முத்துராசா குமார் கவிதைகள்
ஈச்சங்கைஹைவேஸ் தாபா வாசலில்பச்சை சீரியல் பல்புகள் சுற்றப்பட்டு தனித்து நிற்கும்ஈச்சமரமாகிய நான்அகல வாய்க்காவில் முளைத்தவள்.மறுகாவையும்பஞ்சபாடையும் குடித்துஆழ ஊன்றினேன்.பீக்காட்டின் கரம்பைத் தின்றுகறித்திமிருடன் பூத்தேன்.தூண்டிலுக்குபுழுக்கள் தோண்டுகையில்பாதங்கள் கூசும்.செதில் உடலேறி சறுக்கியவர்களைபிடித்திருக்கிறேன்.ஓலைத் தலையினுள் தேடிஈச்சம் பழங்களைக் கொட்டியிருக்கிறேன்.தேன்மிட்டாய்...
ஜீவன் பென்னி கவிதைகள்
சகமனிதன் தன்னைச் சிறகென மாற்றிக் கொள்கிறான். கைவிடப்பட்ட ஒரு மனிதனை நிறுத்திஉலகம் நிச்சயமாக உருண்டையானதா எனக் கேட்கின்றனர்?எல்லாவகையிலும் கைவிடப்பட்டிருக்கும் உருண்டை எனச்சொல்லிக் கடந்து செல்கிறானவன்.1.காயப்பட்ட மனிதனைப் பாடுவதற்காகஇரண்டு பழுத்த இலைகள் இவ்விரவில்விழுந்திருக்கின்றன.அடரிருளே!அழுவதற்கென அவற்றை மிகத்...
ஸ்ரீநேசன் கவிதைகள்
1.கவிதை ஆவதுசொற்களில் சொற்சேர்க்கையில் அதுவாக்கும் கருத்தில் விரவிய அணியில் அலங்காரத்தில் ஓசை நயத்தில் சொற்களிடைவெளியில் அங்குக் கண்சிமிட்டும் மறைபொருளில் பொருள்மயக்கத்தில் தொனியில் வடிவத்தோற்றத்தில் கற்பனையில் சிந்தனையில் வாசகனில் அவன் கூர்ந்த வாசிப்பில் அவனும்...
ஆனந்த் குமார் கவிதைகள்
அம்மும்மாவின் பால்கனித் தோட்டம் நிறைந்துவிட்டது.கத்தரி புதினா தக்காளி இருந்தாலும்அம்மும்மாவிற்கோ ரோஜா பைத்தியம்வளர்ந்த ஒரு ரோஜாவின்கிளைமுறித்து கிளைமுறித்துவேறுவேறு தொட்டிகளில் வளர்த்தெடுத்தாள்.இனி இடமில்லை என ஆனபின்னும்குட்டி ரோஜாத் தைகளாய் ஒடித்துஅதன் கீழேயே நட்டுவைத்தாள்.ஒரு தொட்டியில் இத்தனை நட்டால்ஒன்றுமே பிழைக்காது என்றதைஅவள் கேட்டமாதிரியில்லைகாய்ந்த ரோஜா பதியன்களுக்குதளும்பத் தளும்ப நீர் ஊற்றுகிறாள்அம்மும்மா உறங்கும் மதியவேளையில்குத்தி நிற்கும் சுள்ளிகளின் மீதுபூக்களின் நிழல்பரப்பி நிற்கிறதுபெரிய ரோஜாச்செடிஅவள் எழுந்து வந்து பார்க்கிறாள்மூட்டில் கையூன்றிஉதிர்ந்த இலைகளின் நிழல்களுக்கடியில்கண்டுபிடிக்கிறாள்இன்னுமோர் இடைவெளியை விழித்தபின் நகர் நடுவேஅந்த ஏரியைவேலியிட்டு வைத்திருந்தார்கள்.தொட்டிலுக்குள்எழுந்துவிட்ட குழந்தைபோல்கவிழ்ந்து கிடந்து உருள்கிறதது,அழவில்லை சமர்த்து. கம்பித் தடையின்றிஏரியைப் பார்க்கசுற்றி வந்தேன்.சாலை தாழும்ஒரு பழையஓடையருகேவிரல்விட்டு வெளியேமணல் அளைந்துகொண்டிருந்ததுஏரி. மலையெனக்கருதி இருளைபாதிவரை ஏறிவிட்டேன்இடரும் எதன்தலையிலும்அழுந்த மிதித்தேவந்திருக்கிறேன். வழியென்பது ஒன்றேதான்,மேலே.விடிய நான் தொட்டதுபாழ்வெளியின் பெருமூச்சு.எனக்குத் தெரியும்ஏறுவதை விட இறங்குவதுகடினமென.ஆனாலும்,மலையில்லாத உச்சியிலிருந்துஎப்படி இறங்க? ஆனந்த் குமார்தற்போது திருவனந்தபுரத்தில் குழந்தைகள் புகைப்படக் கலைஞனாக இருக்கிறார்.குறும்படங்கள் ஆவணப்படங்கள் எடுப்பதிலும் பங்காற்றி வருகிறார் . சிறார் இலக்கியம், கதை சொல்லலிலும் ஆர்வம் உண்டு.
