கிழவியும்  பிக்காஸோவும் புறாக்களும்… 

நான் முதலில் புறாக்களைக் காணவில்லை. இரண்டு இளைஞர்களை மட்டும்தான். அழகாகவும், ஆடியபடியும் அவைகளை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். ஆடுதலில் ஓர் கவித்துவம் இருந்தது. அவர்களது முன் பக்கம் எனக்குத் தெரியாதபோதும், பின் பக்கத்தின் அசைவுகள் ரசிப்பைத் தந்தன. என்னைப் போல இவர்களும் புறாக்களில் விருப்பம் கொண்டவர்கள்போல இருக்கலாமென  நினைத்துக்கொண்டேன்.

ஆம், அந்தத் தினத்தில், அந்த வீதியில் நிறையவும்  நெருக்கமாகவும்   நிறையப் புறாக்கள். எப்போதும் இந்தத் தொகையில் இவற்றைப் பார்த்ததேயில்லை. எனக்கு மயக்கம் வரும்போல இருந்தது. இரைகளைத் தேடின அவைகளது வேகங்கள். வேகங்கள்! நிறைய வேகங்கள்!! இந்த வேகங்கள்  சிலவேளைகளில் மனித நடமாட்டங்கள் தரும்   பயத்தால்  அறுந்தும் அறுபடாமலும்…

பாரிஸில் நீண்ட காலமாக வாழ்வதால் இங்கு  நிறையப் புறாக்கள்  உள்ளன என்பது எனக்குத் தெரியும். இவை  Pigeons de Paris (பாரிஸ் புறாக்கள்) என அழைக்கப்படுகின்றன. கட்டிடங்களில் வசிப்போர்களால் இவை   வெறுக்கப்படுவன என்பதுவும் பின்னர்   எனக்குத் தெரியும். இந்த வெள்ளைப் பறவைகள்  எந்தப் பலகணிகளையும் ஆக்கிரமிக்கும் சக்தியைக் கொண்டன. துரத்தினாலும் சில நிமிடங்களில் திரும்பி வரும் எனும் ரகசியத்தை எப்படி இவை  கற்றன என்பது எனக்குத் தெரியாது.

நான் வசிக்கும் இடத்தில்  பலகணி இல்லாதிருந்ததால் தொடக்கத்தில்  அவைகளை  வேறு கட்டிடங்களின் பலகணிகளில்தான் கண்டேன். இவற்றின் துடிப்பும், வேகமும் என்னை அப்போதே கவர்ந்தன. இவற்றின்  அசைவுகளில் மந்திரங்கள் உள்ளன எனவும் நினைத்தேன். ஏன் மனிதனாகப் பிறந்தேன், புறாவாக ஏன்  பிறக்கவில்லை என்ற கேள்வி சில வேளைகளில் என்னிடம்   எழுந்தது.

மனிதப் பிறவியில் லாபம் என்னவாம்? சிறுவனாக இருந்தால் பெற்றோர் என்னைக் கவனமெடுப்பர். என்னைச் சுதந்திரமாகப் பறக்க விடுவார்களா? வளர்ந்தவுடன் நான் அவர்களை முதியவர்களாகப் பார்ப்பேன். பெற்றோரைக் கவனிக்க வேண்டியது எனது கடமையுமாகும். இந்த இடைவெளிக்குள்  கல்யாணம் நடந்தால் எனக்கு முக்கியமானவர்கள் மனைவியும் பிள்ளைகளும்…. தான். இவர்களைக் கவனிக்க வேலை தேடவேண்டும், உழைக்க வேண்டும்…. வாழ்வு சிலவேளைகளில்  ஓர் கொடுமைதான் ! இதனை மிதித்துக் கொண்டிருப்பன  கனவுகளே.

பறவைகள் மனிதர்கள் அல்ல. இவற்றுக்குள் சாதிகள் இல்லாதது ஓர் சிறப்பான விஷயம். எங்களது  உலகம் ஓர் ஆய்வாளர்களது உலகமாக இருப்பதால் பறவைகளுக்கும் சாதிகள் உள்ளன என்று ஓர் ஆய்வாளர் சொல்ல வருவார். என்னால் இவற்றைச்   சாதி எதிர்ப்பின் கருவிகளாகவே காண்கின்றேன். இதுவும் நான்  இவற்றை விரும்புவதற்குக் காரணம்.

எனது றூமிலிருந்து மறு கட்டிடங்களில் இருக்கும், அசையும், சாப்பிடும் பறவைகளைப் படம் பிடிக்க முனைந்துள்ளேன். இவற்றின் பறக்கும்  வேகத்தினால் பல படங்கள் மோசம். பின்பு  கட்டிடவாசிகள் பறவைகளைத் துரத்துவதையும் கண்டேன். காரணம் விளங்கவில்லை. அவர்களை எனது விரோதிகளாக நினைத்துக் கொண்டேன். இந்த அழகிய பறவைகளை ஏன் துரத்துவதாம்? கொடுமை! இந்த உலகில் நித்தியங்கள் குறைவு, அநித்தியங்களே அதிகம்.

எனது பிரான்ஸ் வருகையின் தொடக்கத்தில் நான் லூவர் மியூசியத்துக்குச் சென்றதுண்டு. அது மோனா லிசாவை லவ் பண்ணுவதற்காக அல்ல. என்னை ஓர் ஓவிய ரசிகன் எனக் கருதிவிட வேண்டாம்.  எனது இலங்கை இலக்கிய வாசிப்புகளுள் டாவின்சி என்பவரையும், அவரால் தயாரிக்கப்பட்ட மோனா லிசா எனும் பெண் அல்லது ஆண்மீதும் கேள்விப்பட்டுள்ளேன். பலர் லிசாவை மிகவும் உலகின் மிகப் பெரும் ஓவியம் என மொழிந்ததால்….. நான் ஓர் படத்தை, லிசாவின் படத்தை இலங்கையில் பார்த்தேன்…… எனக்குப்  பிடிக்கவில்லை.  எனது அருகிலிருந்த ஊமைக் கடலின் கரையில் மண் மீது ஓர் மீனவன் வரைந்த ஓவியம் லிசாவைக் காட்டிலும்  மிகவும் பிடித்திருந்தது.

இந்த மீனவனை எனக்கு அதிகமாகத் தெரியும். எனது அம்மா அவனிடம்தான் மீன்கள் வாங்குவார். எனது அம்மாவும் அல்ல, நிறைய அம்மாக்கள். அவரிடம் வாங்கும் மீன்கள் துடிப்பானவை, சுவையானவை. அவர் சில மீன்களை இலவசமாகவும் தருவார்.

துடிக்கும் மீன்களை அம்மாக்கள் வாங்கியது எனக்குள்  வெறுப்பை ஊட்டியது. இவற்றைத்  தண்ணீருக்குள் வாழவிட்டால் என்ன? நான் மீன்களைச்  சாப்பிட வெறுத்தேன். எனது  பெற்றோர்கள் இவற்றைச் சாப்பிடு! சாப்பிடு என்று தூண்டாததால்  எனது உடலுக்குள் மரக்கறிகள். இவை  உடலுக்குச் சுவையானதாம்….. மீன்கள் இல்லையாம்…. இறைச்சிகள் இல்லையாம்….

அன்று இந்த மீனவன் வரைந்த படத்தைப் பார்க்க நான் கடலுக்குச்  சென்றேன்.  மீனவனும் இல்லை,  மீனவர்களும் இல்லை, படகுகளும் இல்லை, நிலத்தில் படங்களும் இல்லை.

இல்லை, இல்லை, இல்லை ………………………… பல இல்லைகள்.

நான் கரையில்.  வெடித்துக் காய்ந்த மட்டிகளதும்,  அவமாத்தாகக் கரையில் வந்து மரணித்த கடல் பிராணிகளின் அருகிலிருந்தேன். அந்தக் கடலின் தூரத்தில் அசைந்தன சில வெள்ளைக் கொக்குகள். அவை எனக்குப் பரிதாபத்தைத் தந்தன.

