மொழிபெயர்ப்புகள்

வேற்று மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்

ரியுனொசுகே அகுதாகவா குறுங்கதைகள் –

செஞ்ஜோ முன்னொரு காலத்தில் சீனாவின் கிராமப்புறமொன்றில் ஒரு மாணவன் வசித்து வந்தான். தான் விரைவில் எழுதப்போகும்  பல்கலைக் கழகத் தேர்வுகளுக்குத் தயாராகிக்  கொண்டிருந்தான். ஒவ்வொரு நாளும் தன் அறையின் ஜன்னலை ஒட்டிய மேசை முன்...

அக முகங்கள்

அன்று கல்லூரி வேலை நாளாகயிருந்தது. அதனால் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போவதற்காய் தேவகி டீச்சர் விடுப்பு எடுத்திருந்தாள். அலாரமெல்லாம் வைக்காமல் தானாகவே காலையில் தூங்கி எழுந்து, குளித்து, பாதி நரைத்த தலைமுடியை காய வைத்து,...

ஒரு கிறிஸ்துமஸ் மரமும் , ஒரு திருமணமும்

அன்றொரு நாள் ஒரு திருமணத்தைக் காண நேர்ந்தது... ஆனால் அதைப் பற்றி அல்ல, அந்தக் கிறிஸ்துமஸ் மரத்தைப் பற்றிச் சொல்வதே இன்னும் மேம்பட்டதாக  இருக்கும். திருமணம் சிறப்பானதாகவே இருந்தது. எனக்கு மிகப் பிடித்திருந்தது....

கனவுப் போர்வீரன்

‘கனவுகள் உறையும் கடுங்குளிரான ஒரு நாளில்,நான் ஒரு பயங்கரமான கனவு கண்டேன்நண்பகல் கடந்த பொழுதுஎனது கனவு தன் தொப்பியை அணிந்துகொண்டு வெளியேறியதுநான் கதவைப் பூட்டினேன்..’  இது சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு நடந்தது. உண்மை...

ஏ.இ. ஹவுஸ்மேன் கவிதைகள்

இளமையில் இறக்கின்ற விளையாட்டு வீரனுக்குநீ உன் ஊருக்காகப் பந்தயத்தில் வென்ற வேளையில்நாங்கள் உன்னை நாற்காலியில் ஏந்திச் சென்றிருக்கிறோம் சந்தை-வெளியில்மக்களும் சிறுவர்களும் வழிநெடுக நின்று ஆரவாரம் செய்தார்கள்தோளுக்கு மேல் உன்னைத் தூக்கி வீட்டுக்கு அழைத்து...

இருபத்தாறு ஆண்களும் ஒரு பெண்ணும்-மாக்ஸிம் கார்க்கி, தமிழாக்கம் – கீதா மதிவாணன்

நாங்கள் இருபத்தாறு ஆண்கள், இருபத்தாறு உயிர் வாழும் இயந்திரங்கள். புழுக்கமான நிலவறைக்குள் அடைபட்டு, காலை முதல் இரவு வரை மாவு பிசைந்து க்ரிங்கில் மற்றும் உப்பு பிஸ்கட்களைத் தயாரித்துக் கொண்டிருந்தோம். நிலவறையின் ஜன்னல்களுக்கு...

முட்டாளின் சொர்க்கம்

ஒரு காலத்தில் அந்த ஊரில் பணக்காரர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பெயர் கதீஷ். அவருக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். கதீஷின் மகன் பெயர் அட்ஸெல். கதீஷின் வீட்டில் தூரத்து உறவினர்...

புயலின் கண்ணிலிருந்து கதை சொல்லல்: அமிதவ் கோஷ் நேர்காணல்

பயணக்கட்டுப்பாடுகளினால் 2020-இல் சர்வதேச விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த சூழலில், எங்கும் இல்லாத இடங்களுக்கெல்லாம் பயணசீட்டுகளைப் பல விமான நிறுவனங்கள் விற்கத்தொடங்கின. ஒரு விமானப் பயணச்சீட்டின் விலைக்கும், அந்த விமானம் வெளியிடும் புகையுமிழ்விற்கும் ஈடாக 35,000...

வார்சன் ஷையர் கவிதைகள்

நேற்று மதியம் அவர்கள் செய்தது இதுவேஅவர்கள் என் அத்தையின் வீட்டைத்  தீ மூட்டினார்கள்தொலைக்காட்சியில் வரும் பெண்கள் செய்யும் வகையில்ஒரு ஐந்து பவுண்ட் தாள் போலகுறுக்கே மடிந்து நான் அழுதேன்.என்னை நேசிப்பதை வழக்கமாயுள்ள பையனை...

அமீரி பராக்கா கவிதைகள்.

சம்பவம்அவர் எங்கிருந்தோ திரும்பி வந்து சுட்டார். அவனைச் சுட்டுக் கொன்றார். அவர் திரும்பி வந்தபோது,   சுட்டார், அவன் தடுமாறினான், விழுந்தான். இருள்காட்டைக் கடந்து, கீழே, சுடப்பட்டு, இறந்துகொண்டு,  இறந்து, முற்றும் முழுமையான முடிவுக்குப்...