நிகழ்வது கைவிடப்பட்ட இரட்டை முடிப்பு பலூன்கள் தைரியமாக வாகனங்களைத் தவிர்க்கப் பார்க்கின்றன. டூவீலர்களுக்கும் சைக்கிள்களுக்கும் காற்றிற்குப் பேராசைப்படாத விறைப்புக் குறைந்த ஜோடிகள் நழுவியபடியே சாதித்தன கடைசியாக ஒரு டிப்பர் லாரி பலூன் என்றால் வெடித்துவிட வேண்டுமா என்ன? பேரதிசயத்தைக் கடந்தபடி அந்த நாள் நிகழ்கிறது நினைவேக்கமாக. தூ
சற்று முன்பே பார்த்துவிட்டேன் உடம்பு முடியாமல் கிடக்கிற அவனுடைய வீட்டிற்குப் போகிற வழியில் உதிர்ந்து என் மீது விழுந்தது பழுத்து, பச்சைக் காணாது போய் நடுநரம்பில் கடமைக்கென ஒட்டி இணைந்திருக்கும் கிளை நரம்புகளைக் கொண்டதொரு இலை. அதை உதறிவிட்டு நடந்து நடந்து இந்தக் கதவைத் தட்டினேன் இருமியபடி சட்டை அணியாமல் கதவைத்
1. சதுர வடிவப் பானையாய் மெல்ல அசைந்துகொண்டிருந்தது வீடு. கையறு பாடல்களின் புளிப்பு ஊறிப் பெருகி பழங்கஞ்சியாயிருந்தது. சோற்றுப் பருக்கைகளைப்போல குழந்தைகள் நீந்திக் களித்தனர். வெளுத்தத் துணிகளின்மேல் எச்சமிடும் காகங்கள் மீன் செவுள்களையும் கோழிக் குடலையும் பானையின் தூரில் மறைத்துச் சென்றன. மரத்தடி தெய்வங்கள் கனிந்தனுப்பிய எலுமிச்சம்
பூனை விந்தி நடக்கிறது பூனை தவறுதலாக கால் ஒன்றை குறைச்சலாக்கி வரைந்துவிட்டேன். எங்களுக்குள் இயல்பாகியது அது முறைப்பதும் நான் மன்னிப்பு கேட்பதும். விரையும் வேறு பூனை பார்க்க அதன் கண்கள் நெருப்பாகிடும் அப்பொழுது கிண்ணத்தில் பாலை நிரப்பி அமைதி காத்திடுவேன். இன்று மறக்காமல் வரைபடத் தாள்களையும் எழுது
அவளொரு வயலினிஸ்ட் பெண்மையின் பொருள்படும் நிழலும் அன்பு திரண்ட கனியுமாக தன்னை மூடிக்கொள்ளாத அம்மரம் எப்போதும் திறந்திருந்தது கன்னி மரியாவைப் போல அவளுடைய கண்களின் ஆழத்தில் எப்போதும் இரக்கத்தின் சொல்
இலைகளற்றக் கிளைகளில் விளையாட யாருமற்ற கிரணங்கள், நிறங்களைத் துறந்து தியானித்து உக்கிர வெண்மையை ஓலமிடுகின்றன நிறங்களின் வெறுமையில் நிறையும் வெண்மையில் திசையெங்கும் பிரதிபலித்து மீண்டு வந்து சேரும் மேலும் சிறிதளவு வெண்மை. தனிமையின் விடமேறி நீலம்பாரித்து நிற்கும் வானம் மேகங்கள் அற்று மேலும் வெறுமை கூட நீலம் அடர்கிறது.. பனி பூத்து பனி
1. பரபரப்பு மிகுந்த இந்த வாழ்வில் ஏதோவொரு சாலையின் ஓரத்தில் காத்திருக்கிறான் கல்யாணசுந்தரம் சிக்னலின்/ வாழ்வின் பச்சை விளக்கிற்காக. அது விழுவதாயில்லை மாறாக, சட்டைப் பாக்கெட்டிற்கு சற்று மேலே விழுகிறது ஒரு பறவையின் எச்சம் எப்படியோ, பறவைக்குத் தெரிந்திருக்கிறது விரிசலடைந்த இடங்களை! 2. தற்கொலைக்குத் துணிந்தவனின் ஒரு சாயங்காலப் பொழுது: வெகுநேரமாக் கவிழ்ந்து படுத்தபடியே இருக்கிறேன் உடலுக்குள்
அமைதியான அந்தக் காலைநடையில் அவர் சென்றுகொண்டிருந்தார் எல்லாம் முடிந்துவிட்டது. இனி செய்வதற்கு ஏதுமில்லை என்பதுபோல்! இதுதான் இதுதான் அந்தச்செயல் என்பதுபோல்! மிகச்சரியான பாதை ஒன்றைத் தேர்ந்தெடுத்துவிட்டவர்போல்! அந்தக் காலையையும் அந்தப் பாதையையுமே தாண்டி அந்த நடைமட்டுமே ஆகிவிட்டவர்போல்! இவைபோலும் எந்தச் சொற்களாலுமே தீண்ட முடியாதவர்போல்! எங்கிருந்து வருகின்றன எங்கிருந்து
காலம் இங்கே காலம் மூன்றல்ல; ஒன்றே ஒன்று காலங்களுக்கு அப்பாலான காலம் இங்கே இன்று பிறந்த இன்றும் நாளை பிறக்கும் நாளையும் பிறந்ததுமே இறந்த காலத்துக்குள் ஒடுங்குகின்றன இங்கே அன்றாடம் உதிக்கும் சூரியன் முதன்முதல் உதித்ததுபோலவே உதிக்கிறது முதன்முதல் மறைந்ததுபோலவே மறைகிறது இங்கே காற்றில் எம்பும் புழுதிச்சுழலில் யுகங்களுக்கு
கம்மா காய்ந்த தென்னம்பாளைப் பிளவுக்குள் தனித்தனி மழைகள் சேர்ந்து தேங்கியது படகினுள் மிதக்கும் சமுத்திரமென தெரிந்தது. தளும்பும் சமுத்திரக் குட்டியென்று எனது கையின் பதினோறாவது குறுவிரல் வியப்பானது. பாளையை மாதிரியாக வைத்து சந்ததித் தொடர்ச்சியாய் வெட்டாத நகங்களால் சமுத்திரத்தின் குட்டியான கம்மாவைத் தோண்டினேன். கருவாச்சி மடை கொடியறுக்காத