தினகரன் கவிதைகள்

1. பரபரப்பு மிகுந்த இந்த வாழ்வில் ஏதோவொரு சாலையின் ஓரத்தில் காத்திருக்கிறான் கல்யாணசுந்தரம் சிக்னலின்/ வாழ்வின் பச்சை விளக்கிற்காக. அது விழுவதாயில்லை மாறாக, சட்டைப் பாக்கெட்டிற்கு சற்று மேலே விழுகிறது ஒரு பறவையின் எச்சம் எப்படியோ, பறவைக்குத் தெரிந்திருக்கிறது விரிசலடைந்த இடங்களை! 2. தற்கொலைக்குத் துணிந்தவனின் ஒரு சாயங்காலப் பொழுது: வெகுநேரமாக் கவிழ்ந்து படுத்தபடியே இருக்கிறேன் உடலுக்குள் ஊடுருவும் ஒளியை சத்தமில்லாமல் அறைக்குள் அனுமதிக்கிறது சன்னல்   எழுந்து அருகில் சென்றதும் எங்கிருந்தோ வந்த...

நகுலன் கவிதைகள்

காத்த பானை காத்த பானை கொதிக்காது கரும்பு கசக்காது வேம்பு இனிக்காது என்றாலும் என்ன செய்தாலும் என் மனமே வந்தபின் போக முடியாது போனபின் வர முடியாது என்றாலும் என்ன செய்தாலும் என்றென்றே சொல்லிச் சலிக்கும் என் மனமே ஊமையே உன்மத்த கூத்தனே வாழ ஒரு வழி சாக ஒரு மார்க்கம் சொல்லவல்ல...

தேவதேவன் கவிதைகள்.

அமைதியான அந்தக் காலைநடையில் அவர் சென்றுகொண்டிருந்தார் எல்லாம் முடிந்துவிட்டது. இனி செய்வதற்கு ஏதுமில்லை என்பதுபோல்!   இதுதான் இதுதான் அந்தச்செயல் என்பதுபோல்!   மிகச்சரியான பாதை ஒன்றைத் தேர்ந்தெடுத்துவிட்டவர்போல்!   அந்தக் காலையையும் அந்தப் பாதையையுமே தாண்டி அந்த நடைமட்டுமே ஆகிவிட்டவர்போல்! இவைபோலும்   எந்தச் சொற்களாலுமே தீண்ட முடியாதவர்போல்!   எங்கிருந்து வருகின்றன எங்கிருந்து வருகின்றன விளையாடும் குழந்தைகளின் இந்தப் பெருங்களிக் கீச்சிடல்கள்?   இப்பேரண்டத்தின் ஒத்திசைவிலிருந்துவரும் பேரிசையின்...

காதலிழந்த காலத்தின் இசை

ஓர் இரவோ நெடும்பகலோ நாம் காதலின் பிள்ளைகள் இவ்விரவோ நெடுநாள் கோடையோ நாம் காதலின் பிள்ளைகள் பொழுதின் நெடும்பாதை நீண்டாலும் இரவின் சிறுநொடிகள் ஆலங்கட்டிகளாய் விண்மீன் மெழுகிய தரைகளில் விழுந்தாலும் பருவகாலங்களின் மலர்கள் புதுப்பிறப்பின் ஓசைகளை எழுப்பினாலும் சங்குகளின் உள்ளே...

பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்.

Bestseller வார்த்தை ஒரேயொரு மன்னிப்பானது உடனிருந்தால் போதும் எதிலிருந்தும் தப்பிவிடலாமென்கிற தைரியம் ஒருவகையில் அதுவும் உண்மைதான் மன்னிப்புகள் ஒருபோதும் தீர்ந்துபோகாதது மன்னிப்புகளால் ஒருபோதும் பழசாகவும் முடியாது வருடாவருடம் அதிகளவில் விற்றுத்தீர்கிற அவ்வார்த்தைக்குத்தான் சந்தையில் எப்போதும் மவுசு அதிகம் பிற்பாடு தன் தேவைகள் அதிகமாவதை உணர்ந்தபின்னர் பகிரங்கமாகவே...