எனது மாமா கொக்குகளை விரும்புகின்றவர் என்பது அப்போது எனது ஞாபகத்திற்கு வந்தது. எவ்வளவு கொக்குகள் அவரிடம் பலியாகியிருக்கும்? மாலை வேளைகளில் தனது சிறிய துப்பாக்கியுடன் கடற்கரைக்குச் செல்வதை நான் வியப்புடனும், பயத்துடனும் பார்த்துள்ளேன். ஒருபோதும் அவர் உதிரம் கொட்டும்  கொக்குகள் இல்லாமல் வீட்டுக்குத் திரும்பியதில்லை. இந்தக் கடல் பறவைகளின் சுவை அவரது நாவுக்குத்தான் தெரியும். பலதடவைகள் சமையல் செய்யப்பட்ட கொக்குத் துண்டுகளை என்னிடம் நீட்டி “சாப்பிடு! ஒருதடவை சாப்பிடு! உனக்கு அதன் சுவை தெரியும்!” என எனக்குத் தந்த அவரது வலியுறுத்தல்களை நான் நாகரீகமாக எரித்தேன்.

எனது வீட்டின் முன்னேயுள்ள கட்டிடங்களின்  பலகணிகளில்  தங்கும்  புறாக்களைப் பார்க்கும் போதும், ரசிக்கும் வேளையிலும்  கடலின் அலைகளைச் சுவாசித்த கொக்குகள் என் முன் வரும்.

எனக்கு முன்  லூவர் மியூசியம். அதன் அருகில்தான் பல பிராணிகளை உயிருடன் விற்பனை செய்யும் கடைகள், உண்மையிலேயே “மியூசியங்கள்” ஆக  உள்ளன. நாய்கள், பூனைகள், பல நிறங்களிலான நிறையப் பறவைகள், மீன்கள் போன்றவற்றை உயிருடன் காணலாம். ஆனால் ஒருபோதுமே அங்கு கொக்குகளைக் கண்டதில்லை. அங்கு அனைத்துப் பிராணிகளும்  மிகவும் கவனிப்புள். கண்ணாடிப் பெட்டிகளின் முன்னால்  அவைகளைக் கரிசனை செய்யும் சட்டங்களை  வாசிக்கலாம். தொட முடியாது. வாங்கும் முத்தத்தை முதலாளிக்கு வழங்கினால் சில வேளைகளில் தொடலாம், பிராணிகள் மீதான அவரது அன்பையும் பண்பையும் கேட்கலாம்.

இந்தக் கடைகளின் பிராணிகளை ரசிப்பதற்காகவே அங்கு செல்வேன். நான் அங்கு  செல்வது பார்ப்பதற்காகவே. விலைகள்  அதிகமானதால்   வாங்குதல் கஷ்டம். சொகுசோடு வாழ்வோர்தாம் வாங்கவருவார்கள்… என்னைப் போன்றோர் பார்ப்பதற்காகவே.

பார்த்தால்  இலாபம். ஆனால்  விருப்புகள் பார்த்தலினால் விளையும் வேளைகளில் நோவைக் கொஞ்சும் எமது இதயங்கள். எது கிடைக்கின்றதோ அதனால் மகிழ்வைத் தேடுவது வாழ்வல்லவா?

இந்தக் கடை ஒன்றில் நான் பல மணி நேரங்களைக் கழித்துவிட்டு வெளியே வரும்போது சிறிய  வெள்ளைக் கிழவியை ஓர் பெரிய கறுப்பு நாயுடன் கண்டேன். நாயும் கிழவியும் அழகிய ஓவியங்கள்போல பட்டனர்.

“மேடம்! உங்களது நாய் பெரியதாகவும், அழகியதாகவும் உள்ளது! இது எந்த நாட்டின் நாய்?” எனத் தொடங்கினேன்.

நான்  ஒரு புதிராக   அவளின் பார்வையில்.

“நீங்கள் இந்தியரா?”

“நான் இலங்கையன், எமது கலாச்சாரம் இந்தியக் கலாச்சாரமே!”

“நீங்கள் இலங்கையரா? பல ஆண்டுகளாக நான் ஓர் இலங்கையரைச் சந்திப்பதில் விருப்பமாக உள்ளேன்.”

“ஏன்?”

“என்னோடு கோப்பி குடிக்க நேரம் உள்ளதா?”

“மேடம்! அழைப்புக்கு நன்றி. கோப்பிக் கடைக்குள் இந்தப் பெரியதும் அழகியதுமான  நாயை அனுமதிப்பார்களா?”

பதிலைத் தராமல்  “எவ்வளவு காலம் இங்கு வாழ்கின்றீர்கள்?” எனக் கேட்டாள்.

“5 வருடங்களாக!”

“சரி! குறுகிய காலங்கள் வாழ்வதால் உங்களுக்கு இந்த நாடு மிகவும் விளங்கியிருக்காது என  நினைக்கின்றேன். இந்த நாடு பிராணிகளை விரும்புவது. உங்கள் நாட்டில் ….?”

“நாங்கள் பிராணிகளை அடிப்பதுண்டு! நாய்களைக் கற்களால் எறிவது எமது கிராமங்களில் நிகழும் குரூரமான கலாச்சாரமும்  விளையாட்டுமாகும். மேடம்! நான் நாய்களை விரும்பினேன். சிறுவனாக இருந்தபோது எனது வீட்டுக்கு ஓர் சின்ன நாய் வந்தது. அதற்கு நான் சீசர் எனப் பெயர் கொடுத்தேன். அது இளம் வயதில் நான் விரும்பும் ஒருவரின்  வாகனத்தால் அடிபட்டு இறந்தது.”

நான் அழுதேன். மேடம் எனது துக்கத்தை இதமான மொழிகளால் அழித்தாள்.

நாம் கோப்பிக் கடைக்குள் நுழைந்தோம். சேவகன்  எங்களையல்ல நாயை வரவேற்றார், அதற்கு ஓர் கதிரையும் தரப்பட்டது.

“மேடம்! நீங்கள் எதற்காக இலங்கையரைச் சந்திக்கும் விருப்பம் ஏற்பட்டது?”

அவளது விழிகள் பிரகாசித்தன.

“உங்கள் தேசத்தில் நிறையப் புலிகள் உள்ளனவாம். எனக்கு ஓர் புலி தேவை.”

எனது இதயம் பதைத்தது.

“மேடம்! எனது தேசத்தில் நான் கொக்குகளையும், காகங்களையும் பார்த்துள்ளேன், நான் ஒரு போதுமே   புலிகளைப் பார்த்ததில்லை.”

“உங்களுக்கு உங்கள் நாடு தெரியாதா? அனைத்து பிரெஞ்சுப் பத்திரிகைகளும்  உங்கள் நாட்டில் நிறையப் புலிகள் உள்ளன எனச் சொல்கின்றன……”

“மேடம்! அவை மிருகங்கள் அல்ல. அவை எனது நாட்டைப் பிரிக்க ஆயுதம் ஏந்தியவை!  அவைகளது அரசியல் இயக்கத்தின் பெயர் புலி எனும் சொல்லுடன் சம்பந்தப்பட்டது.”

“உங்கள் நாட்டில் புலிகள்  காடுகளில்  இல்லையா?”

“மிருகக்காட்சி சாலைகளில் சில காட்டுப்  புலிகள் உள்ளன என்று கேள்விப்பட்டு உள்ளேன் ”

கோப்பி கசந்தது. இந்தக் கசப்பை நான் இங்கு குடித்துப்  பழகியுள்ளேன். மேடம் போல குடித்தேன் சீனி போடாமல்.

நாய் அமைதியாக இருந்தது. சிறுவனாக இருந்தபோது எனக்கு நாய்களில் பயம். எனது ஓட்டைச் சயிக்கிளை பல வீதி நாய்கள் துரத்தியுள்ளன. ஆனால்  எனது அருகிலிருந்த நாய் தியானம் செய்வதுபோல பட்டது. நான் அதன் தலையைத் தடவினேன். மிருதுவாக இருந்தது.

“உங்களிடம் ஓர் உதவியைக் கேட்கலாமா?”

“கேளுங்கள் மேடம்!”

“என்னால் டாக்ஸியில் இந்த நாயை வீட்டுக்குக் கொண்டு செல்ல முடியும். பல வருடங்களாக நான் மெத்ரோவில் பயணம் செய்ததில்லை. எனது வீடுவரை நீங்கள் மெத்ரோவில் வரமுடியுமா?”

