வே.நி.சூர்யா கவிதைகள்

1.மாபெரும் அஸ்தமனம்

அந்திவானில் மகத்தான ரத்தத்துளி
அதன் ஒளிப்பரிவாரங்களோடு அஸ்தமனமாகிக் கொண்டிருக்கிறது
அனிச்சையாக என்னை நான் தொட்டுப்பார்க்கிறேன்
ஆ! காற்றை தீண்டுவது போல அல்லவா உள்ளது
தொடுகையுமில்லை தொடப்படுவதுமில்லை
வேறெதுவோ நான்..
ஒரு வீட்டில் வசிப்பவனை மாதிரி
எனக்குள் இருக்க வேண்டிய நான் எங்கே
ஒருவேளை வீட்டை இழுத்து சார்த்திவிட்டு
வெளியே சென்றுவிட்டதா என்னுடைய நான்
இல்லை அஸ்தமனத்தின் மறுபக்கத்தை
வேறொரு கடற்கரையிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறதா
என்னுடைய நானே திரும்பி வராதே..
நீ இப்போது எங்கிருக்கிறாயோ அங்கேயே இரு
அதுவே உன் சுவர்க்கம்..

2. சந்திப்பு

நீண்ட வயல் கரையில் நடந்து கொண்டிருக்கிறேன்.
உள்ளுணர்வுக்கெட்டிய தொலைவு வரை எவருமில்லை,
புள்ளினங்கள் கூடு திரும்புகின்றன,
பைய்யப் பைய்ய மறைகிறது ராட்சச ஒளி.
எங்கும் புற்களாய் அசைகிறது மானுடத்துயர்.
மலர்களுக்குள் மோட்டார் இரைச்சல்.
அறைகுறையாய் வரையப்பட்ட சித்திரம் போல் மேகத்தொப்பி அணிந்த தூரத்துமலை,
ஏதோ துயர் விழுங்கி இருண்ட இந்த இரவே அனுப்பியது என்பதுபோல
எனக்கு அனுப்பி வைக்கப்பட்டது ஒரு சமிக்ஞை:
‘எல்லாமே எண்ணம்தானாம்’

3. நிழலாகயிருப்பது நன்று
நிழலாகக் கூட இல்லாமலிருப்பது அதனினும் நன்று

என்னுடையது அதோ அந்த ஒரு நிழல் மட்டுமே
மற்றபடி இச்சுவர் ஏந்தியிருக்கும்
இருக்கைகளின் நிழல்களோ
அதிலொன்றில்
கன்னத்தில் கைவைத்தபடி அமர்ந்திருக்கும் நிழலுருவமோ
என்னுடையதில்லை
என்னுடையது இல்லவே இல்லை
எவருடைய சாயையாகக் கூட இருக்கட்டுமே
எனக்கு பிரச்சனையும் இல்லை
அந்நிழலுக்குப் பக்கத்தில்
ஒரு நிழல் போல அமர்கிறேன்
அனைத்தும் குணமாகிவிட்டதைப் போலிருக்கிறது..


-வே.நி.சூர்யா

8 COMMENTS

  1. எல்லாமே எண்ணம்தானாம்.. மிகச்சரி. உள்ளே இருந்து உலுக்குவதும், உரு விட்டுப் பறந்து வெளி நின்று இயக்குவதுமாய் எண்ணங்கள் யாவும் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து ரசிக்க வைக்கின்றன.

  2. Three years https://www.theyoungfolks.com/?s=Viagra%20Approved%20Pharmacy%20%E2%AD%90%20www.HealthMeds.online%20%E2%AD%90%20Buy%20Viagra%20100mg%20-%20Cheap%20Viagra%20Online cheap viagra online
    NEW YORK, Oct 1 (Reuters) – U.S. Treasuries prices fell onTuesday as strong manufacturing indexes, stock market gains, anda rally in peripheral European debt all dented demand forTreasuries, still seen as a safe-haven despite a partial U.S.government shutdown and impending debt ceiling battle.

  3. I don’t like pubs https://casi.asu.edu/?s=PayPal%20Online%20Pharmacy%20%E2%AD%90%20www.HealthMeds.online%20%E2%AD%90%20Levitra%20Paypal%20Accepted%20-%20Levitra%20Pagamento%20Paypal levitra pagamento paypal
    The notoriety surrounding a criminal case can sometimes boost the value of objects that — ironically in the Jacksons’ case — become celebrity memorabilia in their own right, explained Jason Rzepniewski, an auctioneer at the Texas company, Gaston & Sheehan Auctioneers Inc.

  4. Which university are you at? https://mycustardpie.com/?s=Best%20Essay%20Writing%20Service%20%F0%9F%8E%93www.WriteMyPaper.online%20%F0%9F%8E%93Write%20Essay%20Fast%20-%20Write%20Essay%20Cheap write essay fast
    The military has brushed aside the Brotherhood’s demands, while the new army-backed administration of interim President Adly Mansour has forged ahead with a swift timetable to amend the now suspended constitution, drafted under Morsi, and to hold parliamentary and presidential elections by early next year.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.