ச. துரை கவிதைகள்
நூற்றாண்டுகளாக சுழலும் இசைத்தட்டு .இந்த இசைத்தட்டு முடிந்ததும்யாருடைய வீட்டு கதவைதட்டப்போகிறேன் என நினைத்ததும்அச்சம் அவன் தலையை கோதியதுஅமர்ந்திருக்கும் இடத்தில்கடலும் எரிமலையும் முளைத்ததுஏன் இலைகள் என் மீது மட்டுமேஉதிர்கின்றன என்று கத்தினான்அந்த சப்தம் எங்கேயோ நீண்டு...
அகச்சேரன் கவிதைகள்
1) தேட்டம் பாறைகளை வெட்டி வெட்டிச் சமைத்தமலைப்பாதையில் மேலேறுகிறேன்சிதைக்கப்பட்ட பக்கவாட்டுப் பாறைகள்தம் ஹீனஉடல்களால் பள்ளத்தாக்கை நோக்குகின்றனசாலையைப் பொருட்படுத்தியதாகத்தெரியவில்லை. ●●● செத்தவன் பிழைத்தானெனில்சங்கொலி நிறுத்தம்சங்கொலி நின்றிடிலோசடங்குகள் முடக்கம்சடங்குகள் முடங்கியபின்மலர்பாடை கலைப்புபாடை கலைந்த பின்னர்திரண்டவர் தளர்நடைதிரண்டவர் சென்ற தன்பின்ஏங்குமொரு வெட்டுகுழி ●●● ...
கு.அ.தமிழ்மொழி கவிதைகள்
1) மிதிபடும் காலம்I.என் அளவுக் காலணிகள் எளிதில் கிடைத்துவிடுவதில்லை என்றுதான் இவ்வளவு நாட்களாக நம்பியிருந்தேன்நேற்று சுய்ப்ரேன் சாலையில் சென்றுகொண்டிருந்தபோதுஅதைத் தற்செயலாகப் பார்த்தேன்அத்தனைப் பொருத்தமாக என் கால்களை அணைத்ததுஓ! என் அன்புக் காலணியே! நீ...
வியாகுலன் கவிதைகள்
1) மூஸ் கவிதைகள்I.அந்தப் பூனைஎன் மடியில்படுத்திருந்தது ஒரு நிலவின்அமைதியைப் போலஅந்தப் பூனைக்குவினோதமானபெயர்கள் எல்லாம் இல்லை.மூஸ்… மூஸ்… என்றுதான்அப்பத்தா கூப்பிடுவார்கள்சுருக்கங்கள் நிறைந்த அவளது கரங்களில்விளையாடிக்கொண்டிருந்தது அந்த மூஸ் பூனைக்குமூஸ் என்று யார்தான்பெயரிட்டு இருப்பார்கள்அந்த மூஸ் என்ற...
சிவசங்கர். எஸ். ஜே. கவிதைகள்
1) நந்தினிக்குட்டிநத்தாருக்கு இன்னும் ஒரு வாரம்கேரல் குழுவின் வழக்கமான மார்கழி சங்கீர்த்தனங்கள்ஒவ்வொரு நாளும் நத்தார் தாத்தா நடனமாடிதாவிக்குதித்து வருகிறார் தெருவெங்கும்.குழந்தைகளுக்கு மிட்டாயும் பலூனும் தருகிறார் மாடியிலிருந்து எட்டிப்பார்க்கும் நந்தினிக்குட்டிக்கும்மிட்டாய் கிடைக்கிறது.அவளுக்கு சந்தோசமில்லை தாத்தா நம்ம வீட்டுக்கு...
சுகுமாரன் கவிதைகள்
லியான்ஹுவாவின் காதலர்
திரு. காங்க்மிங்க் ரேன் பனிக்கால நள்ளிரவில் மரணமடைந்தார்
திரு. காங்க்மிங்க் ரேன் மனைவியின் இல்லத்தில் உயிர்துறந்தார்.
திரு. காங்க்மிங்க் ரேன் மணம் முறித்திருந்தார்.திரு. காங்க்மிங்க் ரேனும் திருமதி லியான்ஹுவாவும்
தனித்தனியே வாழ்ந்தனர்
எனினும் இருவரும் நண்பர்களாக இருந்தனர்.திரு....