அந்த வயோதிகப்  பெண்ணுடனும், நாயுடனும் பயணம் செய்வது அழகியதாகப் பட்டது. மெத்ரோவில் பல இளம் பெண்களை நான் வித்தியாசமான நாய்களுடன் பார்த்துள்ளேன். அந்தப் பெண்களைப் பார்த்து மென் சிரிப்புகளை விட்டதால்  அவர்கள் தமது நாய்களின் கரிசனையால்தான் தமக்குச்  சிரிப்புகள் கிடைத்தன என்று கருதிக் கொண்டதை நான் அறியத் தவறியதில்லை. எனது மெத்ரோப் பயணங்களில் பூனைகளைப் பார்த்தது குறைவு. முன்பு நிறைய எலிகள் இளசுகளின் கைகளிலும், கழுத்துகளிலும் இருப்பது மொடலாக இருந்தது. இப்போது எலிகளின் இடத்தை நாய்கள் பறித்து விட்டனபோலும்.

மேடத்துக்கு 80 வயது தாண்டியிருக்கும் என நினைத்தேன். ஆனால் அவளிடம் செழிப்பும், உறுதியும் இருந்தது. காதுகளில் கண்களைப்  பிரகாசிக்க வைக்கும் தோடுகள், தங்க நிறத்தில். உதடுகள் சிவப்பு நிறத்தால் கவ்வப்பட்டிருந்தன. அவள் எனது அம்மம்மா போல.

“என்னிடம்  நாயைத் தாருங்கள்!” என மெத்ரோ  இறங்கு வழியின் முன் கேட்டேன்.

“நீங்கள் என்னைக் கிழவியென நினைக்கின்றீர்கள் போலும் ….” எனப் பொன் சிரிப்புடன் சொன்னாள்.

அவளது கால்களில் வேகம் குறைவு. நாய் அவளது வேகத்தைத் தெரிந்திருப்பதைப் போல மெல்ல, மெல்லமாக இறங்கியது.

“நாய்களுக்கும் மெத்ரோக்கள் வைக்கவேண்டும்!” என ஒருவர் கோபத்தில் கத்திச் சென்றார்.

“ஆகா! இது ஓர் அழகிய நாய்! இதற்கு எவ்வளவு வயது?”.  ஓர் இளம் பெண் மேடத்தை அண்மித்துக் கேட்டாள்.

“இது புதிய நாய்! இப்போதுதான் வாங்கப்பட்டது. இதன் வயது நான்கு மாதங்களே. இது பெண் நாய். ஆம்! இவள் எனது பேத்திகளில் ஒருத்தியாகின்றாள்.”

“என்னிடம் ஓர் சிறிய நாய் உள்ளது. வயது 6. இந்த நாய் பெரிய உருவத்தில் உள்ளது. எனக்குப் பிடித்தமானது இந்த வடிவம்.”

மெத்ரோவில் நாய்க்கு ஆதரவானவர்களும் எதிரானவர்களும் இருந்தார்கள். எமது  யுகத்தில் மனிதர்களை மனிதர்கள் வெறுக்கும் நிலை இருக்கும்போது, நாய்களுக்கு எப்படித்தான்  வரவேற்பு இருக்கும்? இந்த பிரான்ஸ் நாட்டிலோ  நாய்களுக்கு நிறையக் கவனம். வீதிகளில்  மனிதர்கள் அனாதைகளாகக் கிடப்பதைக் காணலாம், நாய்களைக் காணமுடியாது.

பெரியது மேடத்தின் வீடு. கதவு திறபட்டதும் எங்களை வரவேற்றன நிறைய நாய்கள். சிலதுகள் கத்தின, வேறு சிலதுகள் எமது கால்களை முத்தமிட்டன. அந்த வீடு நாய்களின் அரண்மனையாக  இருந்தது.

இருப்பு. இந்தக் கணத்தின் இருப்பு எனக்குள் ஓர் மௌனத் தியானத்தைத் தந்தது. நாய்கள். அவைகள் ஓர் அமைதியான இருப்போடு. நாங்கள்? எமது மனித வீடுகளும் கூடுகளும்  இந்தத் தியானத்தைத் தருவனவா? எங்கள் இல்லங்களுள் போரின் முறுமுறுப்புகள் இல்லையென்று சொல்லலாமா ?

எனது பழைய சினேகிதி  “ஒவ்வொரு வீடும், போர் மேடையே !”  எனச் சொல்லும் மொழி எனக்குள் கேட்டது.

மேடம் என்னை மறந்ததுபோல் நாய்களைக் கவனித்துக் கொண்டிருந்தாள். அந்தக் கவனிப்பு என்னைக் கவர்ந்தது. ஆம்!  அவளும்,  அவளது நாய்களும்.

“உங்களது உபசரிப்புக்கு மிகவும் நன்றி, உங்களது வீடு நாய்களது ராச்சியமாக உள்ளது. இதனைப் பெரிதான அழகென்பேன். உங்களைச் சந்தித்ததற்கு நன்றி.!”

“உங்களுக்கும்  மிகவும் நன்றி. உங்களைத் தொல்லைப் படுத்தியதற்கு மன்னிப்புக் கேட்கின்றேன்.”

“மன்னிப்புக் கேட்க வேண்டாம். இந்த அழைப்பு எனது மனதுக்கும் விழிகளுக்கும் சோதானது.”

“போதலின் முன் நான் உங்களுக்கு ஓர் பரிசைத் தரப்போகின்றேன். பொறுத்திருங்கள்…..” என்றபடி சின்ன நாயுடன் ஓர் அறைக்குள் நுழைந்தாள்.

நான் எனது மனைவிக்குச் சில பரிசுகளை அவளது பிறந்தநாள் தினங்களில் கொடுத்துள்ளேன். பரிசுகளை வாங்குவதில் எனக்கு   விருப்பமே  இல்லை. எனது மனைவியிடம் எனக்கு எந்தப்  பரிசுகளையும் வாங்கித் தராதேயெனப்  பல தடைவைகள் அன்புடன் கேட்டாலும் … அவள் அங்கீகரிப்பதில்லை என்பது எனக்குத் தெரியும்.

பரிசை வேண்டாம் என்பதா? அது தரப்படும்  கணத்தில்  நாகரீகமற்றது என்பது என் நினைப்பு. பிரெஞ்சு மக்கள் பரிசுக் கலாச்சாரத்தில் வெறியர்கள். இங்கு நத்தார்கள் என்றால் பரிசுக் கடைகளில்  மக்களின் படைதான்.

அவள் ஓர் சிறிய கண்ணாடிப் பெட்டியுடன் என் முன் வருகின்றாள். அது வெறுமையான கண்ணாடிப் பெட்டியாக என் முன் பட்டது. ஆனால் அது ஓர் அழகிய பெட்டி.

“மேடம்! நீங்கள் தரும் அழகிய பெட்டிக்கு நன்றி.”

“இது பெட்டி மட்டுமா?”

“ஆம்! இது பெட்டிதான்!”

“அதனுள் இருப்பது உங்களுக்குத் தெரிய வில்லையா?”

“மேடம்! அது எனக்குத் தெரியவில்லை.”

“இந்தியர்களது அவதானிப்பு ஆழமானது எனக் கேள்விப்பட்டுள்ளேன்.”

“எனக்குச் சில நிமிடங்கள் தரமுடியுமா?”

“ஆம்!”

மீண்டும் சின்ன, அழகியதுமான பெட்டியை ஆழமாகப் பார்க்கின்றேன். ஒரு சிறிய பிராணி அசைவதுபோலத் தெரிந்தது.

“ஆம்! கண்டுவிட்டேன்.”

“அது என்ன?”

“அதன் வடிவம் எனக்குப் புரியவில்லை. ஆனால் அது சிறிது.”

“அது ஓர் சிறிய சிலந்தி, பெரிதாக வளருவதில்லை.”

“சிலந்தியா?”

“உங்களுக்குச் சிலந்தியில் பயம் உள்ளது என நினைக்கின்றேன்.”

“மேடம்! நீங்கள் சொல்வது சரி.”

“இந்தச்  சிலந்திக்கு நீங்கள்  பயப்படத் தேவையில்லை. இது கடிக்கும் சிலந்தியல்ல.” எனச் சொல்லிவிட்டு, பெட்டியைத் திறந்து தனது கையில் எடுத்தாள். அது அவளது உள்ளங்கையில் அமைதியான உலாவை நடத்தியது. பின் அவள் எனது கையை விரிக்குமாறு சொன்னாள்.

