செல்வசங்கரன் கவிதைகள்

லலிதா அக்காஎனக்குச் சின்ன வயதில் பக்கத்து வீட்டில்லலிதா அக்கா இருந்தார்எனக்குச் சின்ன வயதில் ரயிலில் மோதி அவர் இறந்து போனார்எனக்குச் சின்ன வயதில் அவருக்கு கவிதா மஞ்சு என இரண்டு மகள்கள்எனக்குச் சின்ன...

உமா மகேஸ்வரி கவிதைகள்

சூரியன் ஒளிரும் திரைகள் வாகன கீதம் நொறுங்கிய வளர் பிறை பத்திரமாயிருக்கிறது மல்லிகைச் சரத்தருகே இருள் தித்திக்கும் மரங்கள் சோம்பல் முறிக்கும் காலை அங்கே ஏனோ பூக்காத மஞ்சள் மலர்கள் இங்கே எங்கெங்கும் பூத்துக் கிடக்கின்றன...உடைந்த ஒரு மனதில் சிராய்தததோ ஒரு  சொல் சிலாம்பு துடைத்தும் போகாதது.இம் முறை ஒரே...

வே.நி.சூர்யா கவிதைகள்

1.மாபெரும் அஸ்தமனம்அந்திவானில் மகத்தான ரத்தத்துளி அதன் ஒளிப்பரிவாரங்களோடு அஸ்தமனமாகிக் கொண்டிருக்கிறது அனிச்சையாக என்னை நான் தொட்டுப்பார்க்கிறேன் ஆ! காற்றை தீண்டுவது போல அல்லவா உள்ளது தொடுகையுமில்லை தொடப்படுவதுமில்லை வேறெதுவோ நான்.. ஒரு வீட்டில் வசிப்பவனை மாதிரி எனக்குள் இருக்க வேண்டிய நான் எங்கே ஒருவேளை...

ஔஷதக் கூடம்

அப்பாவுக்கு புற்றுதானாம். உறுதியாகிவிட்டது. மூப்பின் பொருட்டு இரண சிகிச்சையை நிராகரித்துவிட்டார் மருத்துவர். சங்கதி தெரியாமல் பேத்தியின் பிரதாபங்களில் தோய்கிறார் அப்பா. கதாபிரசங்கியின் துடிமேளக்காரனாக அப்பாவின் பேச்சுக்கெல்லாம் பக்கத்துப் படுக்கைக்காரர் முகிழ்நகை செய்கிறார். அவரது தொண்டையில் துளையிட்டிருக்கிறார்கள்.இப்போது எப்படி இருக்கிறது? ’பரவாயில்லை’ ’காற்றோட்டமில்லை .... நல்ல படுக்கையில்லை’ ’பரவாயில்லை’ ”செவிலியர் இல்லை ......மருந்து போதவில்லை’ ’பரவாயில்லை..... பரவாயில்லை’ ’வலி மிகும்...

தினகரன் கவிதைகள்

சற்று முன்பே பார்த்துவிட்டேன் உடம்பு முடியாமல் கிடக்கிறஅவனுடைய வீட்டிற்குப்போகிற வழியில்உதிர்ந்து என் மீது விழுந்ததுபழுத்து,பச்சைக் காணாது போய்நடுநரம்பில் கடமைக்கெனஒட்டி இணைந்திருக்கும்கிளை நரம்புகளைக்கொண்டதொரு இலை.அதை உதறிவிட்டுநடந்து நடந்துஇந்தக்கதவைத் தட்டினேன்இருமியபடிசட்டை அணியாமல்கதவைத் திறந்த அவனைசற்று முன்புதான்எங்கோஉதறிவிட்டதுபோல இருந்தது  கருணையில்லாத...

கலீலியோவின் இரவு

சுல்தான் ஸைன் உல் அபீதின் அழிவை முன்னறிவித்த நட்சத்திரம் தோன்றி மறைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. வெள்ளம் கோபுரங்களை மூழ்கடித்தது, கூறப்பட்டதைப் போலவே இளநீர் கூடுகளுடன் மணிமகுடங்கள் மிதந்து செல்ல ஒன்றடுத்தொன்றாய் பால்பற்களென வீழ்ந்தன பேரரசுகள். முன்னை கிழக்கில் இருந்து கிளம்பிய...

சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகள்

1.சொன்னபடியே ஒரு மழைக்காலம்ஒரு நிழலுமற்றநம் மரங்களும் வாடிவிட்டனமழைக்காலம் சமீபத்தில் இருப்பதன்அறிவிப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றனநம் சிறிய இனிப்புகளைமுன்பு போலவேபாதுகாக்க இம்முறையும் முயன்றோம்இம்முறையும் நம் இனிப்புகள்கரைந்துவிட்டனசொன்னபடியே ஒரு மழைக்காலம்பெய்யத் தொடங்கியிருக்கிறதுஒரு நிழலுமற்றநம் மரங்களின் மேல்.....2....

நல்லடக்கம் மறுக்கப்பட்ட ஆன்மாக்கள்

மடிநிறைய குட்டிகளைச் சுமக்கும் நிறைமாத கர்ப்பிணியாய் எதிர்ப்புக்களற்றுச் சுணங்கிக்கிடக்கிறது துணையிழந்த பேருந்து நிறுத்தம்.கிழிந்து கிடக்கும் தார்ச்சாலை தன் அடிவயிற்றிலிருந்து உலர்ந்துபோன பால்மடியின் வாசத்தைப் பேரிரைச்சலோடு அலையும் கனரகக்காற்றில் கலந்து வீசுகிறதுடிபன் கேரியர் வைக்கும் கூடையில் சாலைக்கும் பேருந்து நிலையத்திற்குமாய் அலைமோதும் குட்டிகளை பெரும் இரைப்போடு அள்ளி நிரப்புபவன் ஒவ்வொரு...

பயோ வார்

இறக்கப்போகிறேன் எதனால் இறப்பேன் என்பதை அறிந்து விடுபடுதல் ஆகத்துயரம் உங்களிடம் சொல்லிப் போகிறேன் பிறந்து ஒருவாரமான பச்சிளம்குழந்தையை விட்டுப் போகிறேன். விரிசலில்லாத பழுத்தக் காதலை விரிந்த மேகத்தில் பதித்து மெல்ல மெல்ல கனிச்சாறு என் இதயத் திரட்சியில் கனக்கச் செய்த காதல் கணவரை விட்டுப்போகிறேன். கரம்கொடுப்பேன் என மூளையின் சிவந்த...

கம்மா > மடைகள் > வாமடை

கம்மா காய்ந்த தென்னம்பாளைப் பிளவுக்குள்தனித்தனி மழைகள் சேர்ந்து தேங்கியதுபடகினுள் மிதக்கும் சமுத்திரமென தெரிந்தது.தளும்பும் சமுத்திரக் குட்டியென்றுஎனது கையின் பதினோறாவது குறுவிரல் வியப்பானது.பாளையை மாதிரியாக வைத்துசந்ததித் தொடர்ச்சியாய்வெட்டாத நகங்களால்சமுத்திரத்தின் குட்டியான கம்மாவைத் தோண்டினேன்.கருவாச்சி மடை கொடியறுக்காத சிசுவாய்கருவுக்குள் நானிருக்கையில்பால்சோறு பிசையும் கிண்ணத்தின் அளவே...