ச. துரை கவிதைகள்
நூற்றாண்டுகளாக சுழலும் இசைத்தட்டு
.
இந்த இசைத்தட்டு முடிந்ததும்
யாருடைய வீட்டு கதவை
தட்டப்போகிறேன் என நினைத்ததும்
அச்சம் அவன் தலையை கோதியது
அமர்ந்திருக்கும் இடத்தில்
கடலும் எரிமலையும் முளைத்தது
ஏன் இலைகள் என் மீது மட்டுமே
உதிர்கின்றன என்று கத்தினான்
அந்த சப்தம் எங்கேயோ நீண்டு...
அகச்சேரன் கவிதைகள்
1) தேட்டம்
பாறைகளை வெட்டி வெட்டிச் சமைத்த
மலைப்பாதையில் மேலேறுகிறேன்
சிதைக்கப்பட்ட பக்கவாட்டுப் பாறைகள்
தம் ஹீனஉடல்களால் பள்ளத்தாக்கை நோக்குகின்றன
சாலையைப் பொருட்படுத்தியதாகத்
தெரியவில்லை.
●●●
செத்தவன் பிழைத்தானெனில்
சங்கொலி நிறுத்தம்
சங்கொலி நின்றிடிலோ
சடங்குகள் முடக்கம்
சடங்குகள் முடங்கியபின்
மலர்பாடை கலைப்பு
பாடை கலைந்த பின்னர்
திரண்டவர் தளர்நடை
திரண்டவர் சென்ற தன்பின்
ஏங்குமொரு வெட்டுகுழி
●●●
...
கு.அ.தமிழ்மொழி கவிதைகள்
1) மிதிபடும் காலம்
I.
என் அளவுக் காலணிகள் எளிதில் கிடைத்துவிடுவதில்லை என்றுதான் இவ்வளவு நாட்களாக நம்பியிருந்தேன்
நேற்று சுய்ப்ரேன் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது
அதைத் தற்செயலாகப் பார்த்தேன்
அத்தனைப் பொருத்தமாக என் கால்களை அணைத்தது
ஓ! என் அன்புக் காலணியே! நீ...
உலக முடிவு (World End)- நர்மி.
அந்த காலையில் என் கால்களுக்கு நான் மிகுந்த நன்றியுடையவளாக இருந்தேன். ஏனெனில் பூமியின் சுவர்க்க நிலத்தை நோக்கி அது அன்று என்னை நடத்திச் சென்றது. நடக்க நடக்க கால்கள் கற்றுத்தருகின்றன , நீண்டு...
ஒரு நேர்காணல் -ச.இராகவன்
உங்களை நம்பித்தான் நான் இங்கே வந்திருக்கிறேன். மூன்று தினங்களுக்கு முன்பாக எனது துறைத்தலைவர் என்னை அழைத்து, “மிஸ்டர் முரளிதரன், ஓர் இறுதிவருட உளப் பகுப்பாய்வுத்துறை மாணவனுக்குரிய தீவிரமும் ஓயாத தேடலும் அர்ப்பணிப்புணர்வும் உம்மிடம்...
ஆசை முகமறந்து – பா. கண்மணி
ராதிகா மூச்சை ஆழ இழுத்துப் பெருமூச்சாக விட்டாள். அவன் மூச்சும் இதில் கலந்திருக்கிறதே.... அதன் வெம்மை பட்டதுபோல அவளது கன்னமேடுகள் சூடேறின. அந்த சிற்றூரிலிருக்கும் ஒரே பெரிய விடுதியின் பால்கனிக்குக் கீழே மாலைமுலாம்...
கேத்தரினின் காதலன் – வாணி ஆனந்த்
லூயிக் பூங்காவின் வலப்பக்கம் இருக்கும் நடைபாதையின் மீது நடக்கத் தொடங்கியபோதுதான் அவளை நன்றாகக் கவனித்தான்.அவள் பழைய பிரெஞ்சுச் சீமாட்டிகளின் மோஸ்தரில் உடை அணிந்திருந்தாள்.மேல் உடலுடன் இறுக்கித் தைத்தது போன்றிருந்த அவளது கவுன் பாதங்களில்...
போதிசத்வா -விஜய ராவணன்
“அந்த மரத்தின் கனிகள் மிகுந்த ருசியாகவும் அபூர்வமான நறுமணம் வீசக்கூடியதாகவும் இருந்ததால் அதில் வசித்த குரங்குகளாகிய நாங்கள் மிகுந்த அக்கறையோடும் எச்சரிக்கையோடும் இருந்தோம். எந்த நிலையிலும் ஒரு பழமும் கீழே விழ அனுமதித்ததில்லை....
சர்வம் செளந்தர்யம் -ரா.செந்தில் குமார்.
அதிகாலை மூன்று மணிக்கு சான்பிரான்சிஸ்கோவிலிருந்து, தோக்கியோ மார்க்கமாக சென்னை விமான நிலையம் வந்து சேரும் விமானம், தரையிறங்கிய அறிவிப்பை கேட்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன். அருகில் அமர்ந்திருந்த பெரியவர் ”ப்ளைட் வந்துடுச்சி” என்று தன்...
விக்டர்ஹியூகோ சுற்றுவட்டம் -நெற்கொழு தாசன்
"ரஷோந்தி மூசு" என்ற குரல் கேட்டபோது திரும்பிப் பார்த்தேன். இராசேந்திரம் அய்யா புன்னகையோடு,தலையாட்டியபடி உள்ளே வந்துவிட்டிருந்தார். எனக்கும் அவருக்கும் இடைப்பட்ட பகுதியில் கிறிஸ்தோப் நின்று கொண்டிருந்தார். மூன்றாவது தலைமுறையாக இந்த உணவுவிடுதியை நடத்திக் கொண்டிருப்பவர்....