எனது பயத்தை ஒழித்துக்  கையை விரித்தேன். சிலந்தி ஏறியது. அது என் கையைக் கடிக்கவில்லை, முத்தமிட்டது. பின்  அமைதியாக, அசையாமல் என் கையில். சிந்திக்கும் சிலந்தியோ?  மேடம் அதனை அதனது பெட்டிக்குள் வைத்தபின் அவளுக்கு மீண்டும் நன்றி சொல்லிவிட்டு நான் வெளியே வந்தேன்.

எனது மனைவிக்கும் சிலந்திகளில்  பயம். வீட்டுக்குள் அவ்வப்போது அவை  வந்தால் எனக்குக் கிடைப்பது அழிப்புத் தொழில். எனக்குள் நடுக்கத்தைத்தரும் தொழில் எனலாம்.

எப்படி இந்தச்  சின்ன, அமைதிக்கான நோபெல் பரிசைப் பெறும்  சிலந்தியை வீட்டுக்குக் கொண்டு செல்வது?

அது மாலை. எனது வீட்டுக்குப் போவதின் முன்னர் ஓர் பொதுத் தோட்டத்தைக் கடக்கவேண்டும். நான் சில வேளைகளில் அங்குப் போவது புறாக்களைப் பார்ப்பதற்காகவே.

இந்தத்   தினத்திலும் அவைகள் அசைந்தன. நிறையப் பேர் இருந்தனர். நான் ஒரு முதியவரின் அருகிலிருந்தேன். எங்களுக்கு மத்தியில் எனது  பெட்டி, சிலந்திப் பெட்டி.

முதியவர்:  “ஆ!  இவை அழகான புறாக்கள்!” என்றார்.

“நானும் புறாக்களை விரும்புவதுண்டு. எனது வீட்டின் முன்னுள்ள கட்டிடத்தில் அழகிய புறாக்கள் உள்ளன.”

“பாரிஸ் நாடு அழகியது, ஆனால் இங்கு வாழும் புறாக்களை நிறையப் பேர் வெறுக்கின்றனர். இந்தப் புறாக்களை ‘பாரிஸ் புறாக்கள்’ என்பது உங்களுக்குத் தெரியுமா?”.

“நான் இங்கு சில வருடங்கள் வாழ்ந்தாலும் அது எனக்குத் தெரியும்.”

“எத்தனை வருடங்கள்?”

“கிட்டத்தட்ட 5 வருடங்கள் என நினைக்கின்றேன்.”

“உங்களது பிரெஞ்சு மொழி அழகியதாக உள்ளது. நீங்கள் பெரிய பள்ளியில் படித்ததுண்டா?”

“இல்லை. இங்கு வந்து 6 மாதத்தின் பின்னர் ஓர் பிரெஞ்சுப் பெண்தான்  இந்த அழகிய மொழியை எனக்குப் படிப்பித்தார். சில மாதங்களின் பின்னர் அவளுடன் எனக்குக் காதல் வந்தது. எனது மொழித்திறன் காதலால்  வந்ததெனலாம்.”

“நீங்கள் அவளுடன் வாழ்வது நல்லது. நான் ஓர் போலந்து நாட்டுக்காரன். உங்களைப் போல எனக்கும் பிரெஞ்சுக் காதலி கிடைத்ததால்தான் நான் இப்படித் தெளிவாகப்  பிரெஞ்சு மொழியைப் பேசுகின்றேன். எங்களுக்கு 8 பிள்ளைகள் உள்ளன. உங்களுக்கு எவ்வளவு பிள்ளைகள்?”

“நான் இப்போது அவளுடன் வாழ்வதில்லை. அவள் பிள்ளை கேட்கும்போது, நான் தொழிலில் இருக்காது விட்டதால் மறுத்துவிட்டேன். இந்த மறுப்பு எமது பிரிவுக்குக் காரணமாகியது.”

“இப்போது நீங்கள் பெரிய தொழிலில் இருப்பீர்கள் எனக் கருதுகின்றேன்.”

“தொழில் இல்லை. எனது மனைவிதான் ஓர் தொழிலில் உள்ளார்.”

நான் புறாக்களின் அசைவுகளைப் பார்த்தேன். எனக்கு இலக்கிய வாசம் தெரியாதபோதும் இவற்றின் மீது கவிதைகள், கட்டுரைகள் எழுதலாம் என்ற நினைப்பு வந்தது. தோட்டத்தில் புறாக்களது நடனக் கோலங்கள். சில சிறிய கற்கள் எறியப்பட்டாலும் அவை தமது இருப்பை நடத்தின.

“இனியவை இந்தப் புறாக்கள் 

இவற்றைக் கொண்டு செல்வேன் 

எனது நாட்டுக்கு 

கடலின் அலைகளை அவைகள் 

முத்தமிடவேண்டும் 

இந்த முத்தங்கள் 

நிலத்தில் கோலமாகவேண்டும்  ….” என்று இப்படி ஒன்று கவிதைபோல  எனக்குள் வெடித்தது. முதியவரைப் பார்க்கத் திரும்பினேன். அவரும் இல்லை, சிலந்திப் பெட்டியும் இல்லை.

பெட்டி இல்லாததால் எனக்குச் சந்தோசம் வந்தது. நான் பெட்டியைக் குப்பைத் தொட்டியில் போடாதிருந்தேன் என்பதற்காக.

இரண்டு வருடங்களின் பின்பு

எனக்கு வேலையே கிடைக்கவில்லை. காலையிலும்  மத்தியானத்திலும் மாலையிலும் புறாக்களைப் பார்த்தும், அவைகள் மீது எழுதியும் கொண்டிருந்தால்  எப்படி வேலை கிடைக்கும்? எனது இருத்தலிடம் சிறியது. ஆனால் அது புறாக்களைப் பார்ப்பதற்கு வசதியான இடம். என் புறா ரசனை   எனது மனைவிக்குப்    பிடிக்காது இருந்ததும், என் தொழிலின்மையில் அவளுக்கு  வெறுப்பு இருந்ததும் என்பது  ரகசியமாக எனக்குத் தெரியும்.

எனது மனைவிக்கு இரண்டு தொழில்கள். எப்போதும் அவள் வீட்டில் இருப்பதில்லை. மிகவும் சிறப்பாகப்  பிரெஞ்சு பேசினாள். அவள் பிரெஞ்சுக்காரனைக்  கள்ளப் புருசனாக வைத்துக் கொண்டுள்ளாளோ?  இந்தக் கேள்வி எனக்குள் எழுந்தாலும் எனது காதல் புறாக்கள் மீதுதான் இருந்தது.

“கடிதத்தைப் பார்த்தீர்களா?”

ஓர் மாலை தினத்தில் எனது மனைவி என்னைக் கேட்டதும் எனக்கு அதிர்ச்சி வந்தது.

“கடிதமா? எனக்கா?”

நான் ஒருபோதும் கடிதப் பெட்டியைத் திறப்பதில்லை.

“எனது அம்மாவிடம் இருந்துதான் கடிதம் வந்ததா?”

அவளது முகத்தில் கோபம் தெரிந்தது.

“இது எமது மாநகர சபையின் கடிதம். நேற்றுதான் வழமைபோல சமையலறையில் வைத்தேன்.  காலையிலிருந்து வாசிக்க நேரம் இல்லையா? புறாக்களைப் பார்ப்பதுதான் உங்கள் வேலையா?”

“மன்னிக்கவும். கடிதத்தைத் தா! எனது அன்பே! “

“சமையல் அறைக்குள் உள்ளது.” முக வாட்டத்துடன் சொன்னாள்.

கடிதத்தை வாசித்தேன். ஆம்! எங்களுக்கு மூன்று அறையில் புதிய கட்டிடம் கிடைக்கப் போகின்றது. வாடகை மிகவும் குறைவு.  இந்த முயற்சிக்குக் காரணம் எனது மனைவியே.

“என்னை நீ மன்னி!”

“ஏன் இதனைச் சொல்கின்றீர்கள்?”

“எனக்கு வேலை இல்லை, நீ ஓர் வேலையை அல்ல, இரண்டு வேலைகளைச்  செய்கின்றாய். எனது வேலை புறாக்களைப் பார்ப்பதுதான். நான் புறாக்களைத் தினம் தினம் பார்க்கும்   விருப்பத்தைக்  குறைத்து  நிச்சயம் ஓர் தொழிலைத்  தேடவேண்டும்.”

