அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது
30
கக்கடைசியில்
ஏர்வாடி தர்க்காவில்
அம்மாவைச் சேர்த்தோம்.
சங்கிலி பிணைத்து அழைத்துப்போகையில்
என் தலை தடவினாள்.
அப்போது கலைந்த முடியை
எத்துணை முறை சீவியும்
ஒழுங்குபடுத்த முடியவில்லை.
29
வெள்ளி அன்று
அம்மா பூண்டிருப்பது
மௌனமா
விரதமா
தனிமையா தெரியாது
அன்றைய மதிய உலை
கொதபுதா என்று கொதிய
வேடிக்கை பார்ப்பாள்.
28
அம்மாவின் காதோரச் சுருள்முடியிடம்
அப்பாவுக்கு இருந்த பயபக்தி
என்...
ஒரு நாள் கழிந்தது
அமுதா கண்திறக்க வேண்டும் என்று நினைத்தாள். கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஒரு மாதத்துக்கு முன்னர் தான் அவளுடன் கட்டிட வேலை செய்யும் அபிராமியின் வழியாகக் குடிக்கப் பழகினாள். அபிராமிக்கு மேஸ்திரியை மயக்கி தினம்...
நாஞ்சில் நாடன் கதைகள்
நாஞ்சில் நாடன் புனைவுலகின் மிகப்பெரிய பலம் அதன் வட்டாரத்தன்மை ஒரு படைப்பு வட்டாரத்தன்மையால் மட்டும் அதன் இலக்கிய மதிப்பு தீர்மானிக்கப்படுவதில்லை. அது சமூகத்தோடு கொள்ளும் உறவில் திரண்டு வருகிறது. ஒரு படைப்பு தன்...
ஔஷதக் கூடம்
அப்பாவுக்கு புற்றுதானாம்.
உறுதியாகிவிட்டது.
மூப்பின் பொருட்டு இரண சிகிச்சையை
நிராகரித்துவிட்டார் மருத்துவர்.
சங்கதி தெரியாமல்
பேத்தியின் பிரதாபங்களில்
தோய்கிறார் அப்பா.
கதாபிரசங்கியின் துடிமேளக்காரனாக
அப்பாவின் பேச்சுக்கெல்லாம்
பக்கத்துப் படுக்கைக்காரர்
முகிழ்நகை செய்கிறார்.
அவரது தொண்டையில்
துளையிட்டிருக்கிறார்கள்.
இப்போது எப்படி இருக்கிறது?
’பரவாயில்லை’
’காற்றோட்டமில்லை .... நல்ல படுக்கையில்லை’
’பரவாயில்லை’
”செவிலியர் இல்லை ......மருந்து போதவில்லை’
’பரவாயில்லை..... பரவாயில்லை’
’வலி மிகும்...
பொன்னுலக்ஷ்மி
நீங்கள் பொன்னுலக்ஷ்மியை கண்டிப்பாகப் பார்த்திருப்பீர்கள். சாலையில் நடக்கையில், ஐந்தாறு நொடிகளேனும் “அவள் வாசத்தை” நீங்கள் சுவாசித்தே கடந்திருப்பீர்கள். உங்கள் நினைவில் “அது” இல்லாமல் இருக்கலாம். அல்லது அவள்தான் “பொன்னுலக்ஷ்மி” என்பதை, நீங்கள் அறியாமலிருக்கலாம்.
பஸ்ஸை...
க.சி.அம்பிகாவர்ஷினி கவிதைகள்
தலைகுப்புற விழுகின்ற எண்ணெய்க் குப்பியென்ன ஒளிவிளக்கா?
விழுந்தணைந்தபின்
குப்பென்று பற்றியடங்கும்
உயிரென்ன மெல்லிய இருளா??!!
நீர் தழும்பத் திரண்டிருக்கும் கண்களை
செந்தாமரைகளென்கிறாய்
இரு புருவங்களுக்கு மத்தியில்
முழங்கு படிகத்தை வைத்தது போலிருக்கிறது
விழிக்கோளங்கள்
பாடும் கிண்ணங்களாக ஒலிக்கின்றன....
-க.சி.அம்பிகாவர்ஷினி
தேறாத மேஜிக்காரன்
மிகுந்த ஆயாசத்தோடு
மீண்டுமொரு முறை
மந்திரக்கோலை சுழற்றிப்பார்க்கிறேன்
எதிலும் என்ன தவறென்று
விளங்கவேயில்லை.....
வித்தைக் கட்டுக்குள்
அடங்காத சீட்டுகள்
எரிச்சலூட்டும் சப்தத்துடன்
எள்ளி நகைக்கின்றன
இடம்மாறச் சொன்ன பந்துகளோ சிறிதாயின....
உடல் வெட்டித் துண்டாக்க
ஓங்கிய வாள்தான்
மிருதுவான மலராகி
கொடூரமாய் தீண்டியது
எப்போதும் பிடிக்கு சிக்கும் தோட்டா
விரலையின்று துளைத்தே விட்டது
எல்லாமும் பரவாயில்லை
என்...
மல்லிகா
வெயில் பளபளவெனக் காய்ந்தது. செல்வியின் செம்பட்டை முடி வெய்யிலில் மினுங்கியது. வேப்பம் பழங்கள் பொறுக்குவதற்காக அவளும், கவிதாவும் அந்தக் காட்டிற்கு வந்திருந்தனர். காற்று இல்லாததால் பழங்கள் நிறைய உதிர்ந்திருக்கவில்லை. இரண்டு மணி நேரமாகப்...
நினைவுகள் நிரம்பிய நித்திரையற்ற இரவு
“ஏ.. புள்ள செலுவி இங்க வாடி செத்த”
“யத்தே சொல்லுத்தே”
“நாளக்கி மொத பஸூக்கு நானும் மாமனும் மெட்ராஸூக்கு கெளம்புறோம்டி. நாளக்கலிச்சு வெசால கெலம ரவைக்குள்ளாற வந்துறுவோம். பொளுது எறங்கங்காட்டியும் ஊட்டுல ரைட்டு போட்டு.. விடியங்காட்டியும்...
அந்தோன் செகாவின் நாய்கள்
அந்தோன் செகாவின் ஒவ்வொரு கதையும் மிகச் சாதாரண மனிதர்களைப் பற்றியது. நிராகரிப்பு, கைவிடப்படுதல், துக்கம், காதல் எனப் பல உணர்வுகளைத் தனது கதைகளில் கையாள்கிறார் செகாவ். வரலாற்று அனுபவங்களின் பின்னணியில் தனிமனிதனை வைத்த...















