Tag: ஜப்பானிய சிறப்பிதழ்

கனலி கலை இலக்கியச் சூழலியல் இணையதளம் வெளியிட்ட ஜப்பானியக் கலை இலக்கியச் சூழலியல் சிறப்பிதழ்- 2020

கனலி – ஜப்பானியக் கலை இலக்கியச் சூழலியல் சிறப்பிதழ்

கனலி-யின் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் !    நீர்ப்பறவைகள் போகின்றன வருகின்றன. அவற்றின் தடங்கள் மறைகின்றன ஆனாலும் அவை தம் பாதையை மறப்பதில்லை ஒருபோதும்.   ~டோஜென்    கனலி-யின் ஜப்பானியக் கலை இலக்கியச் சூழலியல் சிறப்பிதழ் வழியாக மீண்டும் உங்கள் அனைவருடன் உரையாடுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. கனலியின்...

“ஓரிகாமி என்பது மக்களிடமிருந்து வந்த ஒரு மரபுக்கலை” – ‘ஓரிகாமி’ கலைஞர்...

  “என்னைப் பொறுத்தவரையில், நான் நம்பும் புரட்சி என்பது ஆயுதங்களால் வருவது அல்ல. காகிதங்களால் உருவாவது! அன்பையும் அமைதியையும் தன்னுள் ஏந்தியிருக்கும் இந்த வெற்றுக் காகிதம் தான் எனது ஒரே பற்றுக்கோல்.”  என்று எப்போதும்...

தோல்வியுற்ற ராஜ்ஜியம்

தோல்வியுற்ற அந்த ராஜ்ஜியத்துக்கு பின்புறத்தில் ஓர் அழகான சிறு நதி இருந்தது.  தெளிவான நீரோடை அது. நிறைய மீன்களும் அதில் இருந்தன. பலவிதமான நீர்த்தாவரங்களும் அதில் வளர்ந்திருந்தன. மீன்கள் அத்தாவரங்களை உண்டன. அந்த...

ஹாருகி முரகாமி நேர்காணல்கள்

ஹாருகி முரகாமி இன்றைய தேதியின் உச்ச நாவலாசிரியர் ஹாருகி முரகாமி, மிகவும் வினோதமான, மாயவகை சிறுகதைகளோடு நுட்பமான நாவல்களையும் ஏராளமாக எழுதித் தள்ளிக்கொண்டிருக்கும் மிகவும் சுறுசுறுப்பான, ஆச்சர்யகரமான எழுத்தாளர். இவரது The Wind-up...

லிஃப்டுக்குள்…

அன்று வெளியே கிளம்பியபோது, இப்படிப்பட்ட விரும்பத்தகாத நிகழ்வொன்றை எதிர்கொள்ளப்போகிறேன் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. குறிப்பாகச் சொல்லப்போனால் அன்று நான் களைப்பாகக் கூட இல்லை. உண்மையிலேயே நல்ல மனநிலையோடுதான் நான் திரும்பி வந்து...

நீல நிலவு

சில வேளைகளில் கடந்த காலத்தின் குறிப்பிட்ட சில நிகழ்வுகளை நினைத்துப் பார்த்து அவை எவ்விதம் தொடங்கின என்று குழப்பமடைந்து விடுவேன். மேகங்களேதுமில்லாமல் பளிச்சிட்ட வானத்துடன் மிளிர்ந்த அழகிய நாள் அது, டோக்கியோ மாநகரத்தின் புறநகரில்...

ஜப்பானிலிருந்து சில கவிதைகள்

I ஷன்டாரோ தனிக்காவா (Shuntaro Tanikawa, 1931- ) டோக்கியோவில் பிறந்தவர். ஜப்பானின் முன்னோடிக் கவிஞர்களில் ஒருவர். அறுபதுக்கும் மேற்பட்ட தொகுதிகளை வெளியிட்டுள்ளார். சிறார் இலக்கியம் சார்ந்து தொடர்ச்சியாக பங்களித்துவருபவர். தனிக்காவா பெரியவர்களுக்குள் உள்ள...

ஜப்பானிய கலாச்சாரத்தின் உடல்மொழி அழகியல்

உலகில் அரங்கச் செழுமை கொண்ட கலாச்சாரங்கள் மனித நடத்தைகள் குறித்த புரிதலை முன்னெடுத்துச் செல்வதில் முன்னோடிகளாக விளங்குவதை நாம் பார்க்க முடியும். உடல்கூறுக் கலைகளும், உடல்மொழியின் நுட்பங்களும் ஆழமாக வேரூன்றியுள்ள ஜப்பான் போன்ற...

பச்சை மீனும் கடற்பரட்டைகளின் முட்டையும்.

 செர்ரி மரங்களுக்குக் கீழே சூப் சாலட் மீன் எல்லாமே பூ இதழ்களால் அலங்கரிக்கப்படுகின்றன.  பாஷோவின் கவிதை வரிகள் இவை. ஜப்பானிய உணவு மரபைத் துல்லியமாகப் படம் பிடித்துக்காட்டும் காட்சி இது. அதிகமான இடுபொருட்களின்றி, கூடியவரையில் புதிதாக, எளிய முறையில் சமைக்கப்பட்ட உணவுகளைத்தான்...

ஐந்தாம் இரவு

இவ்வாறு நான் கனவு கண்டேன்… பன்னெடுங்காலத்திற்கு முன்பு, அதாவது கடவுள்களின் யுகத்திற்குப் பின்னோக்கிப் பயணிக்கையில் நான் ஒரு போரில் துரதிர்ஷ்டவசமாகத் தோற்கடிக்கப்பட்டு உயிருடன் பிடிபட்டு எதிரிப்படையின் தலைவன் முன் இழுத்துச் செல்லப்பட்டேன். அக்காலத்தில் அனைத்து மனிதர்களும்...