“நீங்கள் புறாக்களை விரும்புவது உங்களது ஆன்ம சுகத்துடன் தொடர்புடையது. எமது இருத்தல்களின் நெருக்கடிகளை  மறந்து, உங்களது  விருப்பில் நீங்கள் உங்களை இழப்பதில்  அர்த்தம் உள்ளதா? பல  வருடங்கள் உங்களுக்கு வேலை இல்லை, அரச உதவியும் குறைவானது. புறாக்களின் விருப்பால்  நீங்கள் என்னையும் மறந்துகொண்டது போலத்தான் எனக்குப் படுகின்றது. ஆனால் எமக்குள் தொடங்கியது சுத்தமான காதல் என்பதால்தான், எனக்குள் உங்கள் மீது தொடங்கும் எதிர்ப்பு விரைவில் கரைந்து போகின்றது.”

முதல் தடவையாக இன்றுதான் அவள் என் முன் இப்படிக் கதைக்கின்றாள். என்னைப் பெரிதாகச் சிந்திக்க வைத்தன அவளது மொழிகள். நான் அவள் முன் மௌனம் ஆனேன்.

“நான் உங்கள் மீது சுமத்திய குறைகளை  மன்னிக்கவும். உங்களுக்கு மனத்தொல்லைகள் தர எனக்கு எப்போதும் விருப்பமே  இல்லை.”

“உனது முயற்சிகளால்தான்  எங்களுக்கு மூன்று அறைகளோடு வதிவிடம் கிடைத்திருக்கிறது. மிகவும் நன்றி. இன்று நான் என் தவறுகளை உணருகின்றேன். புறாக்களிடம் இருந்து விடுதலை பெற்று, ஓர் தொழிலைத் தேடுவதுதான் எனது திட்டம். புதிய வதிவிடத்தில் வசித்தால்  புறாக்களது நினைவு  நிச்சயமாக மறந்து போய்விடும், நீதான் எனது புறாவாக இருப்பாய்.” என்றேன்.

அவள் விழிகள் சிவந்தன. இந்த நிறத்துள் போதை மணிகளைக் கண்டேன். எனது உடலைத் தீ முட்டியது. நாம் எமது கட்டிலில். எரிதலில் எமது உடல்கள்.

சில தினங்களின் பின்னர் 

நாங்கள் புதிய வீட்டுக்கு வந்துவிட்டோம். எங்கள் இருவருக்கும் அது  மிகவும் பெரிதானது. 3 அறைகள். பெரிதான சமையல் அறை. பத்துபேர் சாப்பிடக்கூடிய பலகணி. ஆம், முதலாவது தடவையாக நான் ஓர் பலகணியில். சில அசைவுகள் எனது காதைத் தொட்டன. ஓர் புறாவையும் எனது விழிகள் காணவில்லை. இந்தப் பறவைகளை மறக்கவேண்டும். எப்படி மறப்பது?

இதற்கு  முன் பதினெட்டு  மாடிகளைக் கொண்ட கட்டிடம். சுகத்தை எமக்கு எப்போதும் தந்ததில்லை. பகலிலும் இரவிலும் நிறையச் சத்தங்கள் கேட்கும். அந்தக்  கட்டிடத்தில் நிறையப் பிள்ளைகளோடு சேர்ந்த குடும்பங்கள் இருப்பதே காரணம் என நினைத்தேன். நாங்கள் சத்தம்போடாத தூய பிறவிகள் எனச் சொல்லிவிடமுடியாது. எனது மனைவி தமிழ் இசையைப் பெரிதாகவே கேட்பாள். இந்த இசை வேகத்தைக் குறைக்கும்படி கட்டிடத்தின் தலைமை நிறுவனத்திலிருந்து  கடிதம் கூட  ஒரு தடவை வந்தது.

இந்த வீட்டிலேயோ நிசப்தம். நாம் பெரிதாக இசையை விடலாம், ஆனால் வெளியே அமைதியாகத்தான் கேட்கும். இதன் காரணம் எதுவென நான் தேடத்துடிக்கவில்லை.

எமது பலகணி நிச்சயமாக எனக்குப்  பிடித்திருந்ததற்கு ஓர் வேறு காரணமும் உள்ளது. அதில் பலரோடு சாப்பிடுவதற்கு அல்ல. நான் வீதிகளில் எறியப்பட்ட உபயோகமான பொருள்களின் வெறியன், அவைகளை எடுத்து வருபவன்.  பழைய வீட்டிலிருந்து எடுத்து வந்த பல பொருள்களை அங்கு வைத்தேன். அவைகளுள் இரண்டு சயிக்கிளும், 3 மைக்ரோ ஓண்டுகளும், ஓர் தையல் மெசினும்…. இன்னும் பல, பல.

எனக்குள் வீடு சொர்க்கமாகப் பட்டது. பல பிளாஸ்டிக் படங்களை வாங்கிச்  சுவர்களில், மனைவியின் அனுமதியோடு ஓட்டினேன்.  ஒவ்வொரு அறைகளையும் அழகு படுத்தத் தொடங்கியதால்  தொழில் தேடும் இலக்கு எனக்குள் மறைந்து போயிற்று. மனைவி கூட எனது தொழில்மீது பேசாமல், அறைகளுள் நான் ஒட்டிய கலைத்துவத்தையே ரசித்தாள். “ம்! நீங்கள் பிக்காசோ போல!” என்று பல தடவைகள் சொல்லத் தவறவில்லை.

பிக்காஸோ  புறாக்களைக் காண்கின்றார்

அழகியவளும், கவர்ச்சிகரமானவளுமான   எனது மனைவி இன்று இரவில் என்னுடன் இருக்கமாட்டாளாம். அவள் போவது வேறு ஆணைத் தேடியல்ல, ஓர் பெண்ணைத் தேடியே.  லெஸ்பியனா? அவள் அவ்வாறு இருந்தால் அது ஓர் உடல் தத்துவம் என நினைத்துக் கொள்வேன். அவள் தனது சினேகிதியைத் தேடிச் செல்கின்றாள். தூரமாக அவள் இருப்பதாலும், பெண்களது சுய சம்பாசனைகளை இடையூறு செய்ய விருப்பம் இல்லாமல் இருப்பதாலும், நான் இன்று தனியே.

நான் எல்லா அறைகளின் கலைத்துவத்தையும் பார்த்தேன். எமது கட்டிலின்   முன்  ஒட்டப்பட்டிருந்த இந்தி நடிகையின் படத்தை, வரவேற்பு ஹோலின் கதவில் ஒட்டுவது சிறப்பாகப் பட்டது. எனது மனைவி என்னைக் கடிக்கமாட்டாளென நினைத்துக் கொண்டேன். அவள்  பார்ப்பது நிறையத்   தமிழ்ப் படங்களை, நான் இந்தி மொழிப் படங்களையே.  சில வேளைகளில் ஏன் இந்தி மொழியைக் கற்காது உள்ளேன் என்று  நான் என்னிடம் கேட்பதுண்டு.

கதவு தட்டப்பட்டது.

நிச்சயமாக மனைவி அல்ல. சில நிமிடங்களின் முன்தான் நான் அவளிடம் போனில் பேசினேன்.

தட்டுவது ஆணா? பெண்ணா?

எமது பொதுக் கதவில் வெளியில் உள்ளோரைப் பார்ப்பதற்கான சிறிய வட்டமான கண்ணாடி இல்லை. பழைய வீட்டில் அது இருந்தது.

மீண்டும் கதவு தட்டப்பட்டது.

“யார் நீங்கள்?” பலமாகக் கேட்டேன்.

“மன்னிக்கவும், நான் தபால் ஆபீசில் வேலை செய்கின்றவள் , கலண்டர் விற்க வந்துள்ளேன்.”

அவளது பதில் சில தினங்களின் பின் புதுவருடமாகும் என அறிவித்தது. இந்த ஆபீசில் வேலை செய்பவர்களில் பலர் வருடா வருடம் கலண்டர்களை  விற்பதை அறிவேன். விற்போர் பெரிய சம்பளங்களை எடுப்பவர்கள் அல்லர். ஆம்,  இந்த ஆபீசுகளில் குப்பைகளை நீக்குபவர்கள் என்பதை நான் அறிவேன்.

திறக்கப்பட்டது கதவு.  ஓர் பெண். அவள் ப்ரிஜித் பார்டோ இளம் வயதில் இருந்தது போல.  நிறையக் கலண்டர்கள். புன்னகைப் பூக்கள் உதட்டில்.

ஒன்றை வாங்கியதும், கதவைப் பூட்ட வெளிக்கிட்டேன்.

