ஞா.தியாகராஜன் கவிதை

எழுந்து வந்தோம்

அதன்பிறகு நான் யாருக்கும் லைனில் கிடைக்கவில்லை

இருபது வருடங்கள் கழித்து புதிதாகப் பிறப்பதில் சிரமமிருக்கிறது

அது சாவு போல இருந்தாலும்

நீ புறப்பட்ட தருணம் போல வலிக்கவில்லை

பத்து வருடங்களுக்குப் பிறகு கதவை திறக்கும்போது

எதிர் வீட்டில் நீ துணியலசிக்கொண்டிருக்கிறாய்

இத்தனை வயதுக்கு மேல்

நான் தனியாகதான் இருந்தாக வேண்டுமென  சொல்கிறார்கள்

வயதைக் குறைத்துக்கொண்டேயிருப்பது

எனக்கும் ஆயாசமாக இருக்கிறது.

 

Previous articleஇயர் ஜீரோ- தமிழ் நகைச்சுவை நாவலில் ஒரு புதுப்பருவம்  
Next articleசதி
Avatar
கனலி - கலை இலக்கியச் சூழலியல் இணையதளம். www.kanali.in
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments