பெட்டகம்

அச்சு இதழ்களில் மட்டும் பிரசுரமான படைப்புக்களை இணையதளம் மூலமாகப் பரவலான வாசகர்களின் கவனத்திற்கு  கொண்டுச் செல்ல   ‘பெட்டகம்’பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர்களின் அனுமதி பெற்று இப்பகுதியில்  படைப்புகள் வெளியாகும்.

பெரிய எழுத்து டான் க்விக்ஸாட் கதை -மொழிபெயர்ப்பு சிறுகதை

மூலம்: ரிவ்கா கேரன் (ஹங்கேரி) தமிழில்: எஸ். சங்கரநாராயணன்       ஒரு ஜனவரி மாத  அந்திநேர மயக்க இருள். பேராசிரியரும் அவர் மனைவியும் இஸ்லமொராதா பகுதியின் கடற்கரைப் பக்கமாக  , சாலையோர பயணியர் இல்லத்துக்கு வந்தார்கள். புத்தாண்டுக்...

தவறு -மொழிபெயர்ப்புச் சிறுகதை

நீண்டகாலமாக விமெர்கற்றில் உள்ள தனது நாட்டுப்புறத்து வீட்டில் வாழும் எண்பத்தாறு வயதான பிரபல ஓவியர் லூசியோ பிறெடொன்ஸானி ஓர் காலையில் எழுந்து தனக்கு ஒவ்வொரு நாளும் வருகின்ற தினப் பத்திரிகையைத்  திறந்தபோது பிரமித்துப்...

வெளிய

முள் தோப்பெங்கும் மலநாற்றம். இந்தத் தெருவிலேயே பெரியம்மா தான் முதலில் தோட்டத்துக்குப் போகும். தெருக் குழாயில் ராத்திரி முழுக்க தண்ணீர் மெல்லிசாகச் சொட்டிக் கொண்டிருக்கும். தண்ணீர் பிடிப்பதற்காக பெரியம்மாவுக்கு விடியற்காலை இரண்டு மூன்று...

விலக்கு

சாலையைக் கடந்து பள்ளிக்குச் செல்ல பச்சை விளக்குக்காக மைலோ பாக்கெட்டை உறிஞ்சிக்கொண்டே லாவண்யா காத்திருந்தபோது தன்னைப் பார்த்துவிட்டுச் சட்டென்று விலகி நான்கைந்து அடிகள் முன்னால் போய் நின்ற அவளைக்  கண்டவுடன் அவளது ப்ளம்ப்பி...

அம்மணத் தெரு -சிறுகதை

நான் இந்த ஊருக்குப் புதுசு”   “எந்த ஊருக்குப் பழசு?”   பெண்களுக்கு எல்லா ஊரும் புதுசுதானே. அவர்களுக்கு வீடு தானே ஊர். டீக்கடையில் நேற்று நரைத்த தாடியுடன் பைத்தியம் போலிருந்த ஒருவன் என்னை இந்தக் கேள்வியைக் கேட்டான். “நீ ...

புல்நுனிப் பனித்துளியில் பிரபஞ்சம்

                  “ முதலில் வாழ்வதற்காக எழுதத் தொடங்குகிற நாம் நாளடைவில்               சாகாமல் இருப்பதற்காக எழுதுகிறோம் என்பதாக முடிந்து போகிறோம்.”                                                                     - கார்லோஸ் புயந்தஸ் , மெக்சிகன் நாவலாசிரியர்.   பிறப்பு , இறப்பு ஆகிய இரண்டுக்குமிடையேதான் கலைஞனின் உன்னதமான சுயம் உயிர்த் துடிப்போடு வாழ்கிறது. இந்த சுயத்தைத் தேடிக் கண்டுபிடித்து அதனைத் தனது கலையால் – அது எழுத்தாகவோ, ஓவியமாகவோ,...

வன தேவதை- மொழிபெயர்ப்பு சிறுகதை

    ஆங்கிலத்தில்: விளாதிமீர் நபக்கோவ்  தமிழில்: செ. ஜார்ஜ் சாமுவேல் சிந்தனையில் ஆழ்ந்திருந்த நான் மைக்கூட்டின் அசையும் நிழலின் சுற்றுவட்டக் கோட்டை வரைந்து கொண்டிருந்தேன்.  தூர அறையில் கடிகாரத்தின் மணியோசை கேட்ட நேரத்தில், கனவே...

அயோத்தி

அவன் வீட்டுக்குள் நுழைகிறபோதே, அவனுடைய முகத்தைப் பார்த்ததுமே சந்திராவுக்குத் தெரிந்துபோயிற்று, வெறுங்கையுடன்தான் திரும்பி வந்திருக்கிறான் என்று. குழந்தை மடியில் தூங்கிக் கொண்டிருந்தாள். நிமிர்ந்து அவனையே எரித்துவிடுகிறவளைப் போலப் பார்த்தாள். தலை குனிந்தபடியே உள்ளே...

ஒரு துண்டு வானத்தின் வழியே மினுக்கும் நட்சத்திரங்கள்

தமிழில் அறிவியல் சிறுகதைகள்  சிறுகதை என்பது அளவில் சிறியதாகவும் அதே நேரத்தில் ஓர் உணர்வு, ஒரு நிகழ்வு, ஒரு மையம் என்று ஏதேனும் ஒன்றினைப் பற்றி மட்டும் பேசி அவற்றோடிழைந்த ஒரு திருப்பத்தையும் கொண்டிருக்க...

தமிழ் உரைநடை வளர்ச்சி -கட்டுரை

தமிழ் இலக்கியம் முழுவதும் ஐரோப்பியர்கள் வரும் வரையில் செய்யுள் நடையில் இருந்துள்ளது. தமிழ்மொழியில் தனி உரைநடை நூல் இருந்ததில்லை. பண்டைத்தமிழர் செய்யுள் நடையில் மட்டும் நூல் இயற்றி, உரைநடையில் நூல் இயற்றுவதை ஏன்...