பெட்டகம்

அச்சு இதழ்களில் மட்டும் பிரசுரமான படைப்புக்களை இணையதளம் மூலமாகப் பரவலான வாசகர்களின் கவனத்திற்கு  கொண்டுச் செல்ல   ‘பெட்டகம்’பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர்களின் அனுமதி பெற்று இப்பகுதியில்  படைப்புகள் வெளியாகும்.

தலைகீழ் பாதை

கைப்பையிலிருந்து சாவியை எடுத்து கதவைத் திறந்தான் சுப்பிரமணி. உள்ளே அடைத்திருந்த காகிதமும் மையும் கலந்த புழுக்கநெடி ஆவியை போல் கடந்து சென்றது. பலகைத் தடுப்புக்குப் பின்னால் தலையிறங்கப் போர்த்தியிருந்த நகலெடுக்கும் இயந்திரம் மங்கிய...

காவி- மொழிபெயர்ப்பு சிறுகதை

மூலம் : மிர்ஸா வஹீத் தமிழில்: கார்த்திகைப் பாண்டியன் அவள் அதிகமாக சத்தமிடவில்லை. ஆனால் எனக்குத் தெரியும், உறக்கத்தில் கூட, என்னமோ சரியில்லை. அது குறித்து எனக்குக் கனவுகள் வந்திருக்கின்றன, ஆகவே எனது படுக்கையை விட்டு...

“குரு – க்ஷேத்ரம்” – சிறுகதை

குரு வணங்குகிறேன். தாங்கள் விதித்தபடியே தங்களையல்லாது, தங்களை நான் குருவாய் வரித்த பாவனையை வணங்குகிறேன். தாங்கள் ஏன் என் கனவில் வரவில்லை? தங்கள் உருவத்தை வெகுவாயும் மனத்தில் விளம்பிக் கொண்டு தாங்கள் வரவேணும், வரவேணும்...

பார்வதி குட்டி -சாம்ராஜ் -சிறுகதை

கார்மேகம் பார்வதிகுட்டியை முதன்முதலில் பார்த்தது  ’ஒரு ஓனம் ராத்திரி’ என்ற மலையாளப் பட சூட்டீங்கில்தான். அவர் ஷேத்ராடனம் போல இடையிடையே ’தீர்த்தாடனம்’ போவதுண்டு. அப்படி போகையில் தற்செயலாய் கோவளத்தில் இரனியல் கோலப்பனை பார்த்தார்....

ஒரு துண்டு வானத்தின் வழியே மினுக்கும் நட்சத்திரங்கள்

தமிழில் அறிவியல் சிறுகதைகள்  சிறுகதை என்பது அளவில் சிறியதாகவும் அதே நேரத்தில் ஓர் உணர்வு, ஒரு நிகழ்வு, ஒரு மையம் என்று ஏதேனும் ஒன்றினைப் பற்றி மட்டும் பேசி அவற்றோடிழைந்த ஒரு திருப்பத்தையும் கொண்டிருக்க...

தவறு -மொழிபெயர்ப்புச் சிறுகதை

நீண்டகாலமாக விமெர்கற்றில் உள்ள தனது நாட்டுப்புறத்து வீட்டில் வாழும் எண்பத்தாறு வயதான பிரபல ஓவியர் லூசியோ பிறெடொன்ஸானி ஓர் காலையில் எழுந்து தனக்கு ஒவ்வொரு நாளும் வருகின்ற தினப் பத்திரிகையைத்  திறந்தபோது பிரமித்துப்...

பிளவு – கார்த்திகைப் பாண்டியன் -சிறுகதை

    உயரமாய் நின்றிருந்த மரத்தேரின் சக்கரங்கள் இறந்தகாலத்தில் உறைந்திருந்தன. செங்குத்தான சூரியனின் கிரணங்கள் வீதியைச் சுட்டெரிக்க தேரின் நிழல் அகலமான அதன் அடிபாகத்தின் கீழ் ஒளிந்து கிடந்தது. உடலில் வழிந்தோடும் வியர்வையைத் துடைத்தபடி ஒரு...

நாபிக் கமலம்

சங்கரபாகம் அவருடைய மகன் வீட்டிற்கு வந்து பதினாறு நாட்கள் ஆயிற்று. கூச்சமில்லாமல் நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார். சில சமயம்  மருமகளோடு ஒரு அவசரத்திற்காக ஒன்றாக உட்கார்ந்து மேஜையில் சாப்பிடும் போது இயல்பாக இருக்க முடியவில்லை. தண்ணீரை...

அயோத்தி

அவன் வீட்டுக்குள் நுழைகிறபோதே, அவனுடைய முகத்தைப் பார்த்ததுமே சந்திராவுக்குத் தெரிந்துபோயிற்று, வெறுங்கையுடன்தான் திரும்பி வந்திருக்கிறான் என்று. குழந்தை மடியில் தூங்கிக் கொண்டிருந்தாள். நிமிர்ந்து அவனையே எரித்துவிடுகிறவளைப் போலப் பார்த்தாள். தலை குனிந்தபடியே உள்ளே...

பெரிய எழுத்து டான் க்விக்ஸாட் கதை -மொழிபெயர்ப்பு சிறுகதை

மூலம்: ரிவ்கா கேரன் (ஹங்கேரி) தமிழில்: எஸ். சங்கரநாராயணன்       ஒரு ஜனவரி மாத  அந்திநேர மயக்க இருள். பேராசிரியரும் அவர் மனைவியும் இஸ்லமொராதா பகுதியின் கடற்கரைப் பக்கமாக  , சாலையோர பயணியர் இல்லத்துக்கு வந்தார்கள். புத்தாண்டுக்...