பெட்டகம்

அச்சு இதழ்களில் மட்டும் பிரசுரமான படைப்புக்களை இணையதளம் மூலமாகப் பரவலான வாசகர்களின் கவனத்திற்கு  கொண்டுச் செல்ல   ‘பெட்டகம்’பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர்களின் அனுமதி பெற்று இப்பகுதியில்  படைப்புகள் வெளியாகும்.

அம்மணத் தெரு -சிறுகதை

நான் இந்த ஊருக்குப் புதுசு” “எந்த ஊருக்குப் பழசு?” பெண்களுக்கு எல்லா ஊரும் புதுசுதானே. அவர்களுக்கு வீடு தானே ஊர்.டீக்கடையில் நேற்று நரைத்த தாடியுடன் பைத்தியம் போலிருந்த ஒருவன் என்னை இந்தக் கேள்வியைக் கேட்டான். “நீ ...

பார்வதி குட்டி -சாம்ராஜ் -சிறுகதை

கார்மேகம் பார்வதிகுட்டியை முதன்முதலில் பார்த்தது  ’ஒரு ஓனம் ராத்திரி’ என்ற மலையாளப் பட சூட்டீங்கில்தான். அவர் ஷேத்ராடனம் போல இடையிடையே ’தீர்த்தாடனம்’ போவதுண்டு. அப்படி போகையில் தற்செயலாய் கோவளத்தில் இரனியல் கோலப்பனை பார்த்தார்....

காவி- மொழிபெயர்ப்பு சிறுகதை

மூலம் : மிர்ஸா வஹீத் தமிழில்: கார்த்திகைப் பாண்டியன் அவள் அதிகமாக சத்தமிடவில்லை. ஆனால் எனக்குத் தெரியும், உறக்கத்தில் கூட, என்னமோ சரியில்லை. அது குறித்து எனக்குக் கனவுகள் வந்திருக்கின்றன, ஆகவே எனது படுக்கையை விட்டு...

யூதா – சிறுகதை

அந்தப் பறவை யூதாவை அவன் வீட்டிலிருந்து கொத்திக் கொண்டு வந்து இந்தப் பீக்காட்டிலே போட்டது. யூதா இப்படித்தான் நம்பினான். ஆயா சொல்லும் கதைகளில் செட்டையடித்து பறக்கும் பறவை. அது பாலாற்றின் கரையோரம் இருக்கும்...

வன தேவதை- மொழிபெயர்ப்பு சிறுகதை

  ஆங்கிலத்தில்: விளாதிமீர் நபக்கோவ் தமிழில்: செ. ஜார்ஜ் சாமுவேல்சிந்தனையில் ஆழ்ந்திருந்த நான் மைக்கூட்டின் அசையும் நிழலின் சுற்றுவட்டக் கோட்டை வரைந்து கொண்டிருந்தேன்.  தூர அறையில் கடிகாரத்தின் மணியோசை கேட்ட நேரத்தில், கனவே...

பஷீரிஸ்ட்- சிறுகதை

திருச்சியிலிருந்து திண்டுக்கல் வரையிலான இரண்டு மணி நேரப் பிரயாணம் சலிப்பூட்டுவதாக  உணர்ந்த அடுத்த கணம், தொடர்ந்து இதே பேருந்தில் பழனி வரை செல்வது என்று ஏற்கனவே எடுத்திருந்த முடிவை இவன் மாற்றிக் கொண்டான்....

அயோத்தி

அவன் வீட்டுக்குள் நுழைகிறபோதே, அவனுடைய முகத்தைப் பார்த்ததுமே சந்திராவுக்குத் தெரிந்துபோயிற்று, வெறுங்கையுடன்தான் திரும்பி வந்திருக்கிறான் என்று. குழந்தை மடியில் தூங்கிக் கொண்டிருந்தாள். நிமிர்ந்து அவனையே எரித்துவிடுகிறவளைப் போலப் பார்த்தாள். தலை குனிந்தபடியே உள்ளே...

ஆராயி – சிறுகதை

”இப்படியே இருந்தா இதுக்கு என்னதான் முடிவு? இவ பாட்டுக்கு வந்து பத்து நாளா எதுவும் சொல்ல மாட்டீங்கறா. இவள கூப்பிடவும் மாப்ள வீட்டிலிருந்து யாரும் வரல. என்ன சடவுன்னும் வாயத் தொறந்து சொல்ல மாட்டீங்கறா....

புல்நுனிப் பனித்துளியில் பிரபஞ்சம்

                  “ முதலில் வாழ்வதற்காக எழுதத் தொடங்குகிற நாம் நாளடைவில்              சாகாமல் இருப்பதற்காக எழுதுகிறோம் என்பதாக முடிந்து போகிறோம்.”                                                                     - கார்லோஸ் புயந்தஸ் , மெக்சிகன் நாவலாசிரியர். பிறப்பு , இறப்பு ஆகிய இரண்டுக்குமிடையேதான் கலைஞனின் உன்னதமான சுயம் உயிர்த் துடிப்போடு வாழ்கிறது. இந்த சுயத்தைத் தேடிக் கண்டுபிடித்து அதனைத் தனது கலையால் – அது எழுத்தாகவோ, ஓவியமாகவோ,...

பூமாரியின் இன்றைய பொழுது – சு.வேணுகோபால்

தாழைப் பள்ளத்திலிருந்து மேலேறி 'ல' வளைவு வரவும் கனத்த வேப்பமரத்தடியில் முருகேசன் இல்லை என்பது தெரிந்தது. அவன் வந்திருக்கக்கூடாது என்றுதான் வேகவேகமாக நைலான் சாக்குப் பையைக் கக்கத்தில் சுருட்டி வைத்தபடி வந்தான் பூமாரி....