Tuesday, November 28, 2023

Tag: கவிதைகள்

ஆனந்த்குமார் கவிதைகள்

சில்லறை ஒரு பெரியரூபாய் நோட்டு மொத்தமும்சட்டென உடைந்துசில்லறைகளாய் மாறிவிட்டதைப்போலஒரு சின்னத் தடுக்கல்அந்த ஆளுயரக் கண்ணாடியைப்பிரித்துவிட்டதுஆயிரம் சின்ன கண்ணாடிகளாய்.ஒவ்வொரு சில்லிலும்இப்போது தெரிவதுஒரு குட்டி மிட்டாய்.சுவைத்துச் சுவைத்தாலும்ஒரு மிட்டாயின் ஆயுள்குறைந்தது இரண்டு நிமிடங்கள்.அவனது ஆளுயரம் இப்போதுஇரண்டிரண்டு குட்டி...

இன்பா கவிதைகள்

தையல்காரர்கள் வீதி நடைபாதையின் ஓர் ஓரத்தில் அமர்ந்திருக்கிறார்கள்கால் விரல்கள் தன்னிச்சையாய்மிதித்துக்கொண்டே இருக்கின்றனபெரும்பாலும் புதுத்துணிகளையேதைக்க விரும்புகிறார்கள்பழைய கிழிந்துபோன துணிகளையாரும் தைக்கக் கொடுப்பதில்லையாரும் தைத்துப் போடுவதையும் விரும்புவதில்லைநறுக்கிப்போட்ட வானவில்லாய்வார்த்தைத் துணிகள் வெட்டப்பட்டுசுற்றிலும் சிதறிக் கிடக்கின்றனதலைக்கு மேலே மெதுவாக...

ராஜன் ஆத்தியப்பன் கவிதைகள்

நோவின் தூல வடிவம் காற்றில் புதையும் ஊத்தைச் சொற்களின் பிடிமண்ணை வாரி வீசுகிறது முதிர்காமம். பச்சைக் கூட்டத்தினிடையேவலியின் இளங்குருத்து தனித்து எரிகிறது. நெருப்பைப் பழிவாங்குவதற்கெனபொழிவித்த பெருமழையெல்லாம்அம்பல முற்றத்திற்கு வெளியேஅடங்கிப் போயின. அத்தாணி மண்டபத்தில்காய வைத்திருந்தஉறக்கப் போர்வைகளை உலர விடாதுமடித்து...

பூவிதழ் உமேஷ் கவிதைகள்

1. நிலமும் பொழுதும் பழைய உயிரினம் நரிவால் என்று செல்லமாக அழைக்கும் தினையும் கம்பும் பாலேறினால் காவலுக்குச் செல்லும் நான் கிளிகளையும் கட்டை விரல் சிட்டுக்களையும் விரட்டுவதற்குச் சலித்துக்கொள்வேன் இரவைவிடப் பெரிய விலங்கு பகலென்று  பொருமுவேன். தையல்சிட்டுக்களோ எருக்கம் விதைகள் போலக் காற்றில்...

பா.ராஜா கவிதைகள்

நிலுவை ஏமாற்றிடஎண்ணமில்லை.நம்பிக்கொடுத்தவர் முன்நாணயம்அரூபமாய்ச் சுழன்றுதள்ளாடுகிறது.தாமதம் வேண்டாம் எனரீங்காரமிடுகிறதுஇரவுப்பூச்சி.வாகனமில்லையேஎன்றதும்கால்கள் இருக்கிறதேஎன்கிறது.காலணி இல்லையேபாதங்களை விடச் சிறந்த காலணி ஏது.கால்களில் பெரு நோவுகைகள் இருக்கிறதே.கைகளால் எப்படி?சரி விடுசரீரத்தைப்பயன்படுத்துசாலையில் உருட்டு. • வட்ட வடிவப்பாதை விருப்பம்விருப்பமில்லைஎன்பதற்கெல்லாம் மாறாகமுந்திச்செல்லபின் சக்கரத்தால் எப்போதும் முடிவதில்லைஎன்பதே நியதிஇருந்தும்அதுதன்னை முந்தவேஇத்தனை வேகமாய்ச்சுழல்வதாய்...

