இன்பா கவிதைகள்

1)நாடு மாறி நான் சிவப்புக் காதோலை கருப்பு வளையல் ஏழைகளின் ஆப்பிள் பேரிக்காய் களக்கக் கட்டிய பூச்சரங்களென பிரப்பாங்கூடையில் எடுத்துச்சென்றுக் காவிரிக்கரையில் முழு ஆடையோடு முழுகி வெண்மணலைத் தாம்பாளங்களில் அள்ளிக்கொண்டு கரையேறும் கட்டுக்கழுத்திகள் படுகையில் வாசல் வைத்த நீள்சதுர வீடு கட்டி மஞ்சள் தோய்த்தச் சரடைக் கழுத்தில் கட்டி முடித்தபின் முகூர்த்த மாலைகள் ஆற்றில்...

அனார் கவிதைகள்

நீங்குதல் எறும்புகள் பகல் கனவுகளை மொய்க்கின்றன பின் இழுத்துச் செல்கின்றன. தாரை தாரையாக உருகிக் கரிக்கின்ற உப்புத்துளிகளை காயங்களில் இருந்து குடைந்து எடுத்துச் செல்கின்றன மணல் புற்றுகளின் களஞ்சியங்களுக்கு குருத்தெலும்புகளை அரித்துக் கொண்டிருந்த வெறுமையின் உதிரத்தை மணந்து ஒன்றுக்கொன்று கனவுக்குள் சம்பாஷித்துக் கொள்ளுகின்றன தனக்குத்தானே தூபமிடும் வசியமறிந்தவர்கள் அறிவார்கள் காலத்தை தூவி...

பா.ராஜா கவிதைகள்

உறங்கும் ஒருவன். அதிகாலை 4:43, எழுப்புகிறது எழு ஒரு சேதி சொல்ல வேண்டுமென்று காதோரம் கிசுகிசுக்கிறது ஆர்வம் மேலிடவில்லை ஒரு வீட்டை திடீரெனக் காணவில்லை பார் என்கிறது அதற்கும் அலட்சியம் தொலைந்த அந்த வீட்டில் தொங்கும் ஹோல்டரில் உன்னை காலத்திற்கும் தொங்கவிடப்போகிறேன் என்ற போதும் கூட அச்சமோ...

உமா மகேஸ்வரி கவிதைகள்

சூரியன் ஒளிரும் திரைகள் வாகன கீதம் நொறுங்கிய வளர் பிறை பத்திரமாயிருக்கிறது மல்லிகைச் சரத்தருகே இருள் தித்திக்கும் மரங்கள் சோம்பல் முறிக்கும் காலை அங்கே ஏனோ பூக்காத மஞ்சள் மலர்கள் இங்கே எங்கெங்கும் பூத்துக் கிடக்கின்றன...உடைந்த ஒரு மனதில் சிராய்தததோ ஒரு  சொல் சிலாம்பு துடைத்தும் போகாதது. இம் முறை ஒரே...

நகுலனின் வளர்ப்புக் கிளிகள்

1] நகுலன் வீட்டில் தரை வீழும் கண்ணாடிக் கோப்பைகள் உடைந்து நொறுங்குவதில்லை. 2] நகுலன் வீட்டில் யாருமில்லை. பூனைகள் பாதயாத்திரை போய்விட்டன. 3] நாலங்குலம் பாசம் காட்டும் மனிதர்களைவிட நாய்கள் மேல் என்பது நகுலன் வாக்கு. 4] மதுக் குப்பிகள் இல்லாத நகுலன் வீட்டில் கவிதை காணாமல் போய்விட்டிருந்தது. 5] புறவாசல் வரை வரும் சுசீலா நகுலன் வீடேகுவதில்லை. விந்தைதான் ரோகிகள் சூழ்...

அதிரூபன் கவிதைகள்

1. நொய்யல் ஆறே நொய்யல் ஆறே (அ) தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி வாசனை மரங்கள் நீரில் பேசிவரும் ரகஸிய மூச்சின் இழை அதன் நாமத்தை அழைக்கும் உடம்பின் உப்பு சிற்றாற்றுப் பொடிகளை உணவில் தூவி காட்டைத் திரிக்க பெரிய...

நேசமித்ரன் கவிதைகள்

சீசாச் சில்லுகள் சக்கர நாற்காலியொன்று நகரத்தின் மழைக்கும் சாலையை தன்னந்தனியாக கடந்து வீடு சேர்வதாய் ஓர் மன்னிப்பு திமிரின் சீசாச்சில்லுகள் பதித்த சுவர்களை பூனையின் பாதங்களுடன் கடந்து உன் அழும் முகம் அருகே நிற்கிறது கண்ணாடிக் கூம்புக்குள் எரியும் சுடர் மிக நெருங்கின மூச்சுக்கு...

அர்ஜூன்ராச்-கவிதைகள்

1மதிப்பிற்குரிய கல்லாப்பெட்டி அவர்கள்...தன் கண்டடைதல்களைமேல் கவனிப்பிற்குக் கொண்டுசெல்ல"நீங்கள் தான் சரி" யெனயாரை அழைப்பு விடுப்பதுயாரிடம் கத்திரியைக் கையளிப்பதுமற்றும்ரிப்பன் வெட்டித்தொடங்கச்செய்வதுதொடங்கிவைக்க ஒருவர் கிடைத்துவிடுகிறார்ரசனைகளை அளவளாவிச் சுற்றிச் சுற்றிப் பார்த்துவிட்டுநேரே கல்லாப்பெட்டியிடம் செல்கிறார்.(தொடக்கத்திலேயே இன்னமும் வாழ்ந்து...

கார்த்திக் திலகன் கவிதைகள்

 நன்றி ஒட்டகத்தின் கால் கொண்டு நடக்கிறேன் என் பாதை எங்கும் மணல் மணலாய் எழுத்துக்கள் எழுத்துக்களைக் கொண்டு இவ்வளவு பெரிய பாலைவனத்தை உருவாக்கிய என் முன்னோர்களுக்கு நன்றி எழுத்தின் மேல் நடக்கும் ஒட்டகமாக என்னைப் பெற்றெடுத்த என் தாய்தந்தைக்கு நன்றி எல்லாப்...

ஜீவன் பென்னி கவிதைகள்

வேகமாக வளர்ந்துவரும் கரங்களின் வெம்மைகள் சிறிய சிரிப்பில் அதிகாரத்தைக் கடந்து செல்வதற்குப் பழகியிருந்தவர்கள், ஒரு போருக்கு முன்பாகத் தங்களது உடைகளை உலர்த்தி அடுக்கி வைத்துக்கொள்கின்றனர். * கொடூர கணங்களை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள், போர் துவங்குவதற்குச் சற்று முன்பாகத் தங்களது உடல் முழுவதும் குண்டுகளைச்...