மேரி ஆலிவர் கவிதைகள்
கற்களால் உணரயியலுமா?
கற்களால் உணரயியலுமா?
அவர்கள் தங்கள் வாழ்க்கையை நேசிக்கிறார்களா?
இல்லை அவர்களின் நிதானம் எல்லாவற்றையும்
அமைதியடையச் செய்துவிடுமா?
நான் கடற்கரையில் நடக்கும்போது
வெள்ளை நிறத்தில், கறுப்பில் எனப்
பல வண்ணங்களில் சிலவற்றைச் சேகரிக்கிறேன்.
கவலைப்பட வேண்டாம், நான் உன்னைத்
திரும்பவும் கொண்டு வந்து விட்டுவிடுவேன் என்கிறேன்
பிறகு அவ்விதமே செய்கிறேன்.
மரம் தனது பல கிளைகளை
உயர்த்தி உவகையடைகிறதே,
ஒவ்வொரு கிளையும் ஒரு கவிதையைப்போலவா?
முகில்கள் தங்களது மழைமூட்டையை
அவிழ்த்துவிடுவதில் மகிழ்ச்சியடைகின்றனவா?
உலகத்தில் பெரும்பாலானவர்கள் சொல்கிறார்கள்,
இல்லை, இல்லை, அது சாத்தியமேயில்லை என்று.
நான் அத்தகைய முடிவை
எண்ணிப்பார்க்கவே மறுத்துவிட்டேன்.
ஏனெனில் அது மிகப் பயங்கரமானதாக இருக்கும், மேலும் தவறாகவும்.
**
நான் கடற்கரைக்குச் சென்றேன்
நான் காலையில் கடற்கரைக்குச் சென்றேன்
நேரத்திற்கேற்ப அலைகள்
வந்துபடியும் சென்றபடியும் இருந்தன,
ஓ, நான் சோகமாக இருக்கிறேன்
என்ன செய்யட்டும்—
நான் என்ன செய்ய வேண்டும்? என்கிறேன்.
தன் அழகிய குரலில் கடல் சொல்கிறது:
மன்னிக்கவும், எனக்கு வேலை இருக்கிறது.
**
எப்போது அது நிகழ்ந்தது?
எப்போது அது நிகழ்ந்தது?
“நிறையக் காலத்திற்கு முன்பு”
எங்கு நிகழ்ந்தது?
“தூராதி தூரத்தில்”
இல்லை, சொல், எங்கு நிகழ்ந்தது?
“எனது இதயத்தில்”
இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது உனது இதயம்?
“நினைத்துப்பார்த்த படியிருக்கிறது, நினைத்துப்பார்த்தபடியிருக்கிறது!”
**
இந்தக் காலையில்
இந்தக் காலையில்
செங்குருவிகளின் முட்டைகள்
பொரிந்துவிட்டன மேலும் ஏலவே குஞ்சுகள்
உணவுக்காகக் கீச்சிட்டுக்கொண்டிருக்கின்றன.
அவர்களுக்குத் தெரியாது உணவு
எங்கிருந்து வருகிறது என்று,
வெறுமனே கத்திக்கொண்டிருக்கிறார்கள் “மேலும்! மேலும்!”
வேறு எது குறித்தும்,...
புத்தாயிரம் ஆண்டு – இலக்கியம் மற்றும் கலாச்சாரம் குறித்த ஐம்பது கூற்றுகள் – பால்...
இன்றைய நுகர்வு கலாச்சாரத்திற்கு மத்தியில், கலையிலக்கியமும் கலாச்சாரமும் என்ன அர்த்தம்
கொள்கிறது? அதன் மதிப்பீடுகள் அடைந்திருக்கும் சரிவுகள் என்ன? அல்லது அவை என்னவாக
பரிணாமம் கொண்டிருக்கின்றன? என்பது போன்ற கேள்விகளை நம்மை நாமே கேட்டு
பரசீலித்துக்கொள்வதன் அவசியத்தைக்...
வெள்ளைப்பாதம் — உலகின் மையத்தில் இருந்து ஒரு கதை
அவளுடைய பெயர் பெரோமிஸ்கஸ் லூகபஸ், ஆனால் அவளுக்கு இது தெரியாது. வில்லியம் துறைமுகத்தைச் சுற்றியுள்ள சுண்டெலிகள் ஆங்கிலத்தில் பேசி வெகு நாளாகிவிட்டது என நினைக்கிறேன். லத்தீன் மொழியில் பேசியிருக்கவும் வாய்ப்பில்லை. மனிதர்களாகிய நாம்...
அமைதி திரும்பும்
முன்பொரு காலத்தில் பெருங்கடல்கள், ஏராளமான காடுகள், அற்புதமான கண்டங்கள், துருவப் பகுதிகள், ஆதிகாலத்தில் இருந்து பரிணமித்து வானளாவிய கட்டிடங்களும் டிஜிட்டல் புரட்சிகளும் உருவாக்கிய நாகரிகங்கள் இருந்த அவ்வுலகம் இனி இல்லை. அந்த உலகம்...
பேரமைதி
மனிதர்கள் பூமியின் வளிமண்டலத்திற்கு அப்பாற்பட்ட புலனாய்வை மேற்கொள்ள, அரிசிபோ தொலைநோக்கு நிலையத்தைப் பயன்படுத்துகிறார்கள். இது தொடர்பாக அதிக விருப்பமும் ஆர்வமும் கொண்டிருக்கும் அவர்கள், பிரபஞ்சங்களுக்கு இடையே கேட்கும் செவிப்புலத்தையும் உருவாக்கி இருக்கிறார்கள்.
ஆனால், நானும்...
‘பாராசைட்’ திரைப்படத்தில் காலநிலை மாற்றம்
போங் ஜூன்-ஹோவின் முக்கியமான புதிய திரைப்படமான பாராசைட் (Parasite), வர்க்கப் பாகுபாடு பற்றிய அதன் சித்தரிப்பு மற்றும் வெளிவந்த காலக்கட்டம் காரணமாக பெரும் விமர்சனக் கவனத்தை ஈர்த்துள்ளது. இது இந்தக் காலக்கட்டத்திற்கான படம்,...
ROAR வட்டமேசை: கோவிட்-19 & காலநிலை நெருக்கடி
பொதுமுடக்கத்திற்கும் இயல்பு வாழ்க்கைக்கும் இடையிலான மீள் செயல்பாடுகளின் அடிப்படையிலேயே தலைமுறைகள் தாண்டிய சூழலியல் போராட்டங்கள் அமையவிருக்கின்றன. இத்தகு வாய்ப்பை வசப்படுத்துவதற்கான வழிமுறைகள் என்ன?
-ROAR ஆசிரியர் குழு
கோவிட்-19, சமூக மற்றும் சூழலியல் சமநிலை குறித்தான...
ஒரு பனிப்பாறையின் இறுதிச் சடங்கு
சுற்றுவட்டாரத்திலும் வெகு தொலைவிலும்