ஜீவன் பென்னி கவிதைகள்

வேகமாக வளர்ந்துவரும் கரங்களின் வெம்மைகள் சிறிய சிரிப்பில் அதிகாரத்தைக் கடந்து செல்வதற்குப் பழகியிருந்தவர்கள், ஒரு போருக்கு முன்பாகத் தங்களது உடைகளை உலர்த்தி அடுக்கி வைத்துக்கொள்கின்றனர். * கொடூர கணங்களை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள், போர் துவங்குவதற்குச் சற்று முன்பாகத் தங்களது உடல் முழுவதும் குண்டுகளைச்...

கலாமோகன் கவிதைகள்

ஏன் தவம்?  இனி நான் தவங்கள்செய்யப்போவதில்லைஎமது யுகங்கள் அனைத்திலும்தூசிகள்தாம் வீடுகளைமூடும்போது… ஏன்தவம் செய்ய வேண்டும்?இனி என்னிடம்காடுகளிற்குப்போகும் எண்ணங்களும் இல்லை…கருகிய மலர்களுடன் உள்ளமரங்களைக் காணவா?மரணித்த மிருகங்கள்மேல் நடக்கவா?குடிசைகளை நோக்கிநான் விரைந்தேன்அவைகள் எரிந்து தூள்களாகி…எனது கண்ணீர்கள் மட்டும்பல...

சாகிப்கிரான் கவிதைகள்

 நிகழ்வது கைவிடப்பட்ட இரட்டை முடிப்பு பலூன்கள் தைரியமாக வாகனங்களைத் தவிர்க்கப் பார்க்கின்றன. டூவீலர்களுக்கும் சைக்கிள்களுக்கும் காற்றிற்குப் பேராசைப்படாத விறைப்புக் குறைந்த ஜோடிகள் நழுவியபடியே சாதித்தன கடைசியாக ஒரு டிப்பர் லாரி பலூன் என்றால் வெடித்துவிட வேண்டுமா என்ன? பேரதிசயத்தைக் கடந்தபடி அந்த நாள் நிகழ்கிறது நினைவேக்கமாக. தூ...தூ... எல்லோரும் அன்பாகக் கேட்கிறார்கள்தான் பிறகு குறுகிய சந்துகளின் அரசாணிகள் அப்படியே அந்தப்...

தினகரன் கவிதைகள்

சற்று முன்பே பார்த்துவிட்டேன்   உடம்பு முடியாமல் கிடக்கிற அவனுடைய வீட்டிற்குப் போகிற வழியில் உதிர்ந்து என் மீது விழுந்தது பழுத்து, பச்சைக் காணாது போய் நடுநரம்பில் கடமைக்கென ஒட்டி இணைந்திருக்கும் கிளை நரம்புகளைக் கொண்டதொரு இலை. அதை உதறிவிட்டு நடந்து நடந்து இந்தக் கதவைத் தட்டினேன் இருமியபடி சட்டை அணியாமல் கதவைத் திறந்த அவனை சற்று முன்புதான் எங்கோ உதறிவிட்டது போல இருந்தது    கருணையில்லாத...

எலுமிச்சங்கனியின் சுயசரிதையிலிருந்து சில குறிப்புகள்.

1. சதுர வடிவப் பானையாய் மெல்ல அசைந்துகொண்டிருந்தது வீடு. கையறு பாடல்களின் புளிப்பு ஊறிப் பெருகி பழங்கஞ்சியாயிருந்தது. சோற்றுப் பருக்கைகளைப்போல குழந்தைகள் நீந்திக் களித்தனர்.   வெளுத்தத் துணிகளின்மேல் எச்சமிடும் காகங்கள் மீன் செவுள்களையும் கோழிக் குடலையும் பானையின் தூரில் மறைத்துச் சென்றன.   மரத்தடி தெய்வங்கள் கனிந்தனுப்பிய எலுமிச்சம் பழங்களால் பனங்கிழங்கு அலகுடைய செங்கால் நாரைகள் ஆடும் வீட்டினை அடை...