நூறு கல்யாணிகள்
“சுந்தர் சார் , சீட் பெல்ட் சரியாகப் போட்டுக் கொண்டீர்களா, கிளம்பலாமா ?” என்று கேட்டார் பாலா. வயதானாலும் நிமிர்ந்து கம்பீரமாக இருந்தார். சற்று குள்ளம், ஒல்லியான உருவம், மீசை மழித்து தலை...
கித்தானுடைய வண்ணப்பேழை
அந்தச் சவப்பெட்டியை வீட்டிற்கு எடுத்து வரும் போது அதை எதிர் நோக்கிய கண்களில் இருக்கக் கூடிய கேள்விகளுக்கு எந்தப் பதிலையும் சொல்லி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.அதை இருபக்கங்களில் நானும் எனது...
சிங்கராஜாவின் விருந்து
அந்தக் காட்டில் சிங்கம், புலி, சிறுத்தை, நரி, மான், யானை என நிறைய நிறைய விலங்குகள் இருந்தன. எத்தனை விலங்குகள் இருந்தால் என்ன? காட்டுக்கு ராஜா யார்?... ஆமாம். சிங்கராஜா தான் அந்தக் காட்டுக்கும் ராஜா. அன்று சிங்கராஜாவிற்குப் பிறந்த நாள். காடே திருவிழாக் கோலத்தில் இருந்தது.
“பிறந்த நாள்... எங்க சிங்கராஜாவிற்குப் பிறந்த நாள்... நாங்க ஆடிப்பாடும் திருநாள்...” பெரிய பாறைக்குள் இருந்த சிங்கராஜாவின் அரண்மனையில் விலங்குகள் சந்தோசமாக ஆடிப்பாடிக் கொண்டாடின.
வருடா வருடம் சிங்கராஜா அதன் பிறந்த நாள் அன்று எல்லா விலங்குகளுக்கும் பிடித்த உணவுகள் உடன் தடால்புடாலாக விருந்து வைக்கும். அதனால் தான் இந்த ஆட்டம் பாட்டம் எல்லாம். போன வருட விருந்தின் ருசி, இன்னும் விலங்குகள் நாக்கில் எச்சில் ஊர செய்தது. விருந்தில் நிறையச் சாப்பிட வேண்டுமென விலங்குகள் இரண்டு நாட்களாகச் சாப்பிடாமல் காத்திருந்தன. இறைச்சிகள், பழங்கள், காய்கறிகள், புற்கள் என வகை வகையாக உணவுகளின் விதவிதமான வாசம், மூக்கில் ஏறி பசியைத் தூண்டியது.
சிங்கராஜா கம்பீரமாக...
ஸ்லதே என்னும் ஆடு-ஐசக் பாஷவிஸ் சிங்கர்
ஹனுக்கா* பண்டிகையின் பொழுது ஊரிலிருந்து நகரத்துக்கான சாலை பனி மூடியிருக்கும், ஆனால் இந்த வருடமோ குளிர் குறைவாக உள்ளது. ஹனுக்கா நெருங்கிவிட்ட போதிலும் பனி சிறிதளவே பொழிந்திருக்கிறது. பெரும்பாலான நேரம் சூரியன் ஒளிர்ந்தது. விவசாயிகள் வறண்ட...
விஜயராவணனின் ’இரட்டை இயேசு’படைப்புக்களின் ஊடாடும் கற்பனை வாதமும் கதை செறிவும்
ஒரு படைப்பாளன் தனது படைப்பை யாருக்கு எடுத்துச் சொல்ல அவன் கொள்கிற களங்கள் மிக முக்கியமாக உள்ளது. யாரும் சொல்லாத செய்தியை, களத்தை, நிகழ்வை அல்லது சம்பவத்தை வெளிப்படுத்தும் நோக்கமாகக் கொண்டுதான் ஒவ்வொரு...
ஏ.இ. ஹவுஸ்மேன் கவிதைகள்
இளமையில் இறக்கின்ற விளையாட்டு வீரனுக்கு
நீ உன் ஊருக்காகப் பந்தயத்தில் வென்ற வேளையில்நாங்கள் உன்னை நாற்காலியில் ஏந்திச் சென்றிருக்கிறோம் சந்தை-வெளியில்மக்களும் சிறுவர்களும் வழிநெடுக நின்று ஆரவாரம் செய்தார்கள்தோளுக்கு மேல் உன்னைத் தூக்கி வீட்டுக்கு அழைத்து...
