பெட்டகம்

அச்சு இதழ்களில் மட்டும் பிரசுரமான படைப்புக்களை இணையதளம் மூலமாகப் பரவலான வாசகர்களின் கவனத்திற்கு  கொண்டுச் செல்ல   ‘பெட்டகம்’பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர்களின் அனுமதி பெற்று இப்பகுதியில்  படைப்புகள் வெளியாகும்.

ஆராயி – சிறுகதை

”இப்படியே இருந்தா இதுக்கு என்னதான் முடிவு? இவ பாட்டுக்கு வந்து பத்து நாளா எதுவும் சொல்ல மாட்டீங்கறா. இவள கூப்பிடவும் மாப்ள வீட்டிலிருந்து யாரும் வரல. என்ன சடவுன்னும் வாயத் தொறந்து சொல்ல மாட்டீங்கறா....

அணங்குகொல்? – க. மோகனரங்கன்

  முகத்தில் சில்லென்று தண்ணீர் படவும் எரிச்சலுடன் கண்களை இடுக்கிக்கொண்டு பார்த்தேன். அம்மா சுமந்துகொண்டு போன தண்ணீர்க் குடத்திலிருந்து தளும்பித் தரையில் வழிந்த நீர் சிதறி கன்னத்தில் தெறித்திருந்தது. நான் படுத்திருந்த கூடத்திலிருந்து பார்க்கும்...

மூளையில் பாய்ந்த புல்லட் -மொழிபெயர்ப்பு சிறுகதை

மூலம்: டோபியாஸ் உல்ஃப் தமிழில் : ஜி.குப்புசாமி வரிசை முடிவற்றதாக இருந்தது. வங்கி மூடப்படுவதற்கு சற்று முன்னர் வரையிலும் ஆந்தெர்ஸால் வந்து சேர முடிந்திருக்கவில்லை. இப்போது அவனுக்கு முன்னாலிருந்த இரண்டு பெண்களின் உரத்த, மடத்தனமான உரையாடலால்...

மீண்டும் வாசகர் பங்கேற்பைக் கோரும் மிலன் குந்தேரா!

மிலன் குந்தேராவின் கடைசி நாவல் (Ignorance) வெளியாகி 13 வருடங்கள் உருண்டோடிவிட்டது.  2015 ஜூன் 18ம்தேதி அவருடைய அடுத்த நாவல் The Festival of Insignificance ஆங்கிலத்தில் வெளிவந்தது.  ஃபிரெஞ்சில் ஏற்கனவே 2013ல்...

மயான காண்டம்

செல்லையா பண்டிதனுக்கு, தனது பரம்பரைத் தொழிலான வெட்டியான் தொழிலில்கூடச் சலிப்பு ஏற்படுவது, மயானத்துக்குச் சேர்ந்தாற்போல் ஒரு வாரத்துக்கோ இரண்டு வாரத்துக்கோ பிணமே வந்து விழாதபோதுதான். அந்த மாதிரிச் சமயங்களில், இதுவரையிலும் பரம்பரை பரம்பரையாகச்...

தமிழ் உரைநடை வளர்ச்சி -கட்டுரை

தமிழ் இலக்கியம் முழுவதும் ஐரோப்பியர்கள் வரும் வரையில் செய்யுள் நடையில் இருந்துள்ளது. தமிழ்மொழியில் தனி உரைநடை நூல் இருந்ததில்லை. பண்டைத்தமிழர் செய்யுள் நடையில் மட்டும் நூல் இயற்றி, உரைநடையில் நூல் இயற்றுவதை ஏன்...

புல்நுனிப் பனித்துளியில் பிரபஞ்சம்

                  “ முதலில் வாழ்வதற்காக எழுதத் தொடங்குகிற நாம் நாளடைவில்               சாகாமல் இருப்பதற்காக எழுதுகிறோம் என்பதாக முடிந்து போகிறோம்.”                                                                     - கார்லோஸ் புயந்தஸ் , மெக்சிகன் நாவலாசிரியர்.   பிறப்பு , இறப்பு ஆகிய இரண்டுக்குமிடையேதான் கலைஞனின் உன்னதமான சுயம் உயிர்த் துடிப்போடு வாழ்கிறது. இந்த சுயத்தைத் தேடிக் கண்டுபிடித்து அதனைத் தனது கலையால் – அது எழுத்தாகவோ, ஓவியமாகவோ,...

வெளிய

முள் தோப்பெங்கும் மலநாற்றம். இந்தத் தெருவிலேயே பெரியம்மா தான் முதலில் தோட்டத்துக்குப் போகும். தெருக் குழாயில் ராத்திரி முழுக்க தண்ணீர் மெல்லிசாகச் சொட்டிக் கொண்டிருக்கும். தண்ணீர் பிடிப்பதற்காக பெரியம்மாவுக்கு விடியற்காலை இரண்டு மூன்று...

பஷீரிஸ்ட்- சிறுகதை

திருச்சியிலிருந்து திண்டுக்கல் வரையிலான இரண்டு மணி நேரப் பிரயாணம் சலிப்பூட்டுவதாக  உணர்ந்த அடுத்த கணம், தொடர்ந்து இதே பேருந்தில் பழனி வரை செல்வது என்று ஏற்கனவே எடுத்திருந்த முடிவை இவன் மாற்றிக் கொண்டான்....

கிணறு – சிறுகதை

அந்தக் கிணறு எனக்குத் தெரிஞ்ச காலத்திலிருந்தே அங்க தான் இருக்கிறது. கவர்மெண்ட் கெணறு என்டு சொல்லிக் கேட்டிருக்கிறேன். கவர்மெண்ட் என்றால் அரசாங்கம் என்று அப்ப தெரியாது. எங்கட ஊட்டுக்கு முன்னால் ஒரு பேக்கரி...