Tag: வே.நி.சூர்யா

மார்க் ஸ்ட்ராண்ட் கவிதைகள்.தமிழாக்கம் – வே.நி.சூர்யா

1.பைசாசக் கப்பல்நெரிசலான வீதியினூடேஅது மிதக்கிறது,அனுமானிக்கயியலாத அதன் கொள்ளளவோ காற்றைப் போல.அது நழுவுகிறதுசேரிகளின் சோகத்திலிருந்துபுறநகர் நிலங்களுக்கு.இப்போது,எருதுகளைக் கடந்து,காற்றாலையைக் கடந்து,மெதுவாக அது நகர்கிறது.ஒருவராலும் கேட்க இயலாதபடிக்கு,இரவினூடே செல்கிறது சாவின் கனவு போல.நட்சத்திரங்களுக்குக் கீழ்அது திருடுகிறது.அதன் பயணிகளும்...

ஆடம் ஜகாஜெவ்ஸ்கி கவிதைகள்

சாதாரண வாழக்கை நமது வாழ்க்கை சாதாரணமானது, பெஞ்சில் கைவிடப்பட்ட ஒரு கசங்கிய காகிதத்தில் படித்தேன். நமது வாழ்க்கை சாதாரணமானது, தத்துவவாதிகள் என்னிடம் சொன்னார்கள். சாதாரண வாழ்க்கை, சாதாரண நாட்கள், கவலைகள், ஒரு இசைக்கச்சேரி, ஒரு உரையாடல், நகர எல்லையில் உலா, நல்ல செய்தி, கெட்ட...

மேரி ஆலிவர் கவிதைகள்

கற்களால் உணரயியலுமா? கற்களால் உணரயியலுமா? அவர்கள் தங்கள் வாழ்க்கையை நேசிக்கிறார்களா? இல்லை அவர்களின் நிதானம் எல்லாவற்றையும் அமைதியடையச் செய்துவிடுமா? நான் கடற்கரையில் நடக்கும்போது வெள்ளை நிறத்தில், கறுப்பில் எனப் பல வண்ணங்களில் சிலவற்றைச் சேகரிக்கிறேன். கவலைப்பட வேண்டாம், நான் உன்னைத் திரும்பவும் கொண்டு வந்து விட்டுவிடுவேன் என்கிறேன் பிறகு அவ்விதமே செய்கிறேன். மரம் தனது பல கிளைகளை உயர்த்தி உவகையடைகிறதே, ஒவ்வொரு கிளையும் ஒரு கவிதையைப்போலவா? முகில்கள் தங்களது மழைமூட்டையை அவிழ்த்துவிடுவதில் மகிழ்ச்சியடைகின்றனவா? உலகத்தில் பெரும்பாலானவர்கள் சொல்கிறார்கள், இல்லை, இல்லை, அது சாத்தியமேயில்லை என்று. நான் அத்தகைய முடிவை எண்ணிப்பார்க்கவே மறுத்துவிட்டேன். ஏனெனில் அது மிகப் பயங்கரமானதாக இருக்கும், மேலும் தவறாகவும். ** நான் கடற்கரைக்குச் சென்றேன் நான் காலையில் கடற்கரைக்குச் சென்றேன் நேரத்திற்கேற்ப அலைகள் வந்துபடியும் சென்றபடியும் இருந்தன, ஓ, நான் சோகமாக இருக்கிறேன் என்ன செய்யட்டும்— நான் என்ன செய்ய வேண்டும்? என்கிறேன். தன் அழகிய குரலில் கடல் சொல்கிறது: மன்னிக்கவும், எனக்கு வேலை இருக்கிறது. ** எப்போது அது நிகழ்ந்தது? எப்போது அது நிகழ்ந்தது? “நிறையக் காலத்திற்கு முன்பு” எங்கு நிகழ்ந்தது? “தூராதி தூரத்தில்” இல்லை, சொல், எங்கு நிகழ்ந்தது? “எனது இதயத்தில்” இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது உனது இதயம்? “நினைத்துப்பார்த்த படியிருக்கிறது, நினைத்துப்பார்த்தபடியிருக்கிறது!” **   இந்தக் காலையில்  இந்தக் காலையில் செங்குருவிகளின் முட்டைகள் பொரிந்துவிட்டன மேலும் ஏலவே குஞ்சுகள் உணவுக்காகக் கீச்சிட்டுக்கொண்டிருக்கின்றன. அவர்களுக்குத் தெரியாது உணவு எங்கிருந்து வருகிறது என்று, வெறுமனே கத்திக்கொண்டிருக்கிறார்கள் “மேலும்! மேலும்!” வேறு எது குறித்தும்,...

சார்லஸ் சிமிக் கவிதைகள்

ஓவியத் திரைச்சீலை அது சொர்க்கத்திலிருந்து பூமிக்குத் தொங்குகிறது. அதில் மரங்கள் உள்ளன, நகரங்களும் நதிகளும் பன்றிக்குட்டிகளும் நிலவுகளும் உள்ளன. ஒரு மூலையில், முன்னேறும் குதிரைப்படையின் மீது பனி பொழிகிறது. இன்னொரு மூலையில் பெண்ணொருத்தி நெல் நடவு செய்து...

ஆக்டேவியோ பாஸின் பிருந்தாவனம்

ஆக்டேவியோ பாஸ் (1914-1998) மெக்ஸிக்கோவை சேர்ந்த கவிஞர், லத்தீன் அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க இலக்கிய ஆளுமை, 1990ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசையும் பெற்றவர், பாஸின் ஆளுமை என்பது சர்ரியலிசம், தாந்ரீகம், பெளத்தம் என...

வே.நி.சூர்யா கவிதைகள்

1.மாபெரும் அஸ்தமனம் அந்திவானில் மகத்தான ரத்தத்துளி அதன் ஒளிப்பரிவாரங்களோடு அஸ்தமனமாகிக் கொண்டிருக்கிறது அனிச்சையாக என்னை நான் தொட்டுப்பார்க்கிறேன் ஆ! காற்றை தீண்டுவது போல அல்லவா உள்ளது தொடுகையுமில்லை தொடப்படுவதுமில்லை வேறெதுவோ நான்.. ஒரு வீட்டில் வசிப்பவனை மாதிரி எனக்குள் இருக்க வேண்டிய நான் எங்கே ஒருவேளை...

சீனப்பெட்டிகளும் பொம்மை அரங்கங்களும்

பிரக்ஞையுணர்வே நமக்கு தெரிந்தவற்றின் ஒரே இல்லம். -டிக்கின்சன்    எமிலி டிக்கின்சனின் கவிதைகளை குறித்து எண்ணுகையில் இரண்டு படிமங்கள் என் நினைவுக்கு வருகின்றன: ஒன்று சீனப் பெட்டிகள் இன்னொன்று பொம்மை அரங்கங்கள். பெட்டிகளை உள்ளடக்கிய பெட்டியின் படிமம்...