அவள் என்னைப் பார்த்தாள்.

பூட்ட முடியவில்லை.

“இன்னும் ஓர் கலண்டர் வாங்க மாட்டீர்களா?”

இரண்டாவதை வாங்கியபின் கதவை மூடினேன்.

நான் தொழில் செய்யாது விட்டாலும் எனக்கு அன்று களைப்பு. பின்  கட்டிலில். தூக்கம் ஈசியாக வந்தது.

தூக்கம்.

பின்பு சில முனகல்கள் என்னை எழுப்பின. இவை குழந்தைகளிடமிருந்து வருவதுபோல. மெலிதாகக் கேட்டவை பின்பு பெரிதாக. பலகணியில் இருந்துதான் இது  வருகின்றதா? அதில்  பிள்ளைகள் உள்ளனவா? மந்திர வித்தைகளில் பயமே இல்லாத எனக்குள் நடுக்கம், உடல் சிறிது ஆடியது. மீண்டும் கேள்வி. இவை எனது பலகணியில் இருந்துதான் வருகின்றனவா? ஆம்! எப்படிக் கதவைத் திறந்து அங்கு போவது?

இந்த முனகல்கள் எனக்குத் திகிலூட்டும் கதைகளை நினைவு படுத்தின. என் மனம் முன் தோன்றின ஸ்டீபன் கிங்கின் கதையை வைத்துத் தொடங்கிய  படங்கள்.

ஒவ்வொரு படங்களிலும், ஒவ்வொரு வாழ்விலும் ஹீரோக்கள் இருப்பது தவிர்க்க முடியாது.

நான் என்னை ஹீரோவாக்கினேன்.

பலகணியில் வெளிச்சம் இல்லை. எனது டோர்சைத்  தேடினேன். அதனைக் கண்டுபிடிப்பது சுலபமான விசயமா? இந்த வாழ்வில் தேடினால்  கிடைக்காது, தேடாதது கிடைக்கும். பலகணியில் இருந்து வரும், பெருகும் முனகல்கள் யாரிடம் இருந்து வருகின்றது  என்பதைக் காண ஒளி தேவையானதா? இந்த முனகல்கள் இப்போது காம முனகல்கலாகவும் பட்டன. எனது பலகணியில் ஓர் குடும்பம் எமக்குத் தெரியாமல் வந்து விட்டதா?

எனக்குள் சிறிய பயம். எப்படி அந்த முனகல்கள் தோன்றும்  இடத்துக்குப் போவது?

இரவு 12.10.

இந்த நேரத்தில்  எப்படி மனைவிக்குப் போன் பண்ணுவது? ஒருவேளை சம்பாஷிப்புகளால் அவர்கள் தூங்கமாட்டார்கள் என நினைத்தேன்.

முனகல்களைக் கேட்டுக்கொண்டிருந்தபோது  அவள் எடுத்தாள்?

“எனது அன்பே! உங்களுக்குத் தனிமையில் இருக்கப் பயமா?”

“பயமில்லை… உன்னிடம்….”

“சகுந்தலா உங்களுக்கு மாலை வணக்கம் செலுத்தவுள்ளாள் … அவளிடம் கொடுக்கின்றேன்…..”

“மாலை வணக்கம் கீர்த்தி! “

“மாலை வணக்கம் சகுந்தலா.”

“உங்களது மனைவியை இங்கு இந்த இரவு பிடித்து வைத்திருப்பதற்கு மன்னிக்கவும்….”

“பல தினங்கள் அவளை வைத்திருக்கலாம். உங்கள் கணவன் சுகமாக உள்ளாரா?”

“நான் உங்கள் அன்பியினுடனும்   சில கணங்களின் முன்தான் சொன்னேன்… எனக்கும் அவருக்கும் பிரிவு நடந்துவிட்டது.”

“வருந்துகின்றேன்.”

“வருத்தப்பட வேண்டாம். வாழ்வு தொடர்புகளதும் பிரிவுகளதும் நிகழ்வாகச் சிலவேளைகளில் இருக்கலாம்  என்பது என் நினைப்பு.”

சகுந்தலாவின் நினைப்பு எனது மனைவியின் நினைப்பாக இருக்க முடியுமா?  இருந்தால் என்னவாம்?

“உங்கள் குறிப்பு சரியாகவும் இருக்கலாம். மாலதியுடன் பேசலாமா?”

“கொடுக்கின்றேன்.”

“மாலதி! இந்த வேளையில் உனக்குப்  போன் செய்வதற்காக மன்னிக்கவும்.”

“ஏன் மன்னிப்பு? நீங்கள் எப்போதும் போன் செய்யலாம்  என்பது உங்களுக்குத் தெரியாதா? இங்கு சிறப்பான சாப்பாடு. கோழித் துண்டுகளை மெதுவாகப் பொரித்து சகுந்தலா ஓர் குழம்பு செய்துள்ளாள். அது மிகவும் சுவையானது. அவள் எங்களுக்காக ஒரு பிளாஸ்டிக் பெட்டியுள் அதனைப் போட்டு வைத்துள்ளாள். “

“அது நல்லது.  நான் உனக்கு போன் செய்தது…… முனகல்கள்……”

“முனகல்களா ?”

“ஆம்! முனகல்கள்……. அவை பலகணியில் இருந்து வருகின்றன……”

அவள் சிரித்தாள்.

ஏன் சிரிப்பு?”

“உங்களைப் பற்றியதுதான்.”

“ஏன் என் மீது என்று கூறுகின்றாய்?”

“நீங்கள் தூங்கும்போதும் தூங்காதபோதும் கனவுகளைக் காண்பவர். இது நீங்கள் உங்கள்  கனவுகளில்  கேட்ட முனகல்களாக இருக்கலாம் என்பது  எனது எளிமையான கருத்து.”

“என் சொற்களைப் பொய்கள் என்கின்றாயா?”

“நான் அப்படி…………………..”

போனைக் கட் பண்ணினேன்.

அவளது தொடர்பு அறுபட்டதும்  முனகல்கள் மீண்டும்  கேட்டன. அவை இப்போது எனது பயத்தை எரிக்கும்  காமச் சத்தங்களாக.  அவைகள் இதமானவை. விவிலிய வேதத்தின் பாம்பினது மொழியெனவும்  சொல்லப்படலாம்.

பிக்காஸோ  போர்னோகிராபி படத்தின் முன்…..

சில வேளைகளில் எனக்குத்  தனியே  இருக்க விருப்பம் உண்டு. எனது மனைவி நிறையக் கவர்ச்சியானவள்தான். அவளுடன் செக்ஸ் வைத்தபின் மீண்டும் எனக்கு முன்னும்  பின்னும்  விவிலியப்  பாம்புகள் தெரிவதுண்டு. நிறையப் பாம்புகள் எனது கனவாக இருந்தன என்பதைத்  தமிழ் கலாச்சாரத்தை “மதித்து” நான் அவளுக்குக் காட்டவில்லை. சில தினங்களில் எனது மனைவி என்னை விட்டுத் தனித்திருக்கவேண்டும் என விரும்பினேன். இது செக்ஸ் படங்களைச் சுதந்திரமாகவும் தனிமையிலும்  பார்க்கும் கணங்களாகலாம்.

செக்ஸ் படங்களா, போர்களா எம்மை எதிர்ப்பன என எனக்குள் சிலவேளைகளில் வருவன தத்துவக் கேள்விகள். தத்துவம் செக்ஸ், செக்ஸ் தத்துவம்.

நான்  இணைய  மலையின் முன்.

“Fuck” என எழுதினேன்.

இணையம் சுவைகளது அரண்மனை. வாத்ஸாயனரையும் அது விரட்டக்கூடியது. செக்ஸ் விளையாட்டுகள் எப்படி நடந்தாலும் அவைகளைத் தணிக்கை செய்யாமல் காட்டுவது  இணையம்.

தொடக்கத்தில் ஓர் நாயும் பெண்ணும்.

படத்தில் முதலில் நாய் வருகின்றது. அது பயங்கரமான நாய். அதற்குப் பெரிய பற்கள். அது கொடூரமாகக் குரைக்கின்றது. அவள், அழகிய வெள்ளைப் பெண் அதன் முன் சிரிக்கின்றாள். காம மணிகள் சிறிய சங்கீதத்தோடு  அவளது சிரிப்புக்குள் இருந்து வெளியே  வருகின்றன.

