படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

வெள்ளை நிறக்காலம்.

நோயின் வாசலில் நின்று அல்லது கதவின் மறு புறம் நின்று அல்லது அழகான சொற்சேர்க்கையின் நடுவிலிருந்து அவர்கள் அவனை வழியனுப்புகிறார்கள் பழைய கிட்டாருக்கெல்லாம் உள்ளே அனுமதி கிடையாது சுகவீனம் இழந்த தோற்றத்தை கண்ணுறும் குழந்தைகள் அம்மையின் பின்னே கடவுளைப்போல ஒளிந்துகொள்கிறார்கள். பீடித்திருந்த நோய்மையோ...

“முனைப்பை மட்டும் ஒருவிதையைப் போல ஒருபோதும் கைவிட மாட்டேன்”-சரவணன் சந்திரன்

சரவணன் சந்திரன் நவீன தமிழிலக்கியத்தில் நிதானமாகப் பெரும் ஆரவாரம் எதுவுமின்றி தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும் முக்கியமான குரல். முன்னாள் ஊடகவியலாளர், வணிகர், விவசாயி, எழுத்தாளர் என்கிற பன்முகத் தன்மை கொண்டு இயங்குபவர். வாழ்வின் இவ்வளவு...

மெட்ராஸின் சிவப்பு நிற பேரழகு கட்டிடங்கள்- 3

கார்டில் கட்டிடம் ( பாரத் இன்சூரன்ஸ் கட்டிடம் ) மெட்ராஸின்  அடையாளங்களென வரிசையில் முதலில் நிற்பது  சிவப்பு நிற கட்டிடங்களே அதில் பத்துக்கும் குறைவான கட்டிடங்களே வெள்ளை நிற கட்டிடங்கள் என்பது  உலகறிந்த ஒன்றுதானென்றாலும்,...

எந்த நூற்றாண்டிலும் அணைந்து விடாத மெழுகுவர்த்தி அவன்  தஸ்தயெவ்ஸ்கி 200ம் ஆண்டுச்...

இந்தத் தலைப்பை வைத்த பின்பு வெகுநேரம் சிந்தித்துக் கொண்டிருந்தேன். உண்மையில் தஸ்தயெவ்ஸ்கி 200-வது ஆண்டுச் சிறப்பிதழிற்கு முன்னுரை என்கிற பெயரில் என்ன எழுதிவிடப் போகிறேன் என்று. கடந்த ஆறு மாதங்களுக்கு மேல் இந்தச்...

கடவுளும் காமமும்: உமையாழின் மூன்று கதைகள்

எழுதப்படும் இலக்கியப் பனுவல்கள் எழுதியவருக்குச் சில அடையாளங்களை உருவாக்கித் தருகின்றன. உருவாக்கப்படும் அடையாளங்களுக்குக் காரணமாக இருப்பதில் முதல் இடம் எதை எழுதுகிறார்கள்? என்பதாகத் தான் இருக்கும். அதனைக் கொஞ்சம் விளக்கிச் சொல்ல நேர்ந்தால்...

செர்ரி ஃப்ளாசம்

வினோத் அலுவலகத்துக்கு செல்வதற்க்காக, காரை இயக்கி வெளியே வந்த பின் கேரேஜின் கதவை ரிமோட்டில் மூடினான். அந்த கதவு இயங்கும் ஒலி கேட்டபின் அந்த நாளின் பரபரப்பு ஓய்ந்து அமைதியடைந்தாள் சம்யுக்தா. கொதித்துக்கொண்டிருந்த...

வாழ்வின் பெருமகிழ்வு

௧ ‘ஃபிரான்சின்’ தென்கிழக்குப் பகுதியின் ஓரம், ‘காட் த’அஸுர்’ எனப்படும் ‘ஃப்ரெஞ்சு ரிவியராவில்’, ‘நீஸ்’ நகரின் பகுதிகளான ‘வில்லினவ்’ மற்றும் ‘லூபே’ என்ற இரண்டு கிராமங்கள் ஒருங்கிணைந்து அமைந்த ‘வில்லினவ் லூபே’ பகுதியில், ஒரு...

மதுசூதன் கவிதைகள்

முரண்களின் முள்வேலி. இந்தப் பெரும் பாறையை எப்படியெல்லாம் செதுக்கியிருக்கலாம் ? இரண்யனைக் கிழித்த நரசிம்மனாக, விம்மிய முலைகளோடு விளக்கேந்தும் சிலையாக, ஒரு மலைக் கோயிலுக்கு முதலிரண்டு படியாக... ஒன்றுமாகாததை யோசித்து என்ன வேலை ? இப்போதைக்கு ஒரு காகம், ஓணான் குஞ்சைக் குத்திக் கிழிக்க...

காதலெனும் தீராக் குருதிச்சுவை-தஸ்தாயெவ்ஸ்கியின் A Gentle spirit நெடுங்கதையை முன்வைத்து-சுரேஷ் பிரதீப்

ஒரு பழைய கதை. நாயொன்று வெகுநாட்களுக்கு முன்பே நீர்வற்றிப்போன ஆற்றின் நடுவே என்றோ இறந்த ஒரு மாட்டின் எலும்பைக் கண்டடைகிறது. ரத்தம் வற்றிப்போன அந்த எலும்பைப் பற்களுக்கு இடையே வைத்துக் கடிக்கிறது. எலும்பின்...

முத்தத்துக்கு..

வலது பக்கம் மேல் உதட்டு ஓரத்தில் மறைந்திருந்த மீசையின் வெள்ளை முடியை நறுக்கினேன். வெள்ளையான பிறகு முடிகளுக்கு இத்தனை மினுமினுப்பு எங்கிருந்து வருகிறதோ.. உள்ளங்கையில் வைத்துப் பார்த்து.. ’ப்பூ..’ என ஊதி விட்டேன்....