Tag: கனலி சிறப்பிதழ் 1

கனலி கலை இலக்கிய இணையதளத்தின் சிறப்பிதழ்.!

முத்தம்

ச் முருகேசு அவனது வழக்கமான இடத்திற்கு வந்து காத்திருந்தான். நடுவில் ஊஞ்சமரம் ஒன்றைக் கொண்ட சிறுபுதர் அது. சங்கமுள் செடி ஒன்று அடர்ந்த இலைகளோடு வளர்ந்து மரத்தின் கழுத்துவரை மூடியிருந்தது. அதன்மேல் கோவைக்கொடிகள் ஏறியிருந்தன....

ஒற்றைப் பயணி வரும் ரயில் நிலையம்

பிற்பகலில் பனி விழத் தொடங்கியது. இலை உதிர்த்து குச்சிக் கிளை நீட்டிய சிறு செடிகளும், அடர்ந்து வளர்ந்து வெட்டப் படாமல் தலை சாய்த்திருந்த பசும் புல்வெளிகளும் வெண்மை அணிந்தபோது ரயில் வந்தது. சாம்பல்...

யோகம்

வெகுநாட்களுக்குப் பிறகு நாம்பள்ளி ரயில் நிலையத்தில் அனந்தன் சாமியைப் பார்த்தேன். சாமிதானா? சற்றே தயக்கத்துடன் அருகில் சென்றேன். அடுத்திருந்த இருக்கையில் அமர்ந்து உற்றுப் பார்த்தேன். மழிக்கப்பட்ட தலையில் முட்களைப்போல் நரைமுடி. அடர்த்தியான தாடி....

தேவதேவன் கவிதைகள்

பெருவெளியில் தரையும் கூரையும் நான்கு சுவர்களுமில்லாத பெருவெளியில் அழிந்துபோகக்கூடிய தரையும் கூரையும் நான்கு சுவர்களுமாய் ஒரு வீடு வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஆங்கே தவழ்வதோ அழியாப் பெருவெளியைத் தாயகமாகக் கொண்டதாம் அன்பு கருணை அறம் மெய்மை என ஒளிரும் தேவதைகள்! சின்னஞ் சிறிய மலர் குத்தவைத்துக் குனிந்து பார்க்கவைத்தது...

பூமாரியின் இன்றைய பொழுது – சு.வேணுகோபால்

தாழைப் பள்ளத்திலிருந்து மேலேறி 'ல' வளைவு வரவும் கனத்த வேப்பமரத்தடியில் முருகேசன் இல்லை என்பது தெரிந்தது. அவன் வந்திருக்கக்கூடாது என்றுதான் வேகவேகமாக நைலான் சாக்குப் பையைக் கக்கத்தில் சுருட்டி வைத்தபடி வந்தான் பூமாரி....

சார்லஸ் சிமிக் கவிதைகள்

ஓவியத் திரைச்சீலை அது சொர்க்கத்திலிருந்து பூமிக்குத் தொங்குகிறது. அதில் மரங்கள் உள்ளன, நகரங்களும் நதிகளும் பன்றிக்குட்டிகளும் நிலவுகளும் உள்ளன. ஒரு மூலையில், முன்னேறும் குதிரைப்படையின் மீது பனி பொழிகிறது. இன்னொரு மூலையில் பெண்ணொருத்தி நெல் நடவு செய்து...

ஸ்ரீநேசன் கவிதைகள்

சூரியனுடன் வருவேன் நான் இங்கிருப்பேன் இதே நேரம் ஏதோ மலையேறிப் பாதி வழியில் ஒரு பாறைமேல் தங்கியிருப்பேன் மன்னியுங்கள் உங்களை இளங்கதிரில் வரச் சொல்லி இப்படி எங்கென்றே தெரியாமல் எங்கேயோ போய்க் கொண்டிருப்பதற்கு நீங்கள் பழியுரைக்கவோ நான் பொறுப்பேற்கவோ...

உமா மகேஸ்வரி கவிதைகள்

சூரியன் ஒளிரும் திரைகள் வாகன கீதம் நொறுங்கிய வளர் பிறை பத்திரமாயிருக்கிறது மல்லிகைச் சரத்தருகே இருள் தித்திக்கும் மரங்கள் சோம்பல் முறிக்கும் காலை அங்கே ஏனோ பூக்காத மஞ்சள் மலர்கள் இங்கே எங்கெங்கும் பூத்துக் கிடக்கின்றன...உடைந்த ஒரு மனதில் சிராய்தததோ ஒரு  சொல் சிலாம்பு துடைத்தும் போகாதது. இம் முறை ஒரே...

குறுங்கதைகள் -லிடியா டேவிஸ்

அந்த நாயின் ரோமம் அந்த நாய் இல்லை. நாங்கள்  அதை நினைத்து ஏங்கினோம். வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கும் போது  குரைக்கும் ஒலியில்லை. நாங்கள் தாமதமாக வீட்டுக்கு வரும்போது எங்களுக்காக யாரும் காத்திருக்கவில்லை. அவனுடைய...

கட்டியங்காரனின் கூற்று

ஒரு சித்ரா பௌர்ணமியன்று நானும் சா.தேவதாஸும் கூத்தாண்டவர் கோவில் சென்றிருந்தோம்.  பேருந்தில் அமர்ந்திருந்த எங்களைச் சுற்றிலும் அரவாணிகளே நிரம்பியிருந்தனர். இதுவரை காணாத புதிய கிழ அரவாணிகள் முதல் சிறிய குழந்தை அரவாணிகள் வரை...