க.மோகனரங்கன் கவிதைகள்

1)புகல் பகல் வெளிச்சத்தில்சற்றே துலக்கமாகவும்ஆற்றவியலாத துயரமாகவும்சுமக்கமாட்டாத பாரமாகவும்தோன்றும்எனது தோல்விகள்,இயலாமைகள்,ஏக்கப் பெருமூச்சுகள்எல்லாவற்றையும்மறைத்துக் கொள்ளவோஅல்லதுமறந்தாற்போலஇருந்துவிடவோ முடிகிறஇந்த இரவுதான்எவ்வளவு ஆறுதலானது?உந்தன்கண்மைக் கருப்பிலிருந்துபிறந்து,கார்குழல் சுருளுக்குள்வளரும் இருள்தான்என் மருள் நீக்கும்மருந்து. 2) மிச்சில் உன்னொடுஇருந்த பொழுதில்மறந்த காலம்முழுவதும்உன்னைப்பிரிந்த பிறகு,ஒன்றுக்குப் பத்தாகத்திரண்டுபூதவுருக் கொண்டுஎழுந்து வந்து,இருந்தாற் போல்இருக்கவிடாமல்மருட்டுகிறது.உறக்கம்...

புல்லட் ஓட்டும் பெண்

இந்த சிறுநகரத்தில் தன் பத்தொன்பதாவது வயதில் தந்தையின் செல்ல இளவரசி புல்லட் ஓட்டத் தொடங்கினாள் தொப்பி ஹெல்மெட் அணிந்து கருங்கூந்தல் காற்றில் பறக்க அவள் அனாயசமாக ஓட்டுவதில் அதிர்ச்சியடைந்த சிறுநகரம் கேட்டது ஸ்கூட்டி ஓட்டும் பெண்களுக்கு புல்லட் எதற்கு? ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் தவித்த நகரத்தின் நெஞ்சத்தில் அனுதினமும்...

ஜீவன் பென்னி கவிதைகள்

பிரபஞ்சத்தின் கதைகளை சிறிய வெளிச்சத்தில் பின் தொடர்தல் 1. ஞானம் தனது பகுப்பாய்வைத் தொடங்கும் போது இப்பிரபஞ்சம் ஒரு சிறிய புள்ளியைப் போலிருக்கிறது. முடிகின்ற போது நாம் பார்த்துக்கொண்டிருப்பதைப் போல் மிகப்பெரியதாக இருக்கிறது. 2. இந்தச் சாலைகள் முடிவற்றவை நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்காகவே இப்பட்டாம்பூச்சிகள்...

தாமரைபாரதி கவிதைகள்

சோதனை 1. என்னைச்சோதனை செய்து பார்க்க,பரி சோதனை செய்து பார்க்க,சுய பரி சோதனை செய்து பார்க்க,என்னைத் தவிரச்சோதனை மாதிரிவேறு எது/யார்இருக்க முடியும் 2.இன்ப துன்பியல்நாடகம் இதுஇரு வேளைஇரு உணர்வுபோவதும் வருவதும்இல்லவும் உள்ளவும்ஒன்றே 3.பவளமல்லிகை உதிர்கிறதுஇளஞ்சிவப்புச் செம்பருத்தி மலர்கிறதுஒன்றில் நாற்றம்ஒன்றில்...

தன் கல்லறையில் புரண்டு படுத்தார்

பொறியாளர் ஹென்றி வில்லியம்ஸ் தான் 1878 அந்த வாய்க்காலை வடிவமைத்தார். அரசு அதை செலவு பிடித்த திட்டமென நிராகரித்தது. 187 கி.மீ நீள வாய்க்கால் அது. விடாப்பிடியாக போராடி வாய்க்காலை நிகழ்த்தினார் வில்லியம்ஸ் கட்டி முடித்த ஆண்டிலிருந்து மூல நதியில் வெள்ளம் பெருக்கெடுக்கவேயில்லை. அந்நூற்றாண்டில் செலவு கூடிய வீணான திட்டமென பொருளியல் வல்லுனர்கள் அதை சொல்வதுண்டு. William's waste என்றொரு புதிய...

