திருக்கிறாய்

நான் மேகப்பொதியில் உடலை கழற்றி எறிந்துவிட்டிருக்கிறேன்

என் ஆன்மாவை உன் உயிர்வெளிச்சத்தில் மிதக்கவிட்டிருக்கிறேன்

இனி

கடந்துபோ என்கிற  உன் அன்பின் குரலை

என்னசெய்வதென்று சத்தியமாய் தெரிவில்லை நீலவ்னா


[mkdf_icon icon_pack=”font_awesome” fa_icon=”fa fa-pencil” size=”mkdf-icon-small” custom_size=”” type=”normal” border_radius=”” shape_size=”” icon_color=”red” border_color=”” border_width=”” background_color=”” hover_icon_color=”yellow” hover_border_color=”” hover_background_color=”” margin=”” icon_animation=”icon_animation” icon_animation_delay=”” link=”” anchor_icon=”yes” target=”_self”] அனாமிகா

Previous articleவைரஸ்
Next articleதவிப்பு
Avatar
கனலி - கலை இலக்கியச் சூழலியல் இணையதளம். www.kanali.in
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments