ஸ்ரீநேசன் கவிதைகள்
நினைவஞ்சல்
தபால்காரர் ஊரில் நுழைகிறார்
சைக்கிள் மணியொலிப்பில்
சார் போஸ்ட் என்ற அழைப்பிழைய
வீட்டு வாசலில் ஞாபகத்தின் புறா
நிகழைத் தொட்டுச் சிறகடிக்கிறது
கழனிக் காட்டிலிருந்தவாறு
கடிதத்தை வாங்க கைநீட்டியதும்
போன நூற்றாண்டின் கடிதத்தை
இந்த நூற்றாண்டின் கைகளில்
கொடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டார்.
செல்வம் தேய்க்கும் படை
கண்ணீர்த் துளிகளின் கேவல்
உங்களைச்...
செல்வசங்கரன் கவிதைகள்
லலிதா அக்கா
எனக்குச் சின்ன வயதில் பக்கத்து வீட்டில்லலிதா அக்கா இருந்தார்எனக்குச் சின்ன வயதில் ரயிலில் மோதி அவர் இறந்து போனார்எனக்குச் சின்ன வயதில் அவருக்கு கவிதா மஞ்சு என இரண்டு மகள்கள்எனக்குச் சின்ன...
ஆனந்த்குமார் கவிதைகள்
ஒரு சந்திப்புஒரு பிரிவு
ஓர் இரவுஒரு பகல்பூமியைஎதனுடன் தைக்கிறதுஇந்தச் சூரியன்
ஒரு சந்திப்புஒரு பிரிவுயாருக்காக நெய்யப்படுகிறதுஇந்த ஆடை
வலைபோல் அல்லஇன்னும் இன்னும்நெருக்கமாகமணித்துளியும் ஒழுகாதவெளிபோல
அனைத்தையும் போர்த்தி மயக்கிமுடிவற்று ஆடும் இத்துணியில்யாரும் சேர்க்கவில்லைஆனாலும்எப்படித் தோன்றினகாதலின் வண்ணங்கள்.
நீருள் எரிவது
இவ்வளவு அருகில்நீ இருக்கும்போதுஎன்னால்...
அதிரூபன் கவிதைகள்
1. நொய்யல் ஆறே நொய்யல் ஆறே (அ) தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி
வாசனை மரங்கள் நீரில் பேசிவரும் ரகஸிய மூச்சின் இழை
அதன் நாமத்தை அழைக்கும் உடம்பின் உப்பு
சிற்றாற்றுப் பொடிகளை உணவில் தூவி
காட்டைத் திரிக்க பெரிய...
க.மோகனரங்கன் கவிதைகள்
1)சிறிது வெளிச்சம்
எண்ணும் போதெல்லாம்எடுத்துப் பார்க்கஏதுவாகப்பணப்பையினுள்பத்திரப்படுத்திவைத்திருக்கிறேன்,கடந்தகால மகிழ்ச்சியின்அடையாளமாகஅந்தக் கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தை.மறதியின்மஞ்சள் நிறம் படர்ந்துமங்கிவிடாதிருக்க வேண்டிமனதின்இருள் மறைவில்,நிதமும் அதைநினைவின் ஈரத்தில்கழுவியெடுத்துக்காயவைப்பேன்.வயோதிகத்தின் நிழல்கள் கவிந்துகனவுகளின் வர்ணங்கள்மெல்ல வெளிறத் தொடங்கும்இம் மத்திம வயதிலும்ஒரு பொழுது வாழ்ந்தேன் என்பதன்...
கலீலியோவின் இரவு
சுல்தான் ஸைன் உல் அபீதின் அழிவை முன்னறிவித்த
நட்சத்திரம் தோன்றி மறைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன.
வெள்ளம் கோபுரங்களை மூழ்கடித்தது, கூறப்பட்டதைப் போலவே
இளநீர் கூடுகளுடன் மணிமகுடங்கள் மிதந்து செல்ல
ஒன்றடுத்தொன்றாய் பால்பற்களென வீழ்ந்தன பேரரசுகள்.
முன்னை கிழக்கில் இருந்து கிளம்பிய...
ந.பெரியசாமி கவிதைகள்
பூனை
விந்தி நடக்கிறது பூனை
தவறுதலாக
கால் ஒன்றை குறைச்சலாக்கி
வரைந்துவிட்டேன்.
எங்களுக்குள் இயல்பாகியது
அது முறைப்பதும்
நான் மன்னிப்பு கேட்பதும்.
விரையும் வேறு பூனை பார்க்க
அதன் கண்கள் நெருப்பாகிடும்
அப்பொழுது கிண்ணத்தில்
பாலை நிரப்பி அமைதி காத்திடுவேன்.
இன்று மறக்காமல்
வரைபடத் தாள்களையும்
எழுது உபகரணங்களையும்
எதிர் இல்ல சிறுமிக்கு
அன்பளிப்பாக்கினேன்
மென்மையை ஏந்திக்கொண்டு
பதுங்கிப்...
தேவதேவன் கவிதைகள்
அபிநயம்
அவன் எப்படித் தான் கண்டதைக்கூறாமலே தவிர்ப்பான்,இந்த உலகிற்கு,இலைகளுதிர்ந்து பட்டுப்போனகிளைச் சுள்ளி ஒன்றும்அபிநயித்ததே அதை?
இளைப்பாறல்
போராளிகளும் இளைப்பாறிக் கொண்டிருக்கிறார்கள்,தோழமையின் நிழலில்.
ஒவ்வொரு மனிதனையும்
ஒவ்வொரு மனிதனையும்அவன் தன்னந்தனியாகவேதான்சந்திக்க விரும்புகிறான்.காதலர்கள் தங்கள் காதலர்களைத்தன்னந்தனியாகவேதானேசந்திக்க விரும்புகிறார்கள்?
கடவுளும் சாத்தானும்
அய்யா, நீங்கள் இந்தஇந்தியப் புண்ணிய...
வெள்ளை நிறக்காலம்.
நோயின் வாசலில் நின்று அல்லது கதவின்
மறு புறம் நின்று
அல்லது அழகான சொற்சேர்க்கையின் நடுவிலிருந்து
அவர்கள் அவனை வழியனுப்புகிறார்கள்
பழைய கிட்டாருக்கெல்லாம் உள்ளே அனுமதி கிடையாது
சுகவீனம் இழந்த தோற்றத்தை கண்ணுறும் குழந்தைகள்
அம்மையின் பின்னே கடவுளைப்போல ஒளிந்துகொள்கிறார்கள்.
பீடித்திருந்த நோய்மையோ...
ச.துரை கவிதைகள்
செம்மந்தி
கிழவி தனது விற்பனை மீன்களுக்குத்
தானாகவே புதுப் பெயரிடுவாள்
தரிசு தாண்டி சர்ச் போகும் வழியே
அந்தக் கூடையை தூக்கித்தாவென்றாள்
என்ன மீனென்று கேட்டேன்
செம்மந்தி என்றாள்
வித்தியாசமான பெயர்
உச்சரித்துக்கொண்டே கரையில் நிற்கிறேன்
அதைக் கேட்டதும் கடல் தனது உடலை
பாத்திரத்தைப் போல...















