மொழிபெயர்ப்புக் கவிதைகள்

ஆடம் ஜகாஜெவ்ஸ்கி கவிதைகள்

சாதாரண வாழக்கை நமது வாழ்க்கை சாதாரணமானது, பெஞ்சில் கைவிடப்பட்ட ஒரு கசங்கிய காகிதத்தில் படித்தேன். நமது வாழ்க்கை சாதாரணமானது, தத்துவவாதிகள் என்னிடம் சொன்னார்கள். சாதாரண வாழ்க்கை, சாதாரண நாட்கள், கவலைகள், ஒரு இசைக்கச்சேரி, ஒரு உரையாடல், நகர எல்லையில் உலா, நல்ல செய்தி, கெட்ட...

வார்சன் ஷையர் கவிதைகள்

நேற்று மதியம் அவர்கள் செய்தது இதுவே அவர்கள் என் அத்தையின் வீட்டைத்  தீ மூட்டினார்கள் தொலைக்காட்சியில் வரும் பெண்கள் செய்யும் வகையில் ஒரு ஐந்து பவுண்ட் தாள் போல குறுக்கே மடிந்து நான் அழுதேன். என்னை நேசிப்பதை வழக்கமாயுள்ள பையனை...

இஸ்மாயில் கவிதைகள்

கிணத்துக்குள் ஆமை கிணத்துக்குள் ஆமை கிடக்கிறது என்று கேட்டு குழந்தைகள் எல்லாம், குரங்குக் கூட்டத்தைப் போல் ஓடினோம் கிணத்துக்குள் எட்டிப் பார்த்தபோது, எங்கள் தலைகள்தான் தெரிந்தன பின்னால் வானமும், நீலத் தொடுவானும் கற்களும் குச்சிகளும் எடுத்து கிணத்தைக் கலக்கினோம் ஆமை மேலே...

அன்ட்டோனியா பாஸி கவிதைகள்

ஆசீர்வாதம் ஒருவர் நெற்றியிலிருந்து இன்னொருவர் நெற்றிக்கு நம் காய்ச்சல் தொற்றிக்கொள்கிறது. வெளியே, உயிரோட்டமாக மின்னும் நட்சத்திரங்கள் மற்றும் ஒரு படர்கொடி , அதன் உள்ளங்கை போன்ற இலைகளை நீட்டி நட்சத்திரங்களின் லேசான வெளிச்சத்தைப் பிடிக்கிறது. வெதுவெதுப்பான என் வீட்டில், அதன், வேறு யாருக்கும்...

நன்றாக குடி

நன்றாக குடி 1. எப்பொழுதும் நல்ல போதையிலிருக்க வேண்டும். எல்லாம் இருக்கிறது. அதுதான் பிரச்சனை. காலத்தின் கொடிய சுமை உன் தோள்களை முறித்து உன்னை நிலத்தில் குனியும்படிச் செய்வதை நீ உணராமல் இருக்கவேண்டுமென்றால் நீ...

ரேமாண்ட் கார்வர் கவிதைகள்

1,கீறல் நான் விழித்தெழுந்தேன் கண்ணில் துளி இரத்தத்தோடு , ஒரு கீறல் எனது நெற்றியின் குறுக்காக பாதியளவிற்கு நீண்டிருந்தது . ஆனால், இப்போதெல்லாம் நான் தனியாகவே உறங்குகிறேன் . எதற்காக இவ்வுலகில் ஒரு மனிதன் உறங்கும்போதும் கூட தனக்கெதிராக தன் கரத்தை உயர்த்தவேண்டும்? ஜன்னலில் தெரியும் என்...

எலிஸபெத் பிஷப் கவிதைகள்.

காத்திருப்பு அறையில் மாசசூசெட்ஸின் வொர்சஸ்டரில், பல்மருத்துவரைப் பார்க்கச் சென்ற அத்தை கன்சூலோவுடன் நானும் சென்றிருந்தேன். அவள் மருத்துவரைப் பார்த்துவிட்டு வரும்வரை காத்திருப்பு அறையில் அமர்ந்திருந்தேன். அது பனிக்காலம். சீக்கிரமே இருட்டி விட்டிருந்தது. காத்திருப்பு அறை முழுக்க பெரியவர்களே நிரம்பியிருந்தனர், கணுக்கால் வரை உயர்ந்த காலணிகளும்...

டெட் கூசர் கவிதைகள்

பிறை நிலா எவ்வளவு அது தன் முதுகில் சுமந்தே ஆகியிருக்க வேண்டும், அந்த நீல நிழலான ஒரு மகத்தான பந்து என்றாலும் அது எப்படியோ பிரகாசிக்கிறது, ஒரு தோற்றத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது. இன்றிரவு பல மணி...

லூயிஸ் க்ளக் கவிதைகள்

1,ஏதுமின்மையின் தனிமை இருள் நிறைந்திருக்கிறது மழைக்கண்ணால் பார்க்கையில் மலை தெரியவில்லை இங்கு ஒரே மழை சத்தம் அதுதான் வாழ்வை இயக்கிக் கொண்டிருக்கிறது மழையோடு குளிரும் சேர்ந்துவிட்டது இவ்விரவில் நிலவுமில்லை விண்மீன்களுமில்லை காற்று இரவில் உயிர்கொண்டிருக்கிறது எல்லா காலையிலும் அது கோதுமையைச் சாய்த்தபடி வீசிக்கொண்டிருந்தது பிறகு நண்பகலில் நிறுத்திக்கொண்டது ஆனால்...

அமீரி பராக்கா கவிதைகள்.

சம்பவம் அவர் எங்கிருந்தோ திரும்பி வந்து சுட்டார். அவனைச் சுட்டுக் கொன்றார். அவர் திரும்பி வந்தபோது,   சுட்டார், அவன் தடுமாறினான், விழுந்தான். இருள்காட்டைக் கடந்து, கீழே, சுடப்பட்டு, இறந்துகொண்டு,  இறந்து, முற்றும் முழுமையான முடிவுக்குப்...