Tag: கவிதை

குரு

சுக்ர முனிக்கு வக்ரக் கண்ணாம், இல்லை இல்லை, ஒரு கண் சாவியாம் சுர குருவுக்கோ சரியான கண்ணாம். ஆமாம் ஆமாம், புத்தியும் நேராம். பதினஞ்சு மாசி பகல் துயின்றது. வானம் பார்த்தேன், வெயிலைச் சுருட்டி வெளிச்ச வலையை வாரிச் சுருக்கி பானு மறைந்தான்....

ஸ்ரீவள்ளி கவிதைகள்

திருவிருந்து விரல்கள் என நாம் நினைப்பவை நிஜத்தில் கோரைக் கிழங்குகள் கைகள் எனத் தரப்பட்டிருப்பவை நிஜத்தில் காட்டுக் காளான்கள் பயனில்லை அவற்றால் நேசிப்பவரைத் தொடும் போது இருப்பின் சிவப்பு மொத்தமும் விரல்களாகித் தொட வேண்டும் துடிக்கும் மூளைப் பிசுபிசுப்பைக் கைகளாகக் குழைத்து அணைக்க வேண்டும். காதலின் பரிசுத்த...

நுண் கவிதைகள்

காலுக்கடியில் பாதாளம். முறிந்த கிளையின் நிழலில் தொங்கும் என் சிறுபொழுது. --------- ஒரு கத்தியை செருகி வைக்க மற்றொரு கத்தியையே உறையாக்குகிறேன். --------- வாதிடாமல் குப்பைத் தொட்டியாக்குகிறேன் உன்னை. நீயும் ஒதுங்கியே நடக்கிறாய். --------- மெளனப் பந்தை உன்னிடம் உருட்டிவிடுகிறேன். அந்த விலங்கு உன்னை விளையாட்டாக்குகிறது. --------- இன்னும் கிழியாமல் கசங்காமல் ஒரு குழந்தை போட்டோ. அந்தப் பைத்தியக்காரன் வெய்யிலில் சிலுவையோடு அலைந்து திரிந்து கொண்டிருக்கிறான். --------- சிலுவை சுமந்தலையும் மனிதனுக்கு...

பயோ வார்

இறக்கப்போகிறேன் எதனால் இறப்பேன் என்பதை அறிந்து விடுபடுதல் ஆகத்துயரம் உங்களிடம் சொல்லிப் போகிறேன் பிறந்து ஒருவாரமான பச்சிளம்குழந்தையை விட்டுப் போகிறேன். விரிசலில்லாத பழுத்தக் காதலை விரிந்த மேகத்தில் பதித்து மெல்ல மெல்ல கனிச்சாறு என் இதயத் திரட்சியில் கனக்கச் செய்த காதல் கணவரை விட்டுப்போகிறேன். கரம்கொடுப்பேன் என மூளையின் சிவந்த...

தன் கல்லறையில் புரண்டு படுத்தார்

பொறியாளர் ஹென்றி வில்லியம்ஸ் தான் 1878 அந்த வாய்க்காலை வடிவமைத்தார். அரசு அதை செலவு பிடித்த திட்டமென நிராகரித்தது. 187 கி.மீ நீள வாய்க்கால் அது. விடாப்பிடியாக போராடி வாய்க்காலை நிகழ்த்தினார் வில்லியம்ஸ் கட்டி முடித்த ஆண்டிலிருந்து மூல நதியில் வெள்ளம் பெருக்கெடுக்கவேயில்லை. அந்நூற்றாண்டில் செலவு கூடிய வீணான திட்டமென பொருளியல் வல்லுனர்கள் அதை சொல்வதுண்டு. William's waste என்றொரு புதிய...

சுஜா கவிதைகள்

வாழ்ந்தென்ன? தரையில் கையூன்றி எழுந்தவாறே எதிர்ச்சுவர்க் கடிகாரத்தைப் பார்க்கிறாள். மாலை நான்கு நல்ல நேரம்தான் யாருக்கும் அகாலத் தொந்தரவாகாத நேரம் வீடு திரும்பும்போது செய்தியாகக் காதை எட்டும். அள்ளி முடிந்து கொண்டையிட்டு வாசற்கதவைத் திறக்கிறாள். மேல்மாடிக்குச் சென்று குதித்துவிட்டால் அவ்வளவுதான் முடிந்தது. வழக்கம்போல் தடுக்கிவிடாமல் இருக்க சற்றே தூக்கிப் பிடித்தபடி படிக்கட்டில் கால்...

புல்லட் ஓட்டும் பெண்

இந்த சிறுநகரத்தில் தன் பத்தொன்பதாவது வயதில் தந்தையின் செல்ல இளவரசி புல்லட் ஓட்டத் தொடங்கினாள் தொப்பி ஹெல்மெட் அணிந்து கருங்கூந்தல் காற்றில் பறக்க அவள் அனாயசமாக ஓட்டுவதில் அதிர்ச்சியடைந்த சிறுநகரம் கேட்டது ஸ்கூட்டி ஓட்டும் பெண்களுக்கு புல்லட் எதற்கு? ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் தவித்த நகரத்தின் நெஞ்சத்தில் அனுதினமும்...

ஜிபனானந்த தாஸ் கவிதைகள்

வங்காள மூலம் : ஜிபனானந்த தாஸ் ஆங்கிலம் : சிதானந்த தாஸ் குப்தா தமிழில் : கு.அ.தமிழ்மொழி எனக்குப் பெயரிடுங்கள் எனக்குப் பெயரிடுங்கள் சிறந்த, எளிய, வான் போல் பரந்த சொல்லால் எனக்குப் பெயரிடுங்கள் அந்தச்சொல் நான் என்றென்றும் நேசிக்கும் பெண்ணின் நன்கறிந்த கைபோல...

உணவெனும் கலை

வாத்துகளாயிரம் அல்லிகளாய் மலர்ந்திருக்க குருவியின் சிறுமனை கிளைகளில் நிலவாய் தொங்கும் ஆற்றின் அருகமர்ந்து தீ பொசுக்கும் கறியிலிருந்து சொட்டும் எண்ணை எச்சிலாகி உடலை நனைத்த கதையைச் சொல்லியவாறு குடல், ஈரல், தொடைக்கறியென பந்தி விரித்து பாங்காய் இது பக்கோடாவென பொட்டலம் பிரித்த ததும்பும் பிரியங்களால் மாட்டுக்கறியின் ருசியை அரூரில் சுவைக்கக் கற்றேன். ஆம்பூர்,...

உதிரும் கணத்தின் மகரந்தம்.

சமீபமாக துர்நாற்றத்தை கசிந்து பரப்பிக்கொண்டிருந்த அஹமத் ஈஸாக்கின் வீட்டு பேய்க்கிணற்றை தூர் வாரத் துவங்கியது பொக்லைன் இயந்திரம் அரைகுறை ஆடைகளோடு தாதியின் தடிக்குப்பின்னிருந்து அவ்விடம் தப்பியோடிட பிரயத்தனித்ததின் பலனாய் ஹிஜாப்பை எடுத்துவர சென்ற சில நொடிகள் வாய்த்தது ஒவ்வொருமுறையும் இயந்திரத்தின் கொண்டிகளிலிருந்து சிந்தைக்கெட்டாத அசாத்திய பொருட்கள் அகப்படும்படியானது ஏழு ஆண்டுகளுக்கு...