படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

நினைவு கொண்டிருப்பது

நினைவு கொண்டிருப்பது இன்று மாலை யாருமற்ற பூங்காவுக்குள் நுழையும்போது எதிர் வரிசையில் புன்னகையுடன் தோன்றி முகமன் கூறுவாள் ஒரு நாய்க்கார சீமாட்டி.   அவளைக் கடந்து வெட்கத்தை விட்டு ஆடைகளை அவிழ்க்க ஆரம்பித்திருக்கும் மரங்களின் கீழ், இலைகளின் படுகையின் மீது ஓசை எழும்ப நடைப்பயிற்சி பழகும்போது,   வழமை போலவே தன் கவிகையில் நிறங்களை நிறைத்தபடி நின்று கொண்டிருக்கும் அந்த அழகு மரம். வட...

முத்துராசா குமார் கவிதைகள்

ஈச்சங்கை ஹைவேஸ் தாபா வாசலில் பச்சை சீரியல் பல்புகள் சுற்றப்பட்டு தனித்து நிற்கும் ஈச்சமரமாகிய நான் அகல வாய்க்காவில் முளைத்தவள். மறுகாவையும் பஞ்சபாடையும் குடித்து ஆழ ஊன்றினேன். பீக்காட்டின் கரம்பைத் தின்று கறித்திமிருடன் பூத்தேன். தூண்டிலுக்கு புழுக்கள் தோண்டுகையில் பாதங்கள் கூசும். செதில் உடலேறி சறுக்கியவர்களை பிடித்திருக்கிறேன். ஓலைத் தலையினுள் தேடி ஈச்சம் பழங்களைக் கொட்டியிருக்கிறேன். தேன்மிட்டாய்...

ஜீவன் பென்னி கவிதைகள்

சகமனிதன் தன்னைச் சிறகென மாற்றிக் கொள்கிறான்.   கைவிடப்பட்ட ஒரு மனிதனை நிறுத்தி உலகம் நிச்சயமாக உருண்டையானதா எனக் கேட்கின்றனர்? எல்லாவகையிலும் கைவிடப்பட்டிருக்கும் உருண்டை எனச் சொல்லிக் கடந்து செல்கிறானவன். 1. காயப்பட்ட மனிதனைப் பாடுவதற்காக இரண்டு பழுத்த இலைகள் இவ்விரவில் விழுந்திருக்கின்றன. அடரிருளே! அழுவதற்கென அவற்றை மிகத்...

ஸ்ரீநேசன் கவிதைகள்

  1.கவிதை ஆவது சொற்களில் சொற்சேர்க்கையில் அதுவாக்கும் கருத்தில் விரவிய அணியில் அலங்காரத்தில் ஓசை நயத்தில் சொற்களிடைவெளியில் அங்குக் கண்சிமிட்டும் மறைபொருளில் பொருள்மயக்கத்தில் தொனியில் வடிவத்தோற்றத்தில் கற்பனையில் சிந்தனையில் வாசகனில் அவன் கூர்ந்த வாசிப்பில் அவனும்...