ஜீவன் பென்னி கவிதைகள்.

கடைசிப் பெட்டியின் வாசலில் உலகைச் சாய்த்து வைத்திருப்பவன். ஒவ்வொரு இடப்பெயர்தலிலும் அதற்கு முன்பான வாழ்வை அங்கேயே விட்டு விட்டு வருகின்றவன், எல்லோராலும் தான் நேசிக்கப்படுவதன் காரணங்களில் சிறிய ஒன்றையே எப்போதும் தேடிக்கொண்டிருக்கிறான்.!   1. ஒரு குற்றத்தின் முன்பாக வெகுநேரம் அமர்ந்திருப்பவன் தன் கைகளின்...

ஞா.தியாகராஜன் கவிதைகள்.

1. அப்போதுதான் அதிசயமாக யாரோ பாதி புகைத்து எறிந்த சிகரெட் அது வேறுவழியில்லாமல் அன்றைக்குதான் முதன்முதலாக அதை முயற்சித்தேன் மற்றபடி உன் அரண்மனைகள் இடிந்துவிழுந்ததுப் பற்றி எனக்கெதுவும் தெரியாது. 2. யார் சொல்வதற்கு முன்பும் முந்திக்கொண்டு நான் என்னை வெறுப்பதாகச் சொல்லிவிடுகிறேன் இருந்தாலும் ஒரு தடவை அவர்களும் அதை சொல்லிவிடுகிறார்கள் நான்...

அர்ஜுன்ராச் கவிதைகள்.

சமர்த்தனான கவலை ஒரு மலினமான கவலையைப் பெரும் பம்மாத்துடன் செல்லம் கொஞ்சி ஞாபக புறவெளியின் தென்படாத தூரத்திற்கு தொலைத்துவிட்டு வந்தேன் என் மனக்கதகதப்பின் வீச்சத்தை  நுகர்ந்துகொண்டு எப்படியோ மீண்டும் வந்துவிட்டதது   குளிப்பாட்டிவைத்த என் மனவீட்டுக்குள்ளேயே வாலைக் குழைத்து குழைத்து நிரபராத முகத்தோடு என் கால்களை நக்கி 'என் எஜமானனே...' என்றேகுகிறது என்னிடம்.   இனி கல்லெடுப்பதா ? கறிபோடுவதா ? என்ற ஒரே குழப்ப வெறியில் கொப்பூழ்...

இன்பா கவிதைகள்

1)நாடு மாறி நான் சிவப்புக் காதோலை கருப்பு வளையல் ஏழைகளின் ஆப்பிள் பேரிக்காய் களக்கக் கட்டிய பூச்சரங்களென பிரப்பாங்கூடையில் எடுத்துச்சென்றுக் காவிரிக்கரையில் முழு ஆடையோடு முழுகி வெண்மணலைத் தாம்பாளங்களில் அள்ளிக்கொண்டு கரையேறும் கட்டுக்கழுத்திகள் படுகையில் வாசல் வைத்த நீள்சதுர வீடு கட்டி மஞ்சள் தோய்த்தச் சரடைக் கழுத்தில் கட்டி முடித்தபின் முகூர்த்த மாலைகள் ஆற்றில்...

நினைவு கொண்டிருப்பது

நினைவு கொண்டிருப்பது இன்று மாலை யாருமற்ற பூங்காவுக்குள் நுழையும்போது எதிர் வரிசையில் புன்னகையுடன் தோன்றி முகமன் கூறுவாள் ஒரு நாய்க்கார சீமாட்டி.   அவளைக் கடந்து வெட்கத்தை விட்டு ஆடைகளை அவிழ்க்க ஆரம்பித்திருக்கும் மரங்களின் கீழ், இலைகளின் படுகையின் மீது ஓசை எழும்ப நடைப்பயிற்சி பழகும்போது,   வழமை போலவே தன் கவிகையில் நிறங்களை நிறைத்தபடி நின்று கொண்டிருக்கும் அந்த அழகு மரம். வட...