சிறார் இலக்கியம்

சிறார் இலக்கியம்

அடர்வனத்தில் நிகழ்ந்த அற்புதம்

தாத்தா, வண்டியில் மாடுகளைப் பூட்டினார். பூட்டாங்கயிரை, மாடுகளின் கழுத்தைச் சுற்றி வண்டியுடன் இணைத்தார். தாத்தா, தினமும் ஆனைமலை அடிவாரத்துக்கு மாட்டுவண்டியில் சென்று திரும்புவார். தென்னந்தோப்பில் தேங்காய், மாங்காய், புளி ஆகியவற்றைச் சேகரித்துக்கொண்டு சந்தையில் விற்று...

பச்சையும் சிகப்பும்

பச்சை கலர் தன் ஆசனத்தில் அமர்ந்திருந்தது. முதலில் வந்த வெள்ளை நிறம் “தலைவா வணக்கம்” என்று கும்பிடு போட்டது. ம்.ம் அங்கே போய் நில் என்றது பச்சை நிறம் திமிருடன். அடுத்து வந்தது...

பெரிய இடத்துப் பூனை (பிரெஞ்சு) சார்ல் பெரோ, தமிழில்- ஈஸ்வர்.

  ஒரு ஊரில் ஒரு தந்தை, தன் மூன்று மகன்களுடன் வசித்து வந்தார். அவருக்கு வயதாகிவிட்டதால், தன்னிடம் இருக்கும் சொத்தை எல்லாம் மகன்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிடத் தீர்மானித்தார். அதன்படி, மூத்தவனுக்கு தன்னுடைய மில்லையும், இரண்டாமவனுக்கு...

துப்பறியும் பென்சில்- 5

5.திருச்சி நோக்கி பயணம்              இரவு மணி பத்து. இருள் வீதியெங்கும் பரவி அச்சம் கொள்ளச் செய்தது. ஆங்காங்கே மின்மினிப் பூச்சிப் போல் ஒளிர்ந்து கொண்டிருக்கும் சோடியம் விளக்குகள் மனதளவில் தைரியம் தந்து கொண்டிருந்தன.  ஆனாலும்,...

தாந்தேயின் தரிசனம் ,எலிசபெத் ஹாரிசன் தமிழாக்கம்- தாமரைக்கண்ணன்

"தி டிவைன் காமெடி’ நூலுடன் தாந்தே அலிகியேரி அன்பு குழந்தைகளே, நான் இப்போது உங்களுக்கு ஒரு கதை சொல்லப் போகிறேன். இந்த கதை அறுநூறு வருடங்களாக இங்குச் சொல்லப்பட்டு வருகிறது. இன்றுவரை மக்கள் இந்த...

மமோதாரோ – பீச்பழச்சிறுவன்

முன்னொரு காலத்தில் வயதான ஒரு பெண் தன் துணிகளை துவைப்பதற்காக நதிக்கரையோரம் சென்றாள். அப்பொழுது அந்த நதியில் ஒரு பீச் பழத்தை கண்டு அதை எடுத்துக்கொண்டாள். தன் கணவரிடம் காண்பிப்பதற்காக அதை வீட்டிற்கு...

துப்பறியும் பென்சில் – 9

துப்பாக்கிச் சண்டை  இரவு குறைந்த வெளிச்சம் கொண்டது. ஆனால், இந்த காந்தி மியூசியம் சாலை குறைவிலும் குறைவான வெளிச்சம் கொண்டது. இருளை விட சற்று கருமையான இடம் எனலாம்.  இந்த சாலை இரண்டு முறை ஆங்கில...

துப்பறியும் பென்சில் – 7

 7 - புலன்விசாரணை போலீஸ், தெருவில் நுழையும் காய்கறி கடைக்காரன், பால்காரன், அயன்வண்டிக்காரன், துணி துவைப்பவன் என ஒருவர் விடாமல் விசாரிக்கத் தொடங்கியது. அனைவரையும் வண்டியில் ஏற்றிப் போலீஸ் ஸ்டேசன் கொண்டுச் சென்றார்கள். தெருவில்...

பாட்டி சொன்ன கதை ஐசக் பாஷவிஸ் சிங்கர் தமிழாக்கம்- சக்திவேல்

டிரைடல் ஒரு உற்சாகமான விளையாட்டு தான். ஆனால் இரவு நேரமாகி விட்டது, எல்லோரும் படுத்துத் தூங்குங்கள் என்று லியா பாட்டி சொன்னார். உடனே, எங்களுக்குக் கதை சொல்லுங்கள் பாட்டி என்று பேரக்குழந்தைகள் கெஞ்சினார்கள். ஒருகாலத்தில்...

நட்சத்திர தேவதை

மதிய  உணவு இடைவெளிக்குப் பிறகு, பாண்டு சார் புவியியல் வகுப்பில் ‘நட்சத்திரங்களைப்’பற்றி பாடம்  நடத்திக் கொண்டிருந்தார். பாடம் நடத்தும் போதே, நட்சத்திரங்கள் குறித்த கற்பனையில் மிதந்து கொண்டிருந்தான் அருண். எப்படியாவது நட்சத்திரங்களைப் போய்...