உணவெனும் கலை

வாத்துகளாயிரம் அல்லிகளாய் மலர்ந்திருக்க
குருவியின் சிறுமனை
கிளைகளில் நிலவாய் தொங்கும்
ஆற்றின் அருகமர்ந்து
தீ பொசுக்கும் கறியிலிருந்து
சொட்டும் எண்ணை எச்சிலாகி
உடலை நனைத்த கதையைச் சொல்லியவாறு
குடல், ஈரல், தொடைக்கறியென
பந்தி விரித்து
பாங்காய் இது பக்கோடாவென
பொட்டலம் பிரித்த
ததும்பும் பிரியங்களால்
மாட்டுக்கறியின் ருசியை
அரூரில் சுவைக்கக் கற்றேன்.
ஆம்பூர், பேரணாம்பட்டென
பயணத்தில் மனமும் மணக்க
சூப்பும் சுக்காவுமாக
அலைகள் அடித்தது புதுச்சேரியில்.

உண்பதும் உணர்தலும்
அவரவர்களுக்கானது
அவை அவைகளுக்கானதும்.


-ந.பெரியசாமி

Previous articleவெள்ளை நிறக்காலம்.
Next articleசரவணன் டோ புகைப்படங்கள்
Avatar
கனலி - கலை இலக்கியச் சூழலியல் இணையதளம். www.kanali.in
Subscribe
Notify of
guest
1 Comment
Most Voted
Newest Oldest
Inline Feedbacks
View all comments
க. பாரி, வேலூர்.
க. பாரி, வேலூர்.
3 years ago

உணவெனும் கலை – ந பெரியசாமி கவிதை படித்தேன்.

கவிதை சுவையாக, நாமே உண்டது போல், ஒவ்வொன்றின் சுவையையும் உணர்த்தியது.