சிறார் இலக்கியம்

சிறார் இலக்கியம்

அரசுப் பள்ளி மாணவர்களின்  கதைகள்:

யானையும் வேட்டைக்காரனும் பா. கிஷோர் (எட்டாம் வகுப்பு) காட்டில் யானை ஒன்று வசித்து வந்தது. யானை  ஒரு குளத்தில் தினமும் நீர் அருந்த வரும். இதைப்பார்த்த வேட்டைக்காரன் அதை வேட்டையாடப் பார்த்தான்.  அதற்காக ஒரு பெரிய குழியைத்...

அன்பே உலகம்

கதாபாத்திரங்கள்: கலைச்செல்வி, அவளின் அம்மா, அப்பா இடம் :  கலைச் செல்வியின் வீடு. காட்சி 1   ( கலைச் செல்வி கையிலிருந்த  கேக் பொட்டலத்தை அப்பா முன் நீட்டுகிறாள்) அப்பா : ”எதுக்கு கேக்?” கலைச்செல்வி :  “உலகம் அழியாமெத்...

துப்பறியும் பென்சில் -3

      3.தெப்பக்குளம் அதிகாலை ஏழு மணி. மாரியம்மன் கோவில் அருகில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. அதுவும், இன்று மரியம்மன் கோவிலில் எந்த விசேசமும்  இல்லை. இன்று புதன்கிழமை வேறு. இதேநேரம் வெள்ளிக்கிழமை என்றால்  கூட்டம் அதிகமாக...

துப்பறியும் பென்சில் – 7

 7 - புலன்விசாரணை போலீஸ், தெருவில் நுழையும் காய்கறி கடைக்காரன், பால்காரன், அயன்வண்டிக்காரன், துணி துவைப்பவன் என ஒருவர் விடாமல் விசாரிக்கத் தொடங்கியது. அனைவரையும் வண்டியில் ஏற்றிப் போலீஸ் ஸ்டேசன் கொண்டுச் சென்றார்கள். தெருவில்...

ஸ்லதே என்னும் ஆடு-ஐசக் பாஷவிஸ் சிங்கர்

ஹனுக்கா* பண்டிகையின் பொழுது ஊரிலிருந்து நகரத்துக்கான சாலை பனி மூடியிருக்கும், ஆனால் இந்த வருடமோ குளிர் குறைவாக உள்ளது. ஹனுக்கா நெருங்கிவிட்ட போதிலும் பனி சிறிதளவே பொழிந்திருக்கிறது. பெரும்பாலான நேரம் சூரியன் ஒளிர்ந்தது. விவசாயிகள் வறண்ட...

சிங்கராஜாவின் விருந்து

அந்தக் காட்டில் சிங்கம், புலி, சிறுத்தை, நரி, மான், யானை என நிறைய நிறைய விலங்குகள்  இருந்தன. எத்தனை விலங்குகள் இருந்தால் என்ன? காட்டுக்கு ராஜா யார்?... ஆமாம். சிங்கராஜா தான் அந்தக் காட்டுக்கும் ராஜா. அன்று சிங்கராஜாவிற்குப் பிறந்த நாள். காடே திருவிழாக் கோலத்தில் இருந்தது. “பிறந்த நாள்... எங்க சிங்கராஜாவிற்குப் பிறந்த நாள்... நாங்க ஆடிப்பாடும் திருநாள்...” பெரிய பாறைக்குள் இருந்த சிங்கராஜாவின் அரண்மனையில் விலங்குகள் சந்தோசமாக ஆடிப்பாடிக் கொண்டாடின. வருடா வருடம் சிங்கராஜா அதன் பிறந்த நாள் அன்று எல்லா விலங்குகளுக்கும் பிடித்த உணவுகள் உடன் தடால்புடாலாக விருந்து வைக்கும். அதனால் தான் இந்த ஆட்டம் பாட்டம் எல்லாம். போன வருட விருந்தின் ருசி, இன்னும் விலங்குகள் நாக்கில் எச்சில் ஊர செய்தது. விருந்தில் நிறையச் சாப்பிட வேண்டுமென விலங்குகள் இரண்டு நாட்களாகச் சாப்பிடாமல் காத்திருந்தன. இறைச்சிகள், பழங்கள், காய்கறிகள், புற்கள் என வகை வகையாக உணவுகளின் விதவிதமான வாசம், மூக்கில் ஏறி பசியைத் தூண்டியது. சிங்கராஜா கம்பீரமாக...

தேஜஸ்வினி ஓவியம்

ஓவியம்: தேஜஸ்வினி ஒன்பதாம் வகுப்பு GGHS பள்ளி ஆத்தூர்

துப்பறியும் பென்சில் – 6

6.விடியல்    விடியலின் அறிகுறியாக இருள் மறையத் தொடங்கியது. பறவைகள் ஒலி எழுப்பத் தொடங்கின. பறவைகளின் ஒலியைக் கேட்டு வண்டுகள் ஓடி ஒளிந்தன. வெட்டிக்கிளிகள் இலைகளுக்குள் மறைந்து தங்களை பாதுகாத்துக் கொண்டன. ஒளி வெள்ளை நிற...

தேசிய நெடுஞ்சாலை

மாமாவின் கடைக்கு செல்வது செங்கனுக்கு ரொம்பவே பிடிக்கும். மாமாவின் கடை என்பது ஒரு தேநீர்கடை. அது தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கடைக்கு பின்னபுறமே வீடு அல்லது இரண்டையும் பிரிக்க முடியாது என்றும் சொல்லலாம்....

துப்பறியும் பென்சில் – 2 – தொடர் கதை

2.பென்சில் மனிதர்கள்   நட்சத்திரங்கள் பூத்த இரவு வானம்; நிலவு உலவும் பூங்கா வனம். நிலா மேகத்தினுள் முகம் மறைத்து நட்சத்திரங்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தது. சிறுவர்கள் பூங்காவில் அமர்ந்தபடி நிலவின் விளையாட்டை ரசித்தனர்.  வாட்ச்...