தூரிகை


ந்த பட்டாம்பூச்சி வாழ்வை 

எவ்வாறு ரசிக்கின்றது 

காற்றில் மிதந்து கொண்டிருக்கும்

தும்பிகள் பட்டாம்பூச்சிக்கு வழிவிடுகின்றன 

வானிலிருந்த விழுந்த மழைத்துளி 

சிலையாகிவிட்ட பட்டாம்பூச்சியின் 

தவத்தினை கலைத்துவிட்டது 

பசிய காட்டில் 

திரியும் பட்டாம்பூச்சிகள் 

மனிதர்களையே பார்த்திருக்காது 

பச்சை போர்த்திய இவ்வுலகம் 

பட்டாம்பூச்சிகளுக்கானது 

கடவுள் தனது 

தூரிகை வண்ணங்களால் 

பட்டாம்பூச்சியை அழகுறச் செய்கிறார் 

மனிதன் சுதந்திரத்தின் 

ஆனந்தத்தை அனுபவிக்க 

பட்டாம்பூச்சியாகத்தான் 

பிறவியெடுக்க வேண்டும்!  


  • .மதியழகன் 
Previous articleட்ரான்ஸ் – ஒரு விமர்சனப் பார்வை
Next articleகாணிநிலம்
Avatar
கனலி - கலை இலக்கியச் சூழலியல் இணையதளம். www.kanali.in
Subscribe
Notify of
guest
1 Comment
Most Voted
Newest Oldest
Inline Feedbacks
View all comments
மயிலாடுதுறை ராஜசேகர்
மயிலாடுதுறை ராஜசேகர்
2 years ago

பட்டாம்பூச்சி கவிதை மிக அருமை சார்