கதைகள்

சிறார் இலக்கியச் சிறுகதைகள்

அம்மா

"அப்பா...." குட்டி கரடி அழைத்தது. "என்னடா கண்ணு...?" அப்பா கரடி திரும்பியது. "அம்மா உயிரோட இருந்திருந்தா இப்படி என்னை பசியோட இருக்க வெச்சிருப்பாங்களா?" "அய்யயோ கண்ணே!  நீ என்னடா சொல்றே.?" அப்பா கரடி அழுத குட்டியின் கண்களை...

டப்… டப்… டப்…

காட்டிலிருந்த விலங்குகள் எல்லாம் சேர்ந்து, காட்டை இழுத்துப் பூட்டிவிட்டன. இனி மனிதர்களால் நுழைய முடியாது. வீட்டில் பூட்டுப்போட்டு பொருட்களைப் பாதுகாப்பது போல, காட்டைப் பாதுகாக்க வேண்டும் என்பது விலங்குகளின் நீண்ட கால ஆசை. அது...

சிங்கராஜாவின் விருந்து

அந்தக் காட்டில் சிங்கம், புலி, சிறுத்தை, நரி, மான், யானை என நிறைய நிறைய விலங்குகள்  இருந்தன. எத்தனை விலங்குகள் இருந்தால் என்ன? காட்டுக்கு ராஜா யார்?... ஆமாம். சிங்கராஜா தான் அந்தக் காட்டுக்கும் ராஜா. அன்று சிங்கராஜாவிற்குப் பிறந்த நாள். காடே திருவிழாக் கோலத்தில் இருந்தது. “பிறந்த நாள்... எங்க சிங்கராஜாவிற்குப் பிறந்த நாள்... நாங்க ஆடிப்பாடும் திருநாள்...” பெரிய பாறைக்குள் இருந்த சிங்கராஜாவின் அரண்மனையில் விலங்குகள் சந்தோசமாக ஆடிப்பாடிக் கொண்டாடின. வருடா வருடம் சிங்கராஜா அதன் பிறந்த நாள் அன்று எல்லா விலங்குகளுக்கும் பிடித்த உணவுகள் உடன் தடால்புடாலாக விருந்து வைக்கும். அதனால் தான் இந்த ஆட்டம் பாட்டம் எல்லாம். போன வருட விருந்தின் ருசி, இன்னும் விலங்குகள் நாக்கில் எச்சில் ஊர செய்தது. விருந்தில் நிறையச் சாப்பிட வேண்டுமென விலங்குகள் இரண்டு நாட்களாகச் சாப்பிடாமல் காத்திருந்தன. இறைச்சிகள், பழங்கள், காய்கறிகள், புற்கள் என வகை வகையாக உணவுகளின் விதவிதமான வாசம், மூக்கில் ஏறி பசியைத் தூண்டியது. சிங்கராஜா கம்பீரமாக...

துப்பறியும் பென்சில் – 9

துப்பாக்கிச் சண்டை  இரவு குறைந்த வெளிச்சம் கொண்டது. ஆனால், இந்த காந்தி மியூசியம் சாலை குறைவிலும் குறைவான வெளிச்சம் கொண்டது. இருளை விட சற்று கருமையான இடம் எனலாம்.  இந்த சாலை இரண்டு முறை ஆங்கில...

நட்சத்திர தேவதை

மதிய  உணவு இடைவெளிக்குப் பிறகு, பாண்டு சார் புவியியல் வகுப்பில் ‘நட்சத்திரங்களைப்’பற்றி பாடம்  நடத்திக் கொண்டிருந்தார். பாடம் நடத்தும் போதே, நட்சத்திரங்கள் குறித்த கற்பனையில் மிதந்து கொண்டிருந்தான் அருண். எப்படியாவது நட்சத்திரங்களைப் போய்...

ஸ்லதே என்னும் ஆடு-ஐசக் பாஷவிஸ் சிங்கர்

ஹனுக்கா* பண்டிகையின் பொழுது ஊரிலிருந்து நகரத்துக்கான சாலை பனி மூடியிருக்கும், ஆனால் இந்த வருடமோ குளிர் குறைவாக உள்ளது. ஹனுக்கா நெருங்கிவிட்ட போதிலும் பனி சிறிதளவே பொழிந்திருக்கிறது. பெரும்பாலான நேரம் சூரியன் ஒளிர்ந்தது. விவசாயிகள் வறண்ட...

நத்தை சேகரிப்பு

“நத்தைகள் சேகரித்தால் என்ன?”  ஸ்டானுக்குதான் இந்த அற்புதமான யோசனை உதித்தது. ஐந்து குழந்தைகள் உள்ள அந்த வீட்டில் சேகரிப்புப் பழக்கம் ஒன்றும் புதிதில்லை.  பிரவுன் தம்பதியைப் பார்க்க விருந்தினர் யாராவது அவர்களுடைய வீட்டுக்குப் போனால், நாற்காலியில்...

பொதுத்தேர்வு

அந்த  யானைக்குட்டியின் பெயர், யாங்கு.  அது சொன்ன செய்தி  எல்லாரையும் திடுக்கிட வைத்தது. “இந்த ஆண்டிலேர்ந்து, அஞ்சாம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு வரப் போவுதாம். முடிவே பண்ணிட்டாங்களாம்”. . “இனிமே தெனமும், நாம விளையாடவே முடியாதுல்ல,”...

சிக்குவின் கவலை

"அம்மா அம்மா.." என கூப்பிட்டது சிக்கு "சொல்லுடா செல்லம்! என்ன வேணும்?" வாஞ்சையோடு கேட்டது தாய் ரிங்கு. "அம்மா நாம இப்போ எங்க போறோம்?" மிக ஆர்வமாய் சிக்கு. "நாம நதிக்கரை வழியா வேறொரு காட்டுக்குப் போறோம்டா.."...

கபியா-ஹிமோ

  ஒருநாள் மூங்கில் வெட்டும் முதியவர் ஒருவர், மர்மமாக ஒளிரும் மூங்கில் தண்டு ஒன்றைப் பார்த்தார். அந்த தண்டை வெட்டும்பொழுது, அதில் ஒரு அழகான பெண் குழந்தை இருப்பதைக் கண்டார்.   அவருக்கும் அவர் மனைவிக்கும் குழந்தை...