Friday, Jan 22, 2021
Homeபடைப்புகள்கவிதைகள் (Page 4)

எழுந்து வந்தோம் அதன்பிறகு நான் யாருக்கும் லைனில் கிடைக்கவில்லை இருபது வருடங்கள் கழித்து புதிதாகப் பிறப்பதில் சிரமமிருக்கிறது அது சாவு போல இருந்தாலும் நீ புறப்பட்ட தருணம் போல வலிக்கவில்லை பத்து வருடங்களுக்குப் பிறகு

மலைக்குத் திரும்புதல் வரையாடுகளும் முள்ளம்பன்றிகளும் மலைமான்களும் கரடிகளும் தந்தம் பெருத்த யானைகளும் குதித்தாடும் மந்திகளும் கன்னிமார்சாமியும் செந்நிறஅந்தியும் பூக்கும் மலையில் பிறந்தேன் சுனையின் குளிர்ந்தநீர் என்னை பருவமாக்கியது இரண்டு குன்றுகளை ஈன்றெடுத்தேன் என் பிள்ளைகள் ஆடுகளை

தேர்ந்த விளையாட்டு வீரனின் சாயலில் வேல் கம்பையெடுத்து, முடி முளைத்த ராத்திரியென ஓடும் தடிபன்றியின் முன்னெஞ்சுக்கு குறிவைத்து எறிகிறேன். கூரினை நெளித்துப்போட்டு வேகமெடுக்கிறது. தலைக்கு வீசிய ஐந்தாறு வெங்காய வெடிகளுக்கும் பாய்ச்சல் குறையவில்லை. பின்னால் கேட்கும் குட்டிகளின்

செம்மந்தி கிழவி தனது விற்பனை மீன்களுக்குத் தானாகவே புதுப் பெயரிடுவாள் தரிசு தாண்டி சர்ச் போகும் வழியே அந்தக் கூடையை தூக்கித்தாவென்றாள் என்ன மீனென்று கேட்டேன் செம்மந்தி என்றாள் வித்தியாசமான பெயர் உச்சரித்துக்கொண்டே கரையில் நிற்கிறேன் அதைக் கேட்டதும்

1.) கெடாவெட்டுதல் இந்த வருடம் அவ்வீட்டில் நிச்சயமாய் ஒரு உயிர் போகுமென்கிறது ஒப்புக்கொடுக்காமல் நிற்கும் கிடா. முதியவருக்கோ இன்னும் கொஞ்சநாள் இருக்கலாமெனத் தோன்றுகிறது ஒருவேளை அது குறிப்பது  என்னைத்தானோ என பயத்திலொரு உதைவிட்டது வயிற்றிலிருக்கும் சிசு ச்சே…

வழித்துணை அனாந்தர ஊஞ்சலிலிருந்து தவறி விழுந்து ஓவென்று அழுகிற அவள் சின்னஞ்சிறுமி எம்பிக்குதித்து அவள் கன்னத்தை வருடும் செல்ல நாய்க்குட்டியின் வால்சுழட்டலில் வலி கரைந்தே போகிறது சதா கோபிக்கும் அப்பா தவறவிட்ட பொற்கணங்கள் முப்பது முக்கோடி அப்படி ரகசியங்களால் வளரும் சிறுமியின்

இந்தப் பறவைக்கு இந்த மலை புதிது சமவெளியில் அதற்கென இருந்த காடு மரங்களை அகற்றிய பிறகு எரியூட்டப்பட்டதும் பழகியிராத மலை நோக்கி உயரப் பறந்தது இறகுகள் ஒத்துழைக்கவில்லை மலையின் காலடியில் தனித்து நின்றது. —— இரண்டு பாறைகளை

திருவிருந்து விரல்கள் என நாம் நினைப்பவை நிஜத்தில் கோரைக் கிழங்குகள் கைகள் எனத் தரப்பட்டிருப்பவை நிஜத்தில் காட்டுக் காளான்கள் பயனில்லை அவற்றால் நேசிப்பவரைத் தொடும் போது இருப்பின் சிவப்பு மொத்தமும் விரல்களாகித் தொட வேண்டும் துடிக்கும் மூளைப் பிசுபிசுப்பைக் கைகளாகக்

காலுக்கடியில் பாதாளம். முறிந்த கிளையின் நிழலில் தொங்கும் என் சிறுபொழுது. --------- ஒரு கத்தியை செருகி வைக்க மற்றொரு கத்தியையே உறையாக்குகிறேன். --------- வாதிடாமல் குப்பைத் தொட்டியாக்குகிறேன் உன்னை. நீயும் ஒதுங்கியே நடக்கிறாய். --------- மெளனப் பந்தை உன்னிடம் உருட்டிவிடுகிறேன். அந்த விலங்கு உன்னை விளையாட்டாக்குகிறது. --------- இன்னும் கிழியாமல் கசங்காமல் ஒரு குழந்தை போட்டோ. அந்தப் பைத்தியக்காரன் வெய்யிலில்

இறக்கப்போகிறேன் எதனால் இறப்பேன் என்பதை அறிந்து விடுபடுதல் ஆகத்துயரம் உங்களிடம் சொல்லிப் போகிறேன் பிறந்து ஒருவாரமான பச்சிளம்குழந்தையை விட்டுப் போகிறேன். விரிசலில்லாத பழுத்தக் காதலை விரிந்த மேகத்தில் பதித்து மெல்ல மெல்ல கனிச்சாறு என் இதயத் திரட்சியில் கனக்கச் செய்த காதல்