Friday, Jan 22, 2021
Homeபடைப்புகள்கவிதைகள் (Page 5)

பொறியாளர் ஹென்றி வில்லியம்ஸ் தான் 1878 அந்த வாய்க்காலை வடிவமைத்தார். அரசு அதை செலவு பிடித்த திட்டமென நிராகரித்தது. 187 கி.மீ நீள வாய்க்கால் அது. விடாப்பிடியாக போராடி வாய்க்காலை நிகழ்த்தினார் வில்லியம்ஸ் கட்டி முடித்த ஆண்டிலிருந்து மூல நதியில் வெள்ளம் பெருக்கெடுக்கவேயில்லை. அந்நூற்றாண்டில் செலவு கூடிய வீணான திட்டமென பொருளியல் வல்லுனர்கள்

வாழ்ந்தென்ன? தரையில் கையூன்றி எழுந்தவாறே எதிர்ச்சுவர்க் கடிகாரத்தைப் பார்க்கிறாள். மாலை நான்கு நல்ல நேரம்தான் யாருக்கும் அகாலத் தொந்தரவாகாத நேரம் வீடு திரும்பும்போது செய்தியாகக் காதை எட்டும். அள்ளி முடிந்து கொண்டையிட்டு வாசற்கதவைத் திறக்கிறாள். மேல்மாடிக்குச் சென்று குதித்துவிட்டால் அவ்வளவுதான் முடிந்தது. வழக்கம்போல் தடுக்கிவிடாமல்

இந்த சிறுநகரத்தில் தன் பத்தொன்பதாவது வயதில் தந்தையின் செல்ல இளவரசி புல்லட் ஓட்டத் தொடங்கினாள் தொப்பி ஹெல்மெட் அணிந்து கருங்கூந்தல் காற்றில் பறக்க அவள் அனாயசமாக ஓட்டுவதில் அதிர்ச்சியடைந்த சிறுநகரம் கேட்டது ஸ்கூட்டி ஓட்டும் பெண்களுக்கு புல்லட் எதற்கு? ஏற்கவும்

1.மாபெரும் அஸ்தமனம் அந்திவானில் மகத்தான ரத்தத்துளி அதன் ஒளிப்பரிவாரங்களோடு அஸ்தமனமாகிக் கொண்டிருக்கிறது அனிச்சையாக என்னை நான் தொட்டுப்பார்க்கிறேன் ஆ! காற்றை தீண்டுவது போல அல்லவா உள்ளது தொடுகையுமில்லை தொடப்படுவதுமில்லை வேறெதுவோ நான்.. ஒரு வீட்டில் வசிப்பவனை மாதிரி எனக்குள்

விரவிக் கிடக்கும் சடைத்த மர நிழல்கள்… ரயில் தண்டவாளத்தை இரு கோடாக முதுகில் கீறிய அணில் குஞ்சு, என் சித்திரத்திலிருந்து தப்பித்த தும்பிகள் படபடக்கும் வண்ணாத்திப்பூச்சி,பொன் வண்டு வேலியோர தொட்டாச்சிணுங்கி. குப்பை மேனிச் செடி இணுங்கும் சாம்பல் பூனை… இறைந்துகிடக்கும் சருகு, நான்

1) வில்லிசைக்காரி இறந்து முப்பது கடந்தும் 'உன்னை ஒரு நாள் பார்க்க வருவேன்' என்ற அவளது குரலே கனவை நிறைக்கிறது. திண்ணையின் முக்கோணக் குழியைச் சுத்தப்படுத்தி கிளியாஞ்சட்டியில் நீரும் பருக்கையும் வைத்து தினமும் காத்திருப்பேன். மரத்தாலோ கல்லாலோ மண்ணாலோ வீசுகோல்களை செய்துவிடலாம். அவளது கரங்களை

சுல்தான் ஸைன் உல் அபீதின் அழிவை முன்னறிவித்த நட்சத்திரம் தோன்றி மறைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. வெள்ளம் கோபுரங்களை மூழ்கடித்தது, கூறப்பட்டதைப் போலவே இளநீர் கூடுகளுடன் மணிமகுடங்கள் மிதந்து செல்ல ஒன்றடுத்தொன்றாய் பால்பற்களென வீழ்ந்தன

1)அணுக்கம் எனது ஆயுள் பரியந்தம் நீந்தினாலும் கடக்கமுடியாத கடலுக்கு அப்பால் அக்கரையில் நிற்கிறாய் நீ நினைத்தால் நிமிடங்களில் நீர்மேல் நடந்துவந்து காணும்படிக்கு இதோ இக்கரையில்தான் இருக்கிறேன் நான். 2) பிராயம் அப்படியேதான் இருக்கிறாய் என்பது அம்மா எவ்வளவோ மாறிவிட்டேன் என்கிறாள் மனைவி தொட்டுப்பேசக் கூசுகிறான் வளர்ந்துவிட்ட மகன் நீயே பார்த்துக்கொள் என்று காதோர நரையைக் காட்டுகிறது கண்ணாடி இடுப்பிலிருந்து இறங்கப் பார்க்கும் கால்சட்டையை ஒரு கையால் இழுத்துப் பிடித்தபடி மறுகையால் பையில் உருளும் கண்ணாடி

30 கக்கடைசியில் ஏர்வாடி தர்க்காவில் அம்மாவைச் சேர்த்தோம். சங்கிலி பிணைத்து அழைத்துப்போகையில் என் தலை தடவினாள். அப்போது கலைந்த முடியை எத்துணை முறை சீவியும் ஒழுங்குபடுத்த முடியவில்லை. 29 வெள்ளி அன்று அம்மா பூண்டிருப்பது மௌனமா விரதமா தனிமையா தெரியாது அன்றைய மதிய உலை கொதபுதா என்று கொதிய வேடிக்கை பார்ப்பாள். 28 அம்மாவின்

அப்பாவுக்கு புற்றுதானாம். உறுதியாகிவிட்டது. மூப்பின் பொருட்டு இரண சிகிச்சையை நிராகரித்துவிட்டார் மருத்துவர். சங்கதி தெரியாமல் பேத்தியின் பிரதாபங்களில் தோய்கிறார் அப்பா. கதாபிரசங்கியின் துடிமேளக்காரனாக அப்பாவின் பேச்சுக்கெல்லாம் பக்கத்துப் படுக்கைக்காரர் முகிழ்நகை செய்கிறார். அவரது தொண்டையில் துளையிட்டிருக்கிறார்கள். இப்போது எப்படி இருக்கிறது? ’பரவாயில்லை’ ’காற்றோட்டமில்லை