ச.துரை கவிதைகள்

செம்மந்தி கிழவி தனது விற்பனை மீன்களுக்குத் தானாகவே புதுப் பெயரிடுவாள் தரிசு தாண்டி சர்ச் போகும் வழியே அந்தக் கூடையை தூக்கித்தாவென்றாள் என்ன மீனென்று கேட்டேன் செம்மந்தி என்றாள் வித்தியாசமான பெயர் உச்சரித்துக்கொண்டே கரையில் நிற்கிறேன் அதைக் கேட்டதும் கடல் தனது உடலை பாத்திரத்தைப் போல...

அழுகைக்கு மார்பை திருப்புதல்

இந்த வாழ்வில் என்ன இருக்கிறதென தேடினேன் என்னோடு ஒரு மருத்துவச்சியும் தேடினாள் அப்போதுதான் முதன்முறையாக சுடரைப் பெற்றெடுத்துக்கொண்டிருந்த பெண்ணுறுப்பை பார்த்தேன் அச்சு அசல் அது மாடத்தில் விளக்கெரிவதை ஒத்திருந்தது நெல்லிக்கட்டையூரிய இனிப்புக்கிணற்றின் தண்ணீரை கைகளில் அள்ளினேன் அதன் முதல் சுவாசம் பின்னப்பட்டது ஆகாசமயத்தோடு வலியும்...

முத்துராசா குமார் கவிதைகள்

1) வில்லிசைக்காரி இறந்து முப்பது கடந்தும் 'உன்னை ஒரு நாள் பார்க்க வருவேன்' என்ற அவளது குரலே கனவை நிறைக்கிறது. திண்ணையின் முக்கோணக் குழியைச் சுத்தப்படுத்தி கிளியாஞ்சட்டியில் நீரும் பருக்கையும் வைத்து தினமும் காத்திருப்பேன். மரத்தாலோ கல்லாலோ மண்ணாலோ வீசுகோல்களை செய்துவிடலாம். அவளது கரங்களை எதைக்கொண்டு செய்வதென்பதுதான் பதட்டத்தைக் கூட்டுகிறது. நரைமுடிகளின் நுனி நீர்...

காணாமல் போவது எத்தனை வசீகரமானது.

தினம் தினம் எத்தனையோ பேர் காணாமல் போகிறார்கள் குழந்தைகள் முதியவர்கள் பெண்கள் மனநிலை சரியில்லாதவர்கள். காணவில்லை விளம்பரங்கள் செய்தித்தாள்களில் தொடர்ந்து வருகின்றன.   அவள் மட்டும் தொலைவதே  இல்லை எங்கு போனாலும் வழி தெரிந்து விடுவது கொடுந் துயரம். காணாமல் போகக்கூட ஆணாக வேண்டும்   தொலைவதற்கு முன்பான முன்னேற்பாடுகளின் பட்டியல் நெடுஞ்சிகை மழித்தல் காயம் முற்றும் மூடும் காவி ருத்ராட்ச மாலை திருவோடு அணங்கெனும் அடையாளம் அழிந்தோர் யாக்கை ஏதோவொரு...

நேசமித்ரன் கவிதைகள்

சீசாச் சில்லுகள் சக்கர நாற்காலியொன்று நகரத்தின் மழைக்கும் சாலையை தன்னந்தனியாக கடந்து வீடு சேர்வதாய் ஓர் மன்னிப்பு திமிரின் சீசாச்சில்லுகள் பதித்த சுவர்களை பூனையின் பாதங்களுடன் கடந்து உன் அழும் முகம் அருகே நிற்கிறது கண்ணாடிக் கூம்புக்குள் எரியும் சுடர் மிக நெருங்கின மூச்சுக்கு...