பல்லக்கும் சமூக அநீதியும் …
இந்தக் கட்டுரையை எந்த உச்ச வரம்பில் இருந்து தொடங்குவது என்ற குழப்பத்தில் இருந்தேன். மாட்சிமை மிக்க இந்தியச் சமூகம்,எப்போதும் இருந்ததில்லை என்பதற்கான வரலாறுகளால் பறைசாற்றும் போது கண்டுணர முடியும். சமூகத்தில் அடுக்கு அமைப்பான வாழ்வியல் முறைகளைக் கொண்டு விளங்குவதோடு உரிமைகள் எனும் பெயரில் ஒரு சமூகம் பிரிதோரான சமூக மக்களை அநீதிக்கு ஆட்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர். இதில் ஒரு சம்பவமான பல்லக்கில் பவனி வரும் உரிமையை மட்டுமே மையப் பொருளாகவிவரிக்கிறேன்.
தற்போது பல்லக்கு தூக்குதல் நின்றுவிட்டாலும், ஒரு சில இடங்களில் பல்லக்குகளும் பல்லக்கு தூக்கிகளும் இருக்கின்றனர். சபரிமலைசெல்லும் ஐயப்பன் பக்தர்கள் இமயமலைப் பகுதிக்குச் செல்லும் பக்தர்கள் இன்னும் இது போன்ற மலை ஏற்ற பகுதிகளில் இருக்கும் கோவில்களுக்கு நடக்க முடியாதவர்கள் வயதான முதியவர்கள் போன்றோர்களைத் தூக்கிச் செல்லும் மனிதர்கள் இருக்கின்றார்கள். பல்லக்கும் இருக்கின்றன. இவர்களை தற்போது டோரி என்றழைக்கின்றனர். இவர்கள் அண்ணகர்கள் என் வேள்பாரியில் சு.வெங்கடேஷன் குறிப்பிடுகிறார். மேலும் விதை எடுக்கப்பட்டவர்கள் என்கிறார்.
பல்லக்கு ஏறுபவர் குறைந்தபட்ச வசதி வாய்ப்புகளைப் பெற்றவர்களால் மட்டுமே முடிகின்றது. ஆனால் இதே நிலை என்பது அன்று சமூக...
பொட்டி
இரயில் மூன்று மணி நேரம் தாமதமாக நள்ளிரவு பன்னிரண்டு மணி முப்பத்தைந்து நிமிடத்திற்கு வந்து சேர்ந்தது. நடைமேடையில் முருகேசு இறங்கியதும் பார்வையை நீள விட்டார். அவர் பெட்டிக்கு முன்னிருந்த வேறு பெட்டிகளில் இருந்து...
மன்னிப்புக் கேட்பவர்கள்-மிலன் குந்தேரா (Milan kundera)
ஜூன் மாத காலையில், கிழக்கில் கிளம்பிய சூரியனைப் போல, மெதுவாக பாரீஸ் வீதியில் சென்று கொண்டிருந்தான் அலயன். எதிர்ப்பட்ட அனைத்து இளம் பெண்களும் குட்டையாக அணியப்பட்ட மேல் சட்டைக்கும், இறக்கமாக அணியப்பட்ட கால் சட்டைக்கும்...
கனலி 2024 வெளியீடுகள்
2024 ஆம் ஆண்டின் சென்னை புத்தகக் திருவிழாவில் கனலி சார்பில் ஆறு புத்தகங்கள் வெளியாகின்றன.
மொழிப்பெயர்ப்புச் சிறுகதைகள்:
ரஷ்ய மொழிப்பெயர்ப்புச் சிறுகதைகள்
தமிழில் -கீதா மதிவாணன்
விலை :உரூபாய் 300
தொகுப்பிற்கான கீதா மதிவாணன் முன்னுரை:
பத்தொன்பதாம் நூற்றாண்டு ரஷ்ய இலக்கியத்தின் பொற்காலம் எனப்படுகிறது. அக்காலத்தில்தான் ரஷ்ய இலக்கியத்தில் முன்னோடி முயற்சியாக, படிமம், குறியீடு, புனைவியம், யதார்த்தவியம், நவீனத்துவம், போன்றவற்றை உள்ளடக்கிய பல பரீட்சார்த்தமான...