ஆனந்த் குமார் கவிதைகள்

அம்மும்மாவின் பால்கனித் தோட்டம்     நிறைந்துவிட்டது. கத்தரி புதினா தக்காளி இருந்தாலும் அம்மும்மாவிற்கோ ரோஜா பைத்தியம் வளர்ந்த ஒரு ரோஜாவின் கிளைமுறித்து கிளைமுறித்து வேறுவேறு தொட்டிகளில் வளர்த்தெடுத்தாள். இனி இடமில்லை என ஆனபின்னும் குட்டி ரோஜாத் தைகளாய் ஒடித்து அதன் கீழேயே நட்டுவைத்தாள். ஒரு தொட்டியில் இத்தனை நட்டால் ஒன்றுமே பிழைக்காது என்றதை அவள் கேட்டமாதிரியில்லை காய்ந்த ரோஜா பதியன்களுக்கு தளும்பத் தளும்ப நீர் ஊற்றுகிறாள் அம்மும்மா உறங்கும் மதியவேளையில் குத்தி நிற்கும் சுள்ளிகளின் மீது பூக்களின் நிழல்பரப்பி நிற்கிறது பெரிய ரோஜாச்செடி அவள் எழுந்து வந்து பார்க்கிறாள் மூட்டில் கையூன்றி உதிர்ந்த இலைகளின் நிழல்களுக்கடியில் கண்டுபிடிக்கிறாள் இன்னுமோர் இடைவெளியை   விழித்தபின்  நகர் நடுவே அந்த ஏரியை வேலியிட்டு வைத்திருந்தார்கள். தொட்டிலுக்குள் எழுந்துவிட்ட குழந்தைபோல் கவிழ்ந்து கிடந்து உருள்கிறதது, அழவில்லை சமர்த்து.   கம்பித் தடையின்றி ஏரியைப் பார்க்க சுற்றி வந்தேன். சாலை தாழும் ஒரு பழைய ஓடையருகே விரல்விட்டு வெளியே மணல் அளைந்துகொண்டிருந்தது ஏரி.     மலையெனக்கருதி இருளை பாதிவரை ஏறிவிட்டேன் இடரும் எதன்தலையிலும் அழுந்த மிதித்தே வந்திருக்கிறேன்.   வழியென்பது ஒன்றேதான், மேலே. விடிய நான் தொட்டது பாழ்வெளியின் பெருமூச்சு. எனக்குத் தெரியும் ஏறுவதை விட இறங்குவது கடினமென. ஆனாலும், மலையில்லாத உச்சியிலிருந்து எப்படி இறங்க?   ஆனந்த் குமார் தற்போது திருவனந்தபுரத்தில் குழந்தைகள் புகைப்படக் கலைஞனாக இருக்கிறார்.குறும்படங்கள் ஆவணப்படங்கள் எடுப்பதிலும் பங்காற்றி வருகிறார் . சிறார் இலக்கியம், கதை சொல்லலிலும் ஆர்வம் உண்டு.

முதியவளின் நிர்வாணம்

வயது முதிர்ந்த பழுப்புநிறப் பறவையொன்று தன் நீண்ட சிறகைத் தரையில் தளர்த்தி  ஓய்வெடுப்பதைப் போலச் சுருக்கம் நிறைந்த கைகளைத் தனது இருபக்கமும் இருத்தி அமர்ந்திருந்தாள் அவள். ஆடைகளற்றிருந்த அவளது உடலின் நிர்வாணத்தை, அவள்...

தலையங்கம்: இன்னும் பிறக்காத தலைமுறைக்காக…

கனலி கலை இலக்கியச் சூழலியல் இணையதளம் சூழலியல் காலநிலைச் சிறப்பிதழ் – பிப்ரவரி 2021 இன்னும் பிறக்காத தலைமுறைக்காக… 1 இன்றைக்கு மனிதகுலம் அதன் வரலாற்றில் மிக நெருக்கடியான ஒரு கட்டத்தில் நிற்கிறது. புவியில் அனைத்து உயிர்களின் பாதுகாக்கப்பட்ட...

காலநிலை மாற்றம்: அடிப்படைக் கேள்விகளும் பதில்களும் (FAQs)

புவி வெப்பமாதல் என்றால் என்ன? புவியின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பது புவி வெப்பமாதல் என்று குறிப்பிடப்படுகிறது. 1880-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, இப்போதைய சராசரி வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்திருக்கிறது. அதையே புவி...

காலநிலை இதழியல் அறிக்கை

கனலி கலை இலக்கியச் சூழலியல் இணையதளம் சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ் – பிப்ரவரி 2021 காலநிலை இதழியல் அறிக்கை (Climate journalism manifesto) தமிழ் ஊடகங்கள் சூழலியல்–காலநிலை இதழியல் பிரிவை உடனடியாகத் தொடங்குதல்; ஊடக பேதமின்றி, அனைத்து ஊடகங்களும்...

2021க்கான சுற்றுச்சூழல் நீதி அறிக்கை என்பது எவ்வாறு இருக்க வேண்டும்?: நித்யானந்த் ஜெயராமன்

சென்னையைச் சேர்ந்த எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான நித்யானந்த் ஜெயராமன், தமிழக அரசியல் கட்சிகளின் வேண்டுகோளுக்கிணங்க பின்வரும் அறிக்கையைத் தயாரித்துள்ளார். ‘தி வயர் சயின்ஸ்’ இணைய இதழில் வெளியான அந்தக் கட்டுரையின் தமிழாக்கம் இது....