மொழிபெயர்ப்புக் கவிதைகள்

கதைகளால் செய்யப்பட்ட உலகம்: ம்யூரியல் ரூகெய்சரின் ‘இருளின் வேகம்’

இந்த உலகம் கதைகளால் செய்யப்பட்டிருக்கிறது, அணுக்களால் அல்ல. - ம்யூரியல் ரூகெய்சர் ('இருளின் வேகம்' கவிதையிலிருந்து).   I யாரெல்லாம் பெண்குறிக் காம்பினை வெறுக்கிறார்களோ அவர்களெல்லாம் ஆண்குறியை வெறுக்கிறார்கள் யாரெல்லாம் ஆண்குறியை வெறுக்கிறார்களோ அவர்களெல்லாம் யோனியை வெறுக்கிறார்கள் யாரெல்லாம் யோனியை  வெறுக்கிறார்களோ அவர்களெல்லாம்...

மேரி ஆலிவர் கவிதைகள்

கற்களால் உணரயியலுமா? கற்களால் உணரயியலுமா? அவர்கள் தங்கள் வாழ்க்கையை நேசிக்கிறார்களா? இல்லை அவர்களின் நிதானம் எல்லாவற்றையும் அமைதியடையச் செய்துவிடுமா? நான் கடற்கரையில் நடக்கும்போது வெள்ளை நிறத்தில், கறுப்பில் எனப் பல வண்ணங்களில் சிலவற்றைச் சேகரிக்கிறேன். கவலைப்பட வேண்டாம், நான் உன்னைத் திரும்பவும் கொண்டு வந்து விட்டுவிடுவேன் என்கிறேன் பிறகு அவ்விதமே செய்கிறேன். மரம் தனது பல கிளைகளை உயர்த்தி உவகையடைகிறதே, ஒவ்வொரு கிளையும் ஒரு கவிதையைப்போலவா? முகில்கள் தங்களது மழைமூட்டையை அவிழ்த்துவிடுவதில் மகிழ்ச்சியடைகின்றனவா? உலகத்தில் பெரும்பாலானவர்கள் சொல்கிறார்கள், இல்லை, இல்லை, அது சாத்தியமேயில்லை என்று. நான் அத்தகைய முடிவை எண்ணிப்பார்க்கவே மறுத்துவிட்டேன். ஏனெனில் அது மிகப் பயங்கரமானதாக இருக்கும், மேலும் தவறாகவும். ** நான் கடற்கரைக்குச் சென்றேன் நான் காலையில் கடற்கரைக்குச் சென்றேன் நேரத்திற்கேற்ப அலைகள் வந்துபடியும் சென்றபடியும் இருந்தன, ஓ, நான் சோகமாக இருக்கிறேன் என்ன செய்யட்டும்— நான் என்ன செய்ய வேண்டும்? என்கிறேன். தன் அழகிய குரலில் கடல் சொல்கிறது: மன்னிக்கவும், எனக்கு வேலை இருக்கிறது. ** எப்போது அது நிகழ்ந்தது? எப்போது அது நிகழ்ந்தது? “நிறையக் காலத்திற்கு முன்பு” எங்கு நிகழ்ந்தது? “தூராதி தூரத்தில்” இல்லை, சொல், எங்கு நிகழ்ந்தது? “எனது இதயத்தில்” இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது உனது இதயம்? “நினைத்துப்பார்த்த படியிருக்கிறது, நினைத்துப்பார்த்தபடியிருக்கிறது!” **   இந்தக் காலையில்  இந்தக் காலையில் செங்குருவிகளின் முட்டைகள் பொரிந்துவிட்டன மேலும் ஏலவே குஞ்சுகள் உணவுக்காகக் கீச்சிட்டுக்கொண்டிருக்கின்றன. அவர்களுக்குத் தெரியாது உணவு எங்கிருந்து வருகிறது என்று, வெறுமனே கத்திக்கொண்டிருக்கிறார்கள் “மேலும்! மேலும்!” வேறு எது குறித்தும்,...

சியாம் சுதாகர் கவிதைகள் (மலையாளம்) , தமிழில் யூமா வாசுகி.

மலையாளத்தின் குறிப்பிடத்தக்க இளங்கவிஞர்களில் ஒருவர் சியாம் சுதாகர். 16-10-1983-இல் பிறந்தவர். சொந்த ஊர் பாலக்காடு. இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு ஈர்ப்பம் (ஈரம்) 2001-ல் வெளிவந்தது. இரண்டாவது தொகுப்பு அச்சிலிருக்கிறது. இளங்கவிஞர்களுக்கான வள்ளத்தோள்...

