Monday, October 2, 2023

மொழிபெயர்ப்புகள்

வேற்று மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்

ஒரே கேள்வி

வெகு காலத்திற்கு முன்னதான ஓர் இரவில்.. அந்தக் கணத்தில்.. பிசாசையொத்த புழுதி படிந்த எண்ணற்ற முகங்கள் உன்னை நோக்கின. உன்னுடைய அம்மாவின் முகம் கதவிற்கப்பால் இருந்தது. எந்த மூத்த சகோதரியை அந்த இரவிற்குப் பிறகு...

ஒரு ஷினகாவா குரங்கின் ஒப்புதல் வாக்குமூலம்

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, கன்மா ஆளுகைக்கு உட்பட்ட வெந்நீரூற்று நகரத்தின் சிறிய ஜப்பானிய பாணி விடுதி ஒன்றில் முதிய குரங்கு ஒன்றைச் சந்தித்தேன். அதுவொரு பொலிவிழந்த, இன்னும் சொல்லப்போனால் கிட்டத்தட்ட பாழடைந்த...

ஒரு பிணத்தின் போர்வையைப் போல

மே கண்விழிப்பதற்குள் எழுந்து காலையுணவைத் தயாரித்து அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தவேண்டுமென்று நினைத்தான். ஆனால், அவன் தூங்கிப்போய்விட்டதால், அவள் கட்டிலிலிருந்து சத்தமின்றி எழுந்து சென்றுவிட்டிருந்தாள். அவள் அருகில் இல்லாததைக் குளியலறையின் தொட்டியில் களகளவென நீர்வடியும்...

ஜுவான் ரமோன் ஜிமெனெஸ் கவிதைகள்

1.என்ன நடக்கிறதென்று யாருக்குத் தெரியும் மணித்துளிகளின் மறுபக்கம் என்ன நடக்கிறதென்று யாருக்குத் தெரியும்? எத்தனை எத்தனை சூர்யோதயங்கள் அந்த மலைக்குப் பின்னாலிருந்து! தொலைவில் திரளுமந்த மிளிர்மேகம் முன்பெத்தனை முறை பொன்னுடல் நடுங்க இடிமுழங்கியிருக்கிறது! இந்த ரோஜா நஞ்சாகிப்போனது. அந்த வாள் உயிர் அருளியது. நான் ஒரு சாலையின்...

வெரோனிக்கா வோல்கோவ்

வெறுமையின்மீது நடனமாடும் ஸ்பேனிஷ் மொழிப் பெண் கவிஞர் தமிழில் இதுவரை அறியப்படாத ஸ்பேனிஷ் மொழிப் பெண் கவிஞர்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவர்  வெரோனிக்கா வோல்கோ. இவரது கவிதைகள் மெக்சிகோவின் ஆன்மீகப் பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டு...

மீள்வருகை

என்னிடம் ஒரு நல்ல செய்தியும், ஒரு கெட்ட செய்தியும் இருக்கிறது. நல்ல செய்தி என்னவென்றால், இந்த வாழ்க்கை முடிந்த பிறகும் (ஒரு வகையான) வேறொரு வாழ்க்கை இருக்கிறது. கெட்ட செய்தி என்னவெனில் ஷான்...

உண்மையின் இயல்பு : தாகூர்- ஐன்ஸ்டீன் உரையாடல்கள்

14/7/1930 அன்று மதியம், ரவீந்திரநாத் தாகூருக்கும்  ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கும், பின்னவரின் கஃபுத் இல்லத்தில் நடைபெற்ற உரையாடல்:   ஐன்ஸ்டீன்: நீங்கள் தெய்வீகம் என்பது உலகிலிருந்து தனித்து இருப்பதாக நம்புகிறீர்களா? தாகூர்:  தனித்தில்லை. எல்லையற்ற மனித ஆளுமை பிரபஞ்சத்தை...

A butterfly and a few breasts

Kaamu felt weird the minute she woke up in the morning. She casually ran her right hand over her entire body and instantly entered...

சார்லஸ் சிமிக் கவிதைகள்

ஓவியத் திரைச்சீலை அது சொர்க்கத்திலிருந்து பூமிக்குத் தொங்குகிறது. அதில் மரங்கள் உள்ளன, நகரங்களும் நதிகளும் பன்றிக்குட்டிகளும் நிலவுகளும் உள்ளன. ஒரு மூலையில், முன்னேறும் குதிரைப்படையின் மீது பனி பொழிகிறது. இன்னொரு மூலையில் பெண்ணொருத்தி நெல் நடவு செய்து...

குறுங்கதைகள் -லிடியா டேவிஸ்

அந்த நாயின் ரோமம் அந்த நாய் இல்லை. நாங்கள்  அதை நினைத்து ஏங்கினோம். வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கும் போது  குரைக்கும் ஒலியில்லை. நாங்கள் தாமதமாக வீட்டுக்கு வரும்போது எங்களுக்காக யாரும் காத்திருக்கவில்லை. அவனுடைய...