மனிதர்கள் மிருகங்களோடும், பிராணிகளோடும், தாவரங்களோடும் செக்ஸ்ஸினை  வைத்துக் கொண்டார்கள் எனப் பல பத்திரிகைகளில் வாசித்துள்ளேன். ஆனால் அவைகளை நான் ஒருபோதும் படமாகப் பார்த்ததில்லை.

கொடூரமாகக் குரைத்த நாய் இப்போது அவளது தொடைகளை நக்குகின்றது. அவளிடமிருந்து முனகல்கள். அவள் தனது இரு தொடைகளையும் மூடுவதில், ஆனால் நாயோ திறப்பதில்.

அவளது மூடல் இயற்கையானதா? செயற்கையானதா? இரு இயல்புகளிலும் இன்பம் இருக்கலாமென நான் நினைத்துக் கொண்டேன்.

கணங்கள் வேறு கணங்களைத் தேடியதுள் …. தொடைகளை நாய் பிரித்தது….  அவள் கத்தினாள்……  காதல் இன்பத்தை எமது நிலத்துக்கு வழங்கின அவளது கத்தல்கள்… இப்போது நாய் குரைக்கவில்லை. அவளது உடல் முழுவதையும் அழகாகத் தடவியது……

சூடாக இருந்தது படம்.

இந்தப் படத்தை எனது மனைவியோடு பார்க்கமுடியுமா? பார்த்தால் எனது தலை வெட்டப்படும். அவள் திருநீறு உருவாக்கப்படும் கோலங்களை நிறைய ரசிப்பாள். நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என அவளுக்குத் தெரியும். அவளது நம்பிக்கைகளை உடைத்தல் எனது நோக்காக இல்லாததால் எங்களுக்குள் அன்பு, காதல்…. பின்பு காமக் கலைகள்.

எனது இச்சை முறிபட்டது. பலகணி தரும்  முனகல்களால்.

போன் கத்தியது. படத்தைப் போஸ் இல் விட்டபின் போனைப்  பார்த்தேன். எனது மனைவியின் முகம்.

“மன்னிக்கவும்!” அவளின் சொல்லில் நடனமாடத் துடித்தது ஓர் இதம்.

“நீ ஏன் என்னிடம் மன்னிப்பைக் கேட்கின்றாய்?”

“அது உங்களுக்குத் தெரியும்….முனகல்கள் மீது சகுந்தலா என்னிடம் பேசினாள்……”

“நீ அவளுடனும் அவைமீது பேசிவிட்டாயா?”

“அவள் எனது மிகப் பெரும் சினேகிதி. அவளுடன்  எல்லாம் பேசலாம், ஆனால்  நான் எல்லாவற்றையும்  அவளுடன் பேசுவதில்லை. எங்களைவிட அவள் பெரிய வீட்டில் இருக்கின்றாள்.  அவளுக்குச் சில விசயங்கள் எங்களைக் காட்டிலும் தெரியும் என்கின்ற நினைப்பால்தான் முனகல்கள் பற்றிப் பேசினேன்…..”

“அவள் என்ன சொன்னாள்?”

“எங்களது பலகணியில் புறாக்கள் இருக்கின்றதா என்று கேட்டாள். பாருங்கள் தயவு செய்து……”

“சரி… பார்க்கின்றேன்…”  போனோடு மெல்லமெல்லமாக எனது கால்கள் பலகணியை நோக்கி… அறையின் வெளிச்சம் கொஞ்சமாக வெளியைக் காட்டும் என்பது என் நினைப்பு.

முனகல்கள் மெதுவாக.

திறக்கின்றேன்.

கதவுத் திறப்பின் சாதுவான ஒலியைக் கேட்டு, போரிற்கு முகம் கொடுப்பதைப் போல ஓடின…. அவைகள் வெள்ளைப் பறவைகள்…. பாரிஸ் பறவைகள். Pigeons de Paris.

இன்று… முதல் தடவையாக  என் முன், என் அருகில்  பறவைகள்…. நிறைய… அவைகள் ஓடுகின்றன. ஒலியைக் கண்டு பயமா? அல்லது எனது அசைவைக் கண்டு பயமா?  அவைகளது ஓட்டத்தால் விழுந்த சில சிறகுகள் பலகணித்  தரையில்…  சிறிதான  வெள்ளை  ஈட்டிகளாக என் விழிகளின் முன்.

நான் பறவைகளை விரும்பியதுண்டு…. ஏன்  இவை எனது பலகணியை விட்டு ஓடின? இவை என்னை விரும்பவில்லையா? சில சிறகுகளுடன் எமது படுக்கை அறைக்கு வந்தேன்…

எனது மனைவி போனில் இருக்கின்றாள் என்பதும் எனக்கு மறந்து விட்டது. அதனைப் பார்த்தேன். அவள் இல்லை.

மீண்டும் அடித்தேன்.

“பார்த்தீர்களா?” அது எனது மனைவியின் குரலாக இருக்கவில்லை.

“சகுந்தலா! உங்களது நினைப்பே சரி. அங்கு புறாக்கள் இருந்தன, திறந்ததும்  ஓடிவிட்டன.”

“நீங்கள் அவற்றை விரும்புபவர் என்பதை நான் அறிவேன்.”

“ஆனால் அவை ஓடி விட்டன. எனது தூக்கம் அழிபட்டு துக்கம் நெருக்குகின்றது.”

“உங்களது துக்கத்தின் காரணம் புறாக்களின் பிரிவாக இருக்கலாம்…. என நான் நினைக்கின்றேன்.”

“உங்களது  நினைப்புச் சரி…”

“உங்களுக்கு என்னுடன் பேச நேரமிருக்கிறதா?”

“மாலதியுடன்  நீங்கள் பேச நிறைய இருக்கலாம்…”

“அவள்தான் என்னை உங்களுடன் பேசச் சொன்னாள்….  ஓர் சிறிய கதை சொல்கின்றேன்… இதனைக் கேட்பீர்களா?”

“நான் உங்களது கதைகளை ஓர் வெளியீடுகளிலும் பார்த்ததில்லை.”

“கதைகள் வெளியீட்டு நிறுவனங்களின் அடிமைகளா?”

அவள் சொன்னதின் பிரகாரம்  எனது குழந்தைப் பருவத்தில் எனக்குக்  கதைகளைச் சொல்லித் தந்தவை வெளியீடுகள் அல்ல எனும்  நினைவு என் முன் வந்தது. எனது அம்மம்மாவும், அப்பாவும், அம்மாவும். இவர்களது கதைகளுக்குள் நான் வாழ்ந்தேன்.

“உங்களது கதையைச் சொல்லுங்கள்.”

பிக்காஸோவின் செவிகள் திறபடுகின்றன 

அவள் என்னிடம் கதை சொல்லும் முன்பு என் முன்னே  இளவரசிகளின் படங்கள். பார்வைகளால் கவ்வியவை. நிறையப் பெண்களைப் பார்க்கின்றேன்… அவர்கள்  இளவரசிகளாக இருக்கின்றார்கள்… இந்த விழி ரசிப்பில்லாமல் வாழ்வு என்னவாம்? குறைவு வாழ்வு! ரசிப்பையும் குறைப்பதா?

சில நாடுகளில் பெண்களைப் பார்க்கவே முடியாது. ஆம்! அவர்களது முகங்கள் முக்காடுகளுள் அடிமைகளாக உள்ளன  என்பது என் நினைப்பு. சில வேளைகளில் நிலவை உரித்து அதன் நிர்வாணத்தைப் புசிக்கும் எண்ணம் எனக்குள். இது எனது கவிதை வெறியின் துடிப்பான எண்ணமா?

வீதியில் கிடந்த ஓர் வெள்ளைப் புலவன் சில மாதங்களின் முன் என்னிடம் சொன்னான்: “ரசித்தல் புரட்சியின் எதிர் நோக்கு அல்ல.”

இவனது மொழி என்னுள் எப்போதும். இவன் தாடியில்லாத கிழவனாக இருந்தான். அவனோடு பேசவேண்டும் என்று எனக்குள் எப்போதும் விருப்பு இருந்தது. நான் பேசத்  தொடங்கிய  வேளைகளில் அவனது விழிகள் மூடப்பட்டபடி. அவனை நோக்கும் வேளையிலே ரசித்தல் என் முன் ஓர் வட்டமான படமாகும்.

அவள்…  அவளின் கதையைக் கேட்க எனது செவிகள்   பெரிதாகத் திறபடுகின்றன.

