படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

வியூகம்-ஹேமா

நாங்கள் அந்த வீட்டைப் பார்க்கச் சென்றது வெளிச்சம் குன்றிய ஈரம் மிகுந்த நடுப்பகல் ஒன்றில்.  பலத்த மழை. வானிலிருந்து  ஒளியாய்  கிளைத்து பெருஞ்சத்தத்துடன் புரண்டு இறங்கும் சிங்கப்பூரின் இடிகளைப் பற்றி அறிவீர்கள் தானே!...

மொச்சை

சீத்தக் காட்டுத் தாத்தா செத்துவிட்டார் எனச் சேதி வந்தபோது குமராசு தூக்கத்திலிருந்தான். இரவு வேக்காடு தாங்காமல் வாசலில் கட்டில் போட்டுப் படுத்திருந்தவனுக்குச் சரியாகத் தூக்கமில்லை. மாட்டைக் கடித்து ரத்தச் சுவையில் சலிப்பேற்பட்ட சூலான்கள்...

பணத்தின் குழந்தைகள்

ஞாயிற்றுக்கிழமை மாலை.  சூப்பர் மார்க்கெட்டில் கூட்டம் அதிகமில்லை. இரண்டேயிரண்டு குளிர்ந்த டயட் கோக் டின்களை வாங்கி, பணம் செலுத்துவதற்காக நின்றிருந்த போது வாயிலுக்கு அருகே ஒரு முதிய பிச்சைக்காரரைப் பார்த்தேன்.  உள்ளே வருகையில்...

சாகிப்கிரான் கவிதைகள்

 நிகழ்வது கைவிடப்பட்ட இரட்டை முடிப்பு பலூன்கள் தைரியமாக வாகனங்களைத் தவிர்க்கப் பார்க்கின்றன. டூவீலர்களுக்கும் சைக்கிள்களுக்கும் காற்றிற்குப் பேராசைப்படாத விறைப்புக் குறைந்த ஜோடிகள் நழுவியபடியே சாதித்தன கடைசியாக ஒரு டிப்பர் லாரி பலூன் என்றால் வெடித்துவிட வேண்டுமா என்ன? பேரதிசயத்தைக் கடந்தபடி அந்த நாள் நிகழ்கிறது நினைவேக்கமாக. தூ...தூ... எல்லோரும் அன்பாகக் கேட்கிறார்கள்தான் பிறகு குறுகிய சந்துகளின் அரசாணிகள் அப்படியே அந்தப்...

தமிழ் நவீன கவிதையின் தொடக்கக் காலமும், நவீன கவிதைகள் குறித்த  புரிதலும்.

பாரதியும் அவருக்குப் பின்னர் வந்த  மணிக்கொடி, எழுத்து போன்ற பத்திரிக்கைகளையும் அதில்  எழுதிய ந.பிச்சமூர்த்தி, க.நா.சு, சி.சு.செல்லப்பா, கு.ப.ராஜகோபாலன், புதுமைப்பித்தன் போன்ற எழுத்தாளர்களும் கவிஞர்களும் நவீன கவிதைகளின் பிதாமகர்களாகக் கருதலாம். எழுத்து காலகட்டத்திற்கு...

செல்வசங்கரன் கவிதைகள்

பொன் நிற டிசைன்பண்டிகை தினத்தன்று இறந்தவன்துக்கத்தின் அளவை சிறியதாக்கினான்பெரிய பாறாங்கல் சிறிய கல்லாக மாறஒப்புக் கொள்ளாதுஅப்படி வேண்டுமென்றால் அங்கிருந்துநகர்ந்து செல்ல வேண்டும்துக்கத்திலிருந்து கிளம்பிஎல்லாரும் வெகுதூரம் சென்றனர்இறுதிஊர்வலத்தில் தான்அந்த நிகழ்வு எல்லாருக்கும் நடந்தேறியதுஒலியெழுப்பியபடி வானத்திற்குச்...

கரைவளர் நாதர்

“சிவாதிருச் சிற்றம்பலம்” “தில்லையம்பலம்” “ஹரஹர நமப் பார்வதீ பதயே” சிவ ராஜேஷின் குரல் வழக்கத்தை விடச் சத்தமாக ஒலித்தது. “பதயேஹ்ஹ்ஹ்” என்று நடுங்கிக்கொண்டே முடித்ததை உணர்ந்ததற்குச் சாட்சியாக “ஹரஹர மகாதேவா” என்று இன்னும் ஓங்கி ஒலித்தனர்...

ரோஜாப்பூக்கள்

 மொட்டைமாடியிலிருந்து ஒவ்வொரு கையிலும் ஒவ்வொரு பூந்தொட்டியை விளிம்பைப் பிடித்தபடி எடுத்துக்கொண்டு படியிறங்கி வந்தவனைப் பார்த்து “ஒனக்கு எதுக்குடா சுப்பையா இந்த வீண்வேல?” என்று கேட்டார் கந்தசாமி. ”தண்ணி ஊத்தி வளத்தவனே, செடியும் வேணாம், கொடியும்...

ஓங்குபனை-அருணா சிற்றரசு

இதுவரை யாருமே நடந்திடாத அன்றைய நாளுக்கான புதுப்புழுதியுடன் சுருளிலிருந்து விடுபட்ட பந்திப்பாய் போல விரிக்கப்பட்டிருந்தது அந்தக் குறுஞ்சாலை. பக்கவாட்டிற்குப் பனைமரங்களையும், தலைமாட்டிற்கோர் ஆலமரமுமாய் கிளைப் பாதைகளைப்  பரப்பிக் கொண்டு கீழ்த்திசையிலிருந்து இன்னும் கிளம்பாத...

மெட்ராஸின் சிவப்பு நிற பேரழகு கட்டிடங்கள்- 4

செத்த காலேஜும் உயிர் காலேஜும் கி.மு 280 ஆண்டுகளிலேயே அலெக்சாண்ட்ரியாவில் தாலமி மியூசியத்தை உருவாக்கினான். என்று வரலாறு சொல்கிறது. ஒட்டு மொத்த ஆசியாவிலும் அருங்காட்சியகங்கள் அமைத்த பெருமை வெள்ளையர்களையே சாரும், இன்று உலகத்திலேயே அதிக...