புகை

"உள்ள இழுல. புகைய வாயால உறிஞ்சு மெதுவா வெளிய விடு." "முன்னாடி ரெண்டு இழுப்புதான் கேப்ப. இப்போ தனியா சிகரெட் பிடிக்கயோ, தண்டவாளம் பக்கம் போறியா.தீப்பெட்டி இருக்கா" மணி அண்ணனோடு உரையாடல்கள் இப்படித்தான்...

நெலோகம்

அந்த வீட்டிலிருந்த உயிர்களைக் குளிர் நடுக்கிக் கொண்டிருந்தது. வீட்டுச் சுவரில் சூடு உண்டாக்கும் கருவி பொருத்தப்பட்டு இருந்தாலும், அவ்வப்போது சின்னச் சின்னதாய் விரிசல் உண்டாகி நேற்று ஒரு பிளவாக மாறி, கருவியின் மின்...

அந்நியன்

பசுபதி அரசுப்பள்ளியில் கிளர்க்காக பணியாற்றி சமீபத்தில் ஓய்வு பெற்றிருந்தார். அந்தப் பள்ளியில் கணக்கு ஆசிரியராய் இருந்த மனோகரன் ஓய்வு பெறும்போது இளைஞனைப் போன்ற தோற்றம் மாறாதவராய் இருந்தார். அவர் ஓய்வு பெறும் வயதை...

வரலட்சுமி நோன்பு

ஒரு ஞாயிற்றுக் கிழமை. பூணூலை வலது பக்க காதில் மாட்டியபடி, வெஸ்டர்ன் டாய்லெட்டில் உட்கார்ந்து கொண்டு, கழிவறை தரையில் சுவற்றின் ஓரமாக ஓடிக் கொண்டிருந்த இரண்டு கரப்பான் பூச்சிகளின் மேல் சீராக தண்ணீர் பீய்ச்சி...

மற்றொருவன்

"பையா...." ஹெட் எடிட்டர் நாணா சார் தான் உரக்க அழைத்தார். பையா என்று அழைக்கப்பட்டவன் அப்படி ஒன்றும் சின்னப்பையன் இல்லை. குறைந்தது நாற்பதுக்கும் குறையாத வயது முன் தலையில் விழ ஆரம்பித்து விட்ட வழுக்கை,...

ரொட்டியும் கல்லும்

அன்றைய தினம் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியர்கள் நேசநாடுகளிடம் சரணடைந்த இரண்டாவது ஆண்டு நினைவுநாளுக்கு முந்தைய நாள். பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தின் முன்னாள் சட்ட ஆலோசனை மன்றத்தின் உயர்ந்த விதானம் கொண்ட அவ்வரங்கு விழாவுக்கான...

சம்ஸ்காரம்

வராகமங்கலம் என்ற ஊர் இன்று இல்லை. முண்டையான கூரையற்ற வீடுகளும், இடுப்பளவு வளர்ந்த நாணல் புதரும் மட்டுமே ஊர் என்ற ஒன்று அங்கே நின்றதற்கான சான்றாக இன்று எஞ்சியிருக்கிறது. பதினாறாம் நூற்றாண்டில் நாயக்க...

இறைச்சி

நான் “எறியுங்கள்” எனச் சொன்னபோது எனது உணவகத்தின் சமையல் தலைவன் “ஏன்?” எனத் தனது  வெள்ளைச் சிரிப்பால்  என்னைக் கேட்டான். “இறைச்சியினது மணம் என்னை வாந்தி எடுக்க வைக்கின்றது.” “இதனை எறிவதா? இந்த இறைச்சியின் விலை...

போக்கு

சூரியன் மேலெழுந்து வருவதைப் பார்த்ததும் நீலாவுக்குத் திகீரென்றிருந்தது. நீல திரைச்சீலையை விலக்கிவிட்டு, நான் வந்தே தீருவேன் என்பது போன்ற பிரவேசம். ரத்தக்கோளமொன்று உருண்டு, திரண்டு உயிர்ப்புடன் நின்றிருப்பது போன்ற சாயல். "சூரியன் ஆரஞ்சு நேரத்துலேனா...

உறங்கும் சூஃபியின் இல்லம்

“அப்ப ராவைல 10 மணிக்கு இங்க இருந்து மாட்டு வண்டிலக் கட்டுவம்.  அஞ்சாறு வண்டிகள். ஒரு வண்டி நெறய சாமான். ரெண்டு வண்டில ஆம்புளயல். மத்த வண்டிகள்ல பொம்பிளயளும், புள்ளைகளும். செரியா செருசாமம்...