பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்

1) காலம்போன காலம் அதிகாலை குளிரில் அலுவலகம் கிளம்புகையில் நாயொன்று கண்முன்னே சாவகாசமாய்த் திரிகிறது நாயென்றால் வெறும் நாய் ஒரு நொடியென்பது ஒரு மணிநேரம்போல் முன்னங்கால் நீட்டி சோம்பல் முறிக்கும் அதன்மீது ஏன் இவ்வளவு வன்மம் பெருக்கெடுக்கிறது வேகமாய் வெறுங்கையை வீசுகிறேன் நாய் கற்பனை செய்துகொண்ட அந்த...

கதை

'அந்தக் காலத்தில் போர்வெல் முதலாளியை மிகவும் சோதித்தன ஊற்றுகள். ஒளிரும் ஆபரணங்களோடு இயந்திர முனையில் தன்னையே பொருத்தி பூலோகத்தை ஆழத் துருவி ஊடுருவினார். அவர் இறங்க இறங்க ஊற்றுகளும் பதுங்கின. விடியலில் மேலே வந்த இயந்திரத்தில் முதலாளி இல்லை. மூவாயிரம் ஆண்டுகள் கழித்து தொல் எச்சமான முதலாளியே நமக்கு நாட்டார் தெய்வமானார்' பயண...

உணவெனும் கலை

வாத்துகளாயிரம் அல்லிகளாய் மலர்ந்திருக்க குருவியின் சிறுமனை கிளைகளில் நிலவாய் தொங்கும் ஆற்றின் அருகமர்ந்து தீ பொசுக்கும் கறியிலிருந்து சொட்டும் எண்ணை எச்சிலாகி உடலை நனைத்த கதையைச் சொல்லியவாறு குடல், ஈரல், தொடைக்கறியென பந்தி விரித்து பாங்காய் இது பக்கோடாவென பொட்டலம் பிரித்த ததும்பும் பிரியங்களால் மாட்டுக்கறியின் ருசியை அரூரில் சுவைக்கக் கற்றேன். ஆம்பூர்,...

வெள்ளை நிறக்காலம்.

நோயின் வாசலில் நின்று அல்லது கதவின் மறு புறம் நின்று அல்லது அழகான சொற்சேர்க்கையின் நடுவிலிருந்து அவர்கள் அவனை வழியனுப்புகிறார்கள் பழைய கிட்டாருக்கெல்லாம் உள்ளே அனுமதி கிடையாது சுகவீனம் இழந்த தோற்றத்தை கண்ணுறும் குழந்தைகள் அம்மையின் பின்னே கடவுளைப்போல ஒளிந்துகொள்கிறார்கள். பீடித்திருந்த நோய்மையோ...

பா.ராஜா கவிதைகள்

1)இதய வடிவ பலூன். வெறுங்காலுடன் மலையுச்சியை அடைந்தது சிரமம் தான் என்றாலும் உயரப்பறக்கும் இதய வடிவிலான பலூன் கையிலிருந்ததால் பெரிதாய் ஏதும் அயற்சியில்லை அல்லது அது கூட இங்கு தூக்கிக்கொண்டு வந்திருப்பதாய் கற்பனை செய்துப் பார்க்கலாம் இதயத்தையும் கிட்டத்தட்ட அந்த பலூனைப்போல பரிசளிக்க நினைத்தால் அடிவாரத்திலிருந்தா கையை நீட்டுவது. 2)கடகம். உலக புன்னகை தினம் என்று ஒன்று இருப்பதை...

நல்லடக்கம் மறுக்கப்பட்ட ஆன்மாக்கள்

மடிநிறைய குட்டிகளைச் சுமக்கும் நிறைமாத கர்ப்பிணியாய் எதிர்ப்புக்களற்றுச் சுணங்கிக்கிடக்கிறது துணையிழந்த பேருந்து நிறுத்தம். கிழிந்து கிடக்கும் தார்ச்சாலை தன் அடிவயிற்றிலிருந்து உலர்ந்துபோன பால்மடியின் வாசத்தைப் பேரிரைச்சலோடு அலையும் கனரகக்காற்றில் கலந்து வீசுகிறது டிபன் கேரியர் வைக்கும் கூடையில் சாலைக்கும் பேருந்து நிலையத்திற்குமாய் அலைமோதும் குட்டிகளை பெரும் இரைப்போடு அள்ளி நிரப்புபவன் ஒவ்வொரு...

உப்பளத்து கால்கள்

அவளது வியர்வைத் துளிகள் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன இந்த கடலை விட பெரிதாக இந்த கற்களை விட உறுதியாக சமயங்களில் அவள் உப்புக்கரிக்கும் வியர்வைகளை உற்பத்தி செய்கின்றாள் அவள் தனது நீராகாரத்தில் அதனைக் கொண்டே ருசியைக் கூட்டுகிறாள் அவளின் உதடுகள் வெடித்த பனிப்பாறையை நினைவூட்டுகின்றன அயற்சியால் தன்னிச்சையாக நாக்கு ஈரமாக்கிட பற்கள்...

தொழுவத்து மருத்துவக் குறிப்புகள்

1 தைப்பனிக்குள் அசைந்தாடும் மாமரத்தை மேய்ந்துகொண்டிருக்கிறது மாடு சற்று தூரத்தில் சாரணத்தி வேர்களை கோணிப்பையில் சேமித்தவன் கல்லெடுத்து கிளையின்மீது எறிகிறான் அதிர்ந்து பார்த்த மாட்டின் கண்களில் செம்மஞ்சள் துவரை. சூரியன் உதிர்ந்த மாலையில் உரலைப் பின்னும் கயிறு பனிக்காலத்தில் வெடித்த மடிக்காம்புகளை நெய்யும் வெண்ணையும் துழாவும் 2 தோட்டிகுளத்தில் உலாவரும் மேகங்களை உறிஞ்சிக்...

தி.பரமேசுவரி கவிதைகள்

தப்பித்தல் அனுமதியின்றி என் வீட்டில் சிலர் என் முன்னால் அமர்ந்து உறுத்து நோக்கும் விழிகளைக் காண முடியவில்லை யாரோ என்னை வெறிக்கின்றனர் அழைக்கின்றனர் கடக்கின்றனர் அவர்களுக்கு அழுகை என்று பெயர் சூட்டினேன் தப்பிக்க முயன்றால் எப்போதும் சிக்கிக் கொள்வேன் என் உறக்கத்தைத்...

அனார் கவிதைகள்

நீங்குதல் எறும்புகள் பகல் கனவுகளை மொய்க்கின்றன பின் இழுத்துச் செல்கின்றன. தாரை தாரையாக உருகிக் கரிக்கின்ற உப்புத்துளிகளை காயங்களில் இருந்து குடைந்து எடுத்துச் செல்கின்றன மணல் புற்றுகளின் களஞ்சியங்களுக்கு குருத்தெலும்புகளை அரித்துக் கொண்டிருந்த வெறுமையின் உதிரத்தை மணந்து ஒன்றுக்கொன்று கனவுக்குள் சம்பாஷித்துக் கொள்ளுகின்றன தனக்குத்தானே தூபமிடும் வசியமறிந்தவர்கள் அறிவார்கள் காலத்தை தூவி...