அமெரிக்க இலக்கியச் சிறப்பிதழ்

வென் தீவில்..

“எலனர், இதைக் கவனி! ‘கதிரவன் அஸ்தமித்துவிட்ட அந்த மாலையில் வழக்கம்போல நான் வானத்து நட்சத்திரங்களைக் கவனித்து சிந்தித்துக் கொண்டிருந்த போது ஒரு புதிய நட்சத்திரம், மற்ற எல்லா நட்சத்திரங்களையும் விட பிரகாசமாக என்...

நீங்கள் ஏன் நடனமாடக்கூடாது

சமையலறையில் இன்னொரு கோப்பையை நிரப்பிக்கொண்டு வெளிமுற்றத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த படுக்கையறை சாதனைங்களைப் பார்த்தான். மெத்தை தனியாகவும் அதன் பட்டாபட்டி உறை தனியாகவும் ஒப்பனை மேசை மீதிருந்த இரண்டு தலையணைகளுக்குப் பக்கத்தில் இருந்தன. இவற்றைத்...

ரயில் வரும் நேரம்

ரயிலடி நடைமேடையில் எல்லோரும் வரும் வண்டியை எதிர்பார்த்தும், கூர்ந்து கேட்டுக்கொண்டும் இருந்தனர். ரயிலின் ஊதலொலியைக் கேட்டதாக யாரோ சொன்னார்கள். எல்லோரும் கீழ்த்திசை நோக்கி பார்த்துக் கொண்டும் உற்று கேட்டுக் கொண்டுமிருந்தனர். மரங்களடர்ந்த கிழக்கு...

டெட் கூசர் கவிதைகள்

பிறை நிலா எவ்வளவு அது தன் முதுகில் சுமந்தே ஆகியிருக்க வேண்டும், அந்த நீல நிழலான ஒரு மகத்தான பந்து என்றாலும் அது எப்படியோ பிரகாசிக்கிறது, ஒரு தோற்றத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது. இன்றிரவு பல மணி...

எலிஸபெத் பிஷப் கவிதைகள்.

காத்திருப்பு அறையில் மாசசூசெட்ஸின் வொர்சஸ்டரில், பல்மருத்துவரைப் பார்க்கச் சென்ற அத்தை கன்சூலோவுடன் நானும் சென்றிருந்தேன். அவள் மருத்துவரைப் பார்த்துவிட்டு வரும்வரை காத்திருப்பு அறையில் அமர்ந்திருந்தேன். அது பனிக்காலம். சீக்கிரமே இருட்டி விட்டிருந்தது. காத்திருப்பு அறை முழுக்க பெரியவர்களே நிரம்பியிருந்தனர், கணுக்கால் வரை உயர்ந்த காலணிகளும்...

ஒரு தற்கொலைக்கு மிகச் சரியான நாள்

அந்த  ஹோட்டலில் இருந்த 97 நியுயார்க் விளம்பரப் பிரதிநிதிகளும் தொலைதூர அழைப்புகளை முற்றுரிமையாக்கிக் கொண்டிருந்த விதத்தால், அறை 507-ல் இருந்த பெண், பிற்பகல் 2.30 வரை அவளது அழைப்புக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது. எனினும்...

அவனைப் பார்க்கச் செல்கிறேன்

“என்ன ஆச்சு?” அவள் கேட்டாள். “எனக்குத் தெரியலை,” சிரிக்க முயன்றபடி சொன்னான். “நான் கொஞ்சம் சோர்வாக இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.” “நீங்கள் உங்கள் வேலையில் மிகக் கடினமாக உழைக்கிறீங்க” என்று சொன்னாள். “நான் உங்ககிட்ட பலமுறை...

மென்சாரல் மழை பொழியத் துவங்கும்

வரவேற்பறையில் குரல் கடிகாரம் இசைத்தது, டிக்-டாக், ஏழு மணி, எழுந்திருக்கும் நேரம், எழுந்திருக்கும் நேரம், ஏழு மணி! யாரும் எழுந்திருக்க மாட்டார்களோ என்ற பயத்தில் அது ஒலிப்பது போலிருந்தது. காலையில் வீடு காலியாகக்...

கேப் காட் நுவார்: ஒரு விடுமுறையும் ஒரு புத்தகமும்

மகனைச் சந்தித்தோ விடுமுறை பயணம் மேற்கொண்டோ ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. தடுப்பூசிச் சடங்குகளை முழுதாக செய்துமுடித்தது அதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைப்பதற்கான ஒரு மங்கலத் தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. பாஸ்டனில் எங்களுடன் சில...

லூயிஸ் க்ளக் கவிதைகள்

1,ஏதுமின்மையின் தனிமை இருள் நிறைந்திருக்கிறது மழைக்கண்ணால் பார்க்கையில் மலை தெரியவில்லை இங்கு ஒரே மழை சத்தம் அதுதான் வாழ்வை இயக்கிக் கொண்டிருக்கிறது மழையோடு குளிரும் சேர்ந்துவிட்டது இவ்விரவில் நிலவுமில்லை விண்மீன்களுமில்லை காற்று இரவில் உயிர்கொண்டிருக்கிறது எல்லா காலையிலும் அது கோதுமையைச் சாய்த்தபடி வீசிக்கொண்டிருந்தது பிறகு நண்பகலில் நிறுத்திக்கொண்டது ஆனால்...