நவீன ஹிந்தி கவிதையின் பிரம்மராக்ஷஸ், கஜானன் மாதவ் முக்திபோத் ( 1917 – 1964...

கஜானன் மாதவ் முக்திபோத் ( 1917 – 1964 ) ஹிந்தி நவீன கவிதையின் முகங்களில் ஒருவர் கஜானன் மாதவ் முக்திபோத். ‘சாயாவாத்’ (கற்பனைவாதம்) மரபிலிருந்து ஹிந்தி கவிதையை திசைதிருப்பிய முக்கியமான தொகுப்பு ‘தார் சப்தக்’...

ஜப்பானிலிருந்து சில கவிதைகள்

I ஷன்டாரோ தனிக்காவா (Shuntaro Tanikawa, 1931- ) டோக்கியோவில் பிறந்தவர். ஜப்பானின் முன்னோடிக் கவிஞர்களில் ஒருவர். அறுபதுக்கும் மேற்பட்ட தொகுதிகளை வெளியிட்டுள்ளார். சிறார் இலக்கியம் சார்ந்து தொடர்ச்சியாக பங்களித்துவருபவர். தனிக்காவா பெரியவர்களுக்குள் உள்ள...

ஜப்பானியக் கவிதைகள்

ஜப்பானியக் கவிதை வாசிப்பு வித்தியாசமானது. பல ஆண்டுகளின் முன்னர் ஹைக்கூ எனும் கவிதை வடிவத்தை பிரெஞ்சு மொழியில் ஆர்வமுடன் வாசித்தேன். முதல் வாசிப்பில் சுலபமானதாகத் தெரிந்தாலும், இந்தச் சிறு கவிதைகளின் முழுமையான அர்த்தத்தை...

சாகவா சிகா கவிதைகள்

மதியம்   மலர் இதழ்களைப் போன்று மழை பொழிகிறது அதீத எடையினால் தாக்கப்பட்ட பூச்சிகள் மரத்தின் நிழலில் வீழ்கின்றன பெரும் சுவரொன்றின் மீதான மென் பூங்காற்றின் ஒலி சூரியனால், அலைகளினால் அமுக்கப்படுகின்றன   எனது எலும்புக்கூடு அவற்றின் மீது வெள்ளைப் பூக்களை பரப்புகிறது எண்ணங்கள் சிதறுபட, மீன்கள் குன்றின் மீதேறுகின்றன   இருண்மை கானம்   புதிய தரைவிரிப்பின்...

மூன்று ஜப்பானியக் கவிதைகள்

1.தடா சிமாகோ (1930- ) மேற்கத்திய கருத்துகளைப் படி தடா சிமாகோ மற்ற ஜப்பானிய கவிஞர்களை விட அதிகம் படித்தவராகவும், அதிக தத்துவஞானம் உடையவராகவும் கருதப்படுகிறார்.இத்துறையின் பேராசிரியர்களை தவிர ஜப்பானிய அறிவார்ந்தவர்கள், மேற்கத்திய நாடுகளில்,...

கவிஞனின் எழுதுமேசை

அதுவொரு பழைய மர எழுதுமேசை, என்னுடைய பாட்டனாரிடமிருந்து முதுசமாகக் கிடைத்தது. என்னுடைய பாட்டன் ஒரு ‘விஞ்ஞான’  மனிதர்.அவர் ஒரு போதும் தன்னுடைய மகனை ஒரு கவிஞனாகக் கற்பனை செய்திருக்க மாட்டார். பல வருடங்களூடு நடந்து...

ஷந்தொரா தனிக்கா கவிதைகள்

தனிமையின் இரண்டு பில்லியன் ஒளி ஆண்டுகள்   மனித இனம் இந்தச் சிறிய கோள வடிவிலான விண்பொருள் மீது உறங்கி, விழித்து, வேலை செய்து மேலும் சில நேரங்களில்  செவ்வாய்க் கிரகத்தில் இருக்கும் நண்பர்களுக்காக வாழ்த்தும் தெரிவிக்கிறது   நான் தனிப்பட்ட கருத்து எதுவும் கொண்டிருக்கவில்லை செவ்வாய்க்...