மொழிபெயர்ப்புக் கவிதைகள்

பேட்ரிக் கவனாஹ் கவிதைகள்

என் தந்தையின் நினைவாக நான் காணும் ஒவ்வொரு வயதான மனிதரும் என் தந்தையை  நினைவூட்டுகின்றனர் ஒருமுறை அவர் புற்கட்டுகளை  அடுக்கிக்கொண்டிருந்தபோது மரணத்தோடு காதலுற்றார். கார்டினெர் சாலையில் நான் காணும், நடைபாதை கல்மீது தடுமாறிச்செல்லும் அம்மனிதர் தன் பாதிக்கண்களால் என்னை முறைத்துப்பார்த்தபடி இருந்தார் ஒருவேளை நான்...

கவிஞனின் எழுதுமேசை

அதுவொரு பழைய மர எழுதுமேசை, என்னுடைய பாட்டனாரிடமிருந்து முதுசமாகக் கிடைத்தது. என்னுடைய பாட்டன் ஒரு ‘விஞ்ஞான’  மனிதர்.அவர் ஒரு போதும் தன்னுடைய மகனை ஒரு கவிஞனாகக் கற்பனை செய்திருக்க மாட்டார். பல வருடங்களூடு நடந்து...

யான் காப்லின்ஸ்கி கவிதைகள்

மொழி பெயர்ப்பு :வே.நி.சூர்யா 1 எப்போதும் இங்கும் எங்கும் உள்ளது அமைதி; சிலசமயங்களில் சாதாரணமாய் நாம் கேட்கிறோம் அதை மிகத்தெளிவாக: புல்வெளியை போர்த்திக்கொண்டிருக்கிறது பனி, களஞ்சியத்தின் கதவோ திறந்தபடி, மேலிருந்து பாடிக்கொண்டிருக்கிறது வானம்பாடி; எல்ம் மரக்கிளையை இடையறாது வட்டமடிக்கிறது ஒரு வெளுத்த அந்துப்பூச்சி; அம்மரக்கிளையோ புலப்படாதவாறு இன்னும் அசைந்துகொண்டிருக்கிறது...

லூயிஸ் க்ளக் கவிதைகள்

1,ஏதுமின்மையின் தனிமை இருள் நிறைந்திருக்கிறது மழைக்கண்ணால் பார்க்கையில் மலை தெரியவில்லை இங்கு ஒரே மழை சத்தம் அதுதான் வாழ்வை இயக்கிக் கொண்டிருக்கிறது மழையோடு குளிரும் சேர்ந்துவிட்டது இவ்விரவில் நிலவுமில்லை விண்மீன்களுமில்லை காற்று இரவில் உயிர்கொண்டிருக்கிறது எல்லா காலையிலும் அது கோதுமையைச் சாய்த்தபடி வீசிக்கொண்டிருந்தது பிறகு நண்பகலில் நிறுத்திக்கொண்டது ஆனால்...

ஹென்றி பர்லாண்ட் கவிதைகள்

1) முன்னொரு காலத்தில் வருந்தினேன் முன்னொரு காலத்தில் நான் வருந்தினேன் ஒல்லியாகவும் வியாபார நுண்ணறிவு இல்லாதவனாகவும் தென்பட்ட ஒரு மனிதனுக்காக பிறகொரு நாள் நாங்கள் அடுத்தடுத்து அமர்ந்திருந்தோம் அதே கண்ணாடியின் முன்பாக 2) பெரியதொரு மனவெழுச்சியினின்றும் நான் வெளியே வந்தேன் பெரியதொரு மனவெழுச்சியினின்றும் நான் வெளியே வந்தேன் ஒருவருக்கும் என்னை அடையாளம்...

மார்க் ஸ்ட்ராண்ட் கவிதைகள்.தமிழாக்கம் – வே.நி.சூர்யா

1.பைசாசக் கப்பல்நெரிசலான வீதியினூடேஅது மிதக்கிறது,அனுமானிக்கயியலாத அதன் கொள்ளளவோ காற்றைப் போல.அது நழுவுகிறதுசேரிகளின் சோகத்திலிருந்துபுறநகர் நிலங்களுக்கு.இப்போது,எருதுகளைக் கடந்து,காற்றாலையைக் கடந்து,மெதுவாக அது நகர்கிறது.ஒருவராலும் கேட்க இயலாதபடிக்கு,இரவினூடே செல்கிறது சாவின் கனவு போல.நட்சத்திரங்களுக்குக் கீழ்அது திருடுகிறது.அதன் பயணிகளும்...

ஜப்பானிலிருந்து சில கவிதைகள்

I ஷன்டாரோ தனிக்காவா (Shuntaro Tanikawa, 1931- ) டோக்கியோவில் பிறந்தவர். ஜப்பானின் முன்னோடிக் கவிஞர்களில் ஒருவர். அறுபதுக்கும் மேற்பட்ட தொகுதிகளை வெளியிட்டுள்ளார். சிறார் இலக்கியம் சார்ந்து தொடர்ச்சியாக பங்களித்துவருபவர். தனிக்காவா பெரியவர்களுக்குள் உள்ள...

ஜிபனானந்த தாஸ் கவிதைகள்

வங்காள மூலம் : ஜிபனானந்த தாஸ் ஆங்கிலம் : சிதானந்த தாஸ் குப்தா தமிழில் : கு.அ.தமிழ்மொழி எனக்குப் பெயரிடுங்கள் எனக்குப் பெயரிடுங்கள் சிறந்த, எளிய, வான் போல் பரந்த சொல்லால் எனக்குப் பெயரிடுங்கள் அந்தச்சொல் நான் என்றென்றும் நேசிக்கும் பெண்ணின் நன்கறிந்த கைபோல...

அமீரி பராக்கா கவிதைகள்.

சம்பவம் அவர் எங்கிருந்தோ திரும்பி வந்து சுட்டார். அவனைச் சுட்டுக் கொன்றார். அவர் திரும்பி வந்தபோது,   சுட்டார், அவன் தடுமாறினான், விழுந்தான். இருள்காட்டைக் கடந்து, கீழே, சுடப்பட்டு, இறந்துகொண்டு,  இறந்து, முற்றும் முழுமையான முடிவுக்குப்...

சார்லஸ் சிமிக் கவிதைகள்

ஓவியத் திரைச்சீலை அது சொர்க்கத்திலிருந்து பூமிக்குத் தொங்குகிறது. அதில் மரங்கள் உள்ளன, நகரங்களும் நதிகளும் பன்றிக்குட்டிகளும் நிலவுகளும் உள்ளன. ஒரு மூலையில், முன்னேறும் குதிரைப்படையின் மீது பனி பொழிகிறது. இன்னொரு மூலையில் பெண்ணொருத்தி நெல் நடவு செய்து...