படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

எங்கே அந்த மர்மமான மனிதர்கள்

  (1) அன்றைக்கு நான் வேறு எங்கேயோ அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத வீதியிலுள்ள ஓர் பழைமையான கட்டிடத்தின் கீழ் தளத்தில் இருந்தேன். அப்போது என் இதயத்துடிப்பின் வேகத்தை அதிகரிக்கக்கூடிய அல்லது பலவீனப்படுத்தக்கூடிய சம்பவத்தைக் கலைத்துவிட்டு எழுந்து...

யுவனின் சிறுகதைகள் குறித்தான உரை

“இளம் வயதிலிருந்தே கதை கேட்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு எனக்கு. அந்த ஆர்வம்தான் கதை சொல்லும் ஆசையாக உருமாறி இருக்கிறதோ என்னவோ”  கவிஞர் யுவன் தன் சிறுகதைத்தொகுப்பின் முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடுவதை குறித்து...

வள்ளுவன் வழி வந்ததொரு பாணனின் அரசியல் பேச்சுக்கள்

வள்ளுவன் வழி வந்ததொரு பாணனின் அரசியல் பேச்சுக்கள் அல்லது மற்றமைகளுக்கான அறம் பேசும் குரல்களின் பரிணாம வளர்ச்சி   வெய்யிலுக்கு விருது வழங்கி இருப்பதை ஒட்டி ஒரு கட்டுரை எழுதச் சொல்லி இருக்கிறார்கள். ஓ....

அறிதலின் பயணம்  

   மனிதன் கவிதையைத் தேடிப் போவதற்கும் கவிதை மனிதனைத் தேடித் தீண்டுவதற்கும் இடையில் பெரியதொரு வேற்றுமை இருக்கிறது. கவிதை மனிதனைத் தீண்டுவது வேதனை; மனிதனுக்கு. முதலில் மெதுவாக, மங்கலாக, மிகவும் மங்கலாக; பின் மெல்ல மெல்ல,...

சிதைவுறும் காமத்தின் எல்லைகள் 

  இயற்கையைத் தனக்கேற்றவாறு செதுக்கிக் கொள்ள இயலும் மானுடனாகப் பிறப்பதில் தான் எத்தனை சௌகரியம்! நம்முடன் இணைந்து வாழும் சகஉயிர்களின் மனநிலையைப் பற்றி கவலைகொள்ள வேண்டியிருப்பதில்லை. படர்ந்து பரவும் செடிகளைத் தொட்டிக்குள் அடக்கி வளரவேண்டிய...

பேதமுற்ற போதினிலே-3

உள்ளும், வெளியும் பிரபஞ்சம் இரண்டாக இருக்கிறது, அகம் புறம் என்று. இத்தனை பிரம்மாண்டமான முடிவிலா வெளி ஒருபக்கமென்றால், உடலுக்குள் இருக்கும் சூட்சுமமான உணர்வுகள், மனம், புத்தி, ஆன்மா குறித்தும் நம்மால் அறியமுடியாத புதிராயிருக்கிறது. ஆனாலும்...

கதை

'அந்தக் காலத்தில் போர்வெல் முதலாளியை மிகவும் சோதித்தன ஊற்றுகள். ஒளிரும் ஆபரணங்களோடு இயந்திர முனையில் தன்னையே பொருத்தி பூலோகத்தை ஆழத் துருவி ஊடுருவினார். அவர் இறங்க இறங்க ஊற்றுகளும் பதுங்கின. விடியலில் மேலே வந்த இயந்திரத்தில் முதலாளி இல்லை. மூவாயிரம் ஆண்டுகள் கழித்து தொல் எச்சமான முதலாளியே நமக்கு நாட்டார் தெய்வமானார்' பயண...

சித்திரக்கதை நினைவுகள்

“என்னடா…கன்னமெல்லாம் அம்மைதழும்பான்னு கேட்டதுக்கு சிரிக்கற…?” என்ற  அலுவலக நண்பனுக்கு எப்படி சொல்வது. அப்போதெல்லாம் மாதம் முழுக்க சிறுகசிறுக சேர்த்தால் மட்டுமே இரண்டு ரூபாய் காமிக்ஸ் வாங்க பணம் சேரும். வீட்டில் ஓசியில் வந்த நாவல்கள்.....

உணவெனும் கலை

வாத்துகளாயிரம் அல்லிகளாய் மலர்ந்திருக்க குருவியின் சிறுமனை கிளைகளில் நிலவாய் தொங்கும் ஆற்றின் அருகமர்ந்து தீ பொசுக்கும் கறியிலிருந்து சொட்டும் எண்ணை எச்சிலாகி உடலை நனைத்த கதையைச் சொல்லியவாறு குடல், ஈரல், தொடைக்கறியென பந்தி விரித்து பாங்காய் இது பக்கோடாவென பொட்டலம் பிரித்த ததும்பும் பிரியங்களால் மாட்டுக்கறியின் ருசியை அரூரில் சுவைக்கக் கற்றேன். ஆம்பூர்,...

வெள்ளை நிறக்காலம்.

நோயின் வாசலில் நின்று அல்லது கதவின் மறு புறம் நின்று அல்லது அழகான சொற்சேர்க்கையின் நடுவிலிருந்து அவர்கள் அவனை வழியனுப்புகிறார்கள் பழைய கிட்டாருக்கெல்லாம் உள்ளே அனுமதி கிடையாது சுகவீனம் இழந்த தோற்றத்தை கண்ணுறும் குழந்தைகள் அம்மையின் பின்னே கடவுளைப்போல ஒளிந்துகொள்கிறார்கள். பீடித்திருந்த நோய்மையோ...