படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

அதுவொரு உருண்ட சுரைக்குடுவையைப் போலிருந்தது

முதுமை அடைந்த பிறகே மரணிக்க வேண்டும் என்று என் தாய் சத்தியம் வாங்கியிருந்தாள். எப்போதும் சொல்பேச்சு கேட்காத குழந்தை நான் இதோ முயல்களை வேட்டையாடித் திரிந்த குளிர் நிலத்தில் சுடப்பட்டு கிடக்கிறேன் "காப்பிச் செடிக்கு உரமிட வேண்டும் சின்னவனே உன் வேட்டைக்கத்தியை எறிந்துவிட்டு வா" அக்கக்கா...

செல்வசங்கரன் கவிதைகள்

பாவனை வெறும் விரல்களை வைத்து சிகரெட் குடிப்பது போல பாவனை செய்ய விரல்களும் என் பாவனைக்கு இணங்கி வாய் வரை வந்து போய்க்கொண்டிருந்தது. வாயைக் குவித்தால் தான் சிகரெட் பிடிக்கிறோமென்றே அர்த்தம். உள்ளே சொன்னேன். வெளியே வாய் வந்து குவிந்து...

ஜீவன் பென்னி கவிதைகள்

பிரபஞ்சத்தின் கதைகளை சிறிய வெளிச்சத்தில் பின் தொடர்தல் 1. ஞானம் தனது பகுப்பாய்வைத் தொடங்கும் போது இப்பிரபஞ்சம் ஒரு சிறிய புள்ளியைப் போலிருக்கிறது. முடிகின்ற போது நாம் பார்த்துக்கொண்டிருப்பதைப் போல் மிகப்பெரியதாக இருக்கிறது. 2. இந்தச் சாலைகள் முடிவற்றவை நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்காகவே இப்பட்டாம்பூச்சிகள்...

பா.ராஜா கவிதைகள்

உறங்கும் ஒருவன். அதிகாலை 4:43, எழுப்புகிறது எழு ஒரு சேதி சொல்ல வேண்டுமென்று காதோரம் கிசுகிசுக்கிறது ஆர்வம் மேலிடவில்லை ஒரு வீட்டை திடீரெனக் காணவில்லை பார் என்கிறது அதற்கும் அலட்சியம் தொலைந்த அந்த வீட்டில் தொங்கும் ஹோல்டரில் உன்னை காலத்திற்கும் தொங்கவிடப்போகிறேன் என்ற போதும் கூட அச்சமோ...

கார்த்திக் திலகன் கவிதைகள்

 நன்றி ஒட்டகத்தின் கால் கொண்டு நடக்கிறேன் என் பாதை எங்கும் மணல் மணலாய் எழுத்துக்கள் எழுத்துக்களைக் கொண்டு இவ்வளவு பெரிய பாலைவனத்தை உருவாக்கிய என் முன்னோர்களுக்கு நன்றி எழுத்தின் மேல் நடக்கும் ஒட்டகமாக என்னைப் பெற்றெடுத்த என் தாய்தந்தைக்கு நன்றி எல்லாப்...

ரவி சுப்பிரமணியன் கவிதைகள்

ஞானம் போதும் போதும் இருந்ததென அப்போதுதான் உதிர்ந்தது மரத்திலிருந்து இன்னும் ஒரு நாளோ இரு நாளோ புகாரேதுமின்றி வான் நோக்கிக் கிடக்கிறது வெயிலையும் வாங்கிக்கொண்டு காற்றுக்கு அசையும் அதை அதன் சொற்ப வாழ்வில் என் கரங்களும் ஸ்பரிசிக்கட்டுமேயென எடுத்தேன் எத்தனை மருது, வண்ணம், வாசனை, வடிவம். தான்மை...

நிகழ்ந்துவிட்ட அற்புதம்: சார்ள்ஸ் ப்யூகோவ்ஸ்கி

1. சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கியை சில தசாப்தங்களுக்கு முன்னர் அறிந்திருந்தாலும் அவரை விரிவாக வாசித்துப் பார்த்தது என்றால் மூன்று/நான்கு வருடங்களுக்கு முன்னராகத்தான் இருக்கும். அந்தக் காலப்பகுதியில் ஒரே தொடர்ச்சியில் அவரது எல்லா நாவல்களையும் வாசித்து முடித்திருந்தேன்....

மெட்ராஸின் சிவப்பு நிற பேரழகு கட்டிடங்கள்- 3

கார்டில் கட்டிடம் ( பாரத் இன்சூரன்ஸ் கட்டிடம் ) மெட்ராஸின்  அடையாளங்களென வரிசையில் முதலில் நிற்பது  சிவப்பு நிற கட்டிடங்களே அதில் பத்துக்கும் குறைவான கட்டிடங்களே வெள்ளை நிற கட்டிடங்கள் என்பது  உலகறிந்த ஒன்றுதானென்றாலும்,...

செத்துப்போனவர்

தூங்குகிற மனிதனை ஐஸ் பெட்டிக்குள் ஏன் வைத்தார்கள் என்று பார்க்கிறவர்கள் பதறுகிற அளவுக்கு , எண்ணெய் தேய்த்துக் குளித்த அசதியில் அசந்து தூங்குவது போல் இருந்தார் அவர். ஒரே ஒரு வித்தியாசம்தான். தூங்கும்போது அவர்...

புதுமைப்பித்தனின் படைப்புலகம்

புதுமைப்பித்தனின் படைப்புலகம் சங்குக்குள் அடங்கிவிடாத  புதுவெள்ளம் புதுமைப்பித்தனின் கதைத் தொகுப்பு நூலை எடுத்துப் புரட்டும் போதெல்லாம் ஒரே ஆண்டில் 45 கதைகளை எழுதி வீசிவிட்ட அவரின் அசுரத்தனமான வேகத்தின் பட்டியலை ஒவ்வொருமுறையும் பார்ப்பேன்.  அதைப்  பார்க்கும்...