பேய் உழும் கொல்லை
(“தங்க நகைப் பாதை” என்ற வெளியாகவுள்ள நாவலின் ஓர் அத்தியாயம்)
பெரிய முருகன் தண்ணீர் மோட்டாரை அணைத்துவிட்டு புங்க மரத்தடியில் உட்கார்ந்தார். கிணறு வற்றி அடியில் கரும்பாறைகள் புலப்பட்டன. நீண்ட நேரத்துக்குப் பின்தான் நீர்...