“எனது கதை பெரியது! நான் சுருக்கமாகவே உங்களுக்குச் சொல்வேன்.”

“இது இரவு நேரம். உங்களதும் எனது மனைவியினதும் விழிகள் தூக்கத்தால் முத்தமிடப்படலாம்… நான் சுருக்கமான கதைகளை வெறுப்பவன் அல்லன்.”

“தூக்கம் எங்களுக்குப் பிரச்சினையில்லை. நாங்கள் மீண்டும் நிறையப் பேசவேண்டும்…”

“வேறு நாளில் சொல்லலாமே?”

“இதை இந்தத் தினத்தில் சொல்வதுதான் என் விருப்பு…..  கேளுங்கள்….”

அவளது குரல்  எனது கதை ரசிப்பை ஊக்குவித்தது.

“எனது கதை இதுதான்… இது புறாவினதும், நான் பிரிந்த கணவனதும் கதையாக இருக்கலாம்….”

அவள் என்னைப் போலப் புறாக்களை விரும்புகின்றாளா? அவளா அவனா இந்த வெள்ளைப் பறவைகளை  விரும்பினர்? அல்லது இருவரும் அவைகளை விரும்பவில்லையா?

“நானும் அவரும் பெரிய கட்டிடத்தின் சில சிறு  அறைகளுள் தாம் ஒரு வருடம் வாழ்ந்தோம். பின்பு அவர் பேராசிரியர் ஆகியபின், நான் கேட்காமலேயே  பெரிய இருப்பிடத்தை எடுத்தார்… அங்கு பெரிய அறைகள்… நான் இப்போது சின்ன அறையுள்…,

“எமது அன்பு காதலில் தொடங்கியது. எனது சாதியும் அவரதும் ஒன்றல்ல. எமது சாதி எதிர்ப்பு எங்களது காதலில் உள்ளது. இந்த எதிர்ப்புகளில்தாம் எமது இதயங்கள் ஒட்டிக்கொண்டன. என்மீது அவர் சில கவிதைகளை எழுதியுள்ளார். அவை புரட்சிக் கவிதைகள்….”

சகுந்தலா எப்போது புறாமீது பேசுவாள் என்பதைக் கேட்க அவதியாக இருந்தேன்.

“புதிய இருப்பிடத்தின் முதலாவது பலகணிக் குரல்களை நான் கேட்டபோது காதுக்குள் இனிமை பாய்ந்தது. அவை புறாக்களின் குரல்கள். குளிர் தின மாலை நிறத்தை இருட்டெனப் புறாக்கள் கருதினவா? அவைகள் முனகின. இந்த முனகல்கள் எமது இரவு முனகல்கள் போல…  நான் பலகணியை மிகவும் ரகசியமாகத் திறந்தேன்… அவைகள்  ஓடிவிட்டன….,

“நான்  பலகணியில் நின்று இருட்டில் மறைந்த வெள்ளை நிறங்களை அவதானித்தேன். அவைகள் திடுதிப்பென ஓடியது  என்னைக் கவலைக்குள் தள்ளின…. நான் உள்ளே வந்தபோது அவர் என்னை முத்தமிட்டார்…

“சில கணங்களின் பின்னர் எமது பலகணிப் புறாக்கள்மீதும், அவைகள் வெளிப்படுத்திய முனகல்கள் மீதும், பின் எனக்குப் புறாக்களைப் பிடிக்கும் என்றும் சொன்னேன்….‘நல்ல விஷயம்’ எனும் பதில் அவரிடமிருந்து தூங்கலாக வந்தது….

“மறு நாள் நாம் கட்டிலுக்குச் சென்றோம்… ‘நீ பெரிய அழகி’ என்றார். இரவும் பகலும் என்னைப் பெருமைப் படுத்தும் போக்கு அவருக்குள்  உள்ளது. அந்தப் போக்கை நான் விரும்பாவிட்டாலும் வெளியே சொல்வதில்லை. இந்த இரவு என்னை எரித்தது. அவர் தூக்கத்தில். ஆம்! நான் அவரது உடலைத் தழுவினேன்… அசைவில்லை… பின் எனக்கும் தூக்கம்…..

“எனது தூக்கத்தை உடைத்தன முனகல்கள். பலகணியின் அருகில் மறைவாக நின்று புறாக்களின் தவிப்புகளைக் கேட்டேன். இந்தக் கணத்தில் எனது உடல் எரிந்தது. எனது கணவன் நான் கேட்கும் முனகல்களைக் கேட்கவேண்டும் என்ற வெறி… ஆம்! நாம்  புறாக்களாக ஆக வேண்டும்… முனகல்களைத்   தரவேண்டும்…

“உள்ளே வந்ததும்  முதலில் அவரது குறட்டையைத்தான்  கேட்டேன்.  எழுப்பவே முடியாது. அவரது இரவுகள் நிறையத்  தூங்குவதில் கழியும். அழிவன எனது உடல் விருப்புகள்……..”

அவளது கதை நீளமானது . அவளது துயரம் எனக்குள் பெரிய மழையின் கண்ணீராய் வீழ்ந்தன.

“அவருக்குப் புறாக்களில் விருப்பம் இல்லையா?” அமைதியாகக் கேட்டேன்.

“வேலைக்குப் போவதும், வருவதும், தனது ஆய்வு வேலைகளைக் கவனிப்பதும், பின் சாப்பிடுவதும், அதன் பின் ‘நீ அழகின் தேவதை’ என்றுவிட்டுக்  கட்டிலை முத்தமிடுவார். காமம் குடும்ப சாத்திரமாக உள்ளது என்பது அவருக்குத் தெரியாது. தூக்கமே அவரது மனைவி. அவரைப்  பிரியும் வரை அவர் பலகணிக்குள்  சென்றதில்லை. நான் இரவில் எனது  விருப்பத்துக்காகக் கத்துவதையும் அவர் கேட்டதில்லை……  உடல் அழியும்….. ஆனால் தற்காலிக இருத்தலில் அது  அழியவேண்டுமா?  மீண்டும் எனது பிரிவு மீது உங்களுக்குச் சொல்லவேண்டும் என நான் நினைக்கவில்லை.”

“நன்றி சகுந்தலா! உங்களது வாழ்வின் கொடுமையை விளங்க முடிகின்றது.  பிரிவின் பின் கொடுமையானது தனிமை வாழ்வு.”

“பிரிவு நீங்கள் சொல்வதுபோல கொடுமை. நான் இப்போது தனிமையில் இல்லை.”

“சிறப்பானது! நீங்களும் உங்கள் புதிய நண்பரும் எங்களது வீட்டுக்கு வரவேண்டும்…”

“புதிய நண்பரல்ல, நண்பி. அவள் இப்போது கனடாவில் தனது அண்ணனைக் காணச் சென்றுள்ளாள்!”

“அவள் வந்ததும் அவளுடன்  நீங்கள் எங்களது வீட்டுக்கு வரவேண்டும்!”

“மிகவும் நன்றி! வாழ்வு குறுகியது, எமது வாழ்வின் நிலைகள் பலவீனமானவை. நன்றி”.

தொடர்பு துண்டிக்கப்பட்டது

பிக்காஸோவும் பலகணியும் 

காலை 3 மணி போல இருக்கும். எனது மனைவியும் அவளது சிநேகிதியும் விடியும்வரை பேசுவார்கள் போல இருந்தது.

எனக்குள் களைப்பு.  என்னைத் தூக்கம் அழைத்தது.

ஓர் சிறிய முனகல்…… பலகணியில்….

புறாக்களின் முதல் தொடர்புகளில் படங்களை எடுத்தேன். இப்போது கமெரா தேவை இல்லை. அவைகளைப் பார்க்க விரும்பினேன்.

முனகல்கள் பெருத்தன.

நான் கதவின் முன்.

திறப்பதா?

அவைகளது காம சங்கீதங்களை எனது பார்வை கெடுக்கும்.

அமைதியாக நான் வீழ்கின்றேன் எனது கட்டிலில்.

எனது தூக்கத்தைத் தடவுகின்றன முனகல்கள்.

(பின் குறிப்பு: இந்த முனகல்கள் பின்பு கத்தல்களாகி  எனது நித்திரையையும் பல வேளைகளில் குழப்புகின்றன.)

 

தொடக்கம் பாரிஸ் 29/05/2006 22.02

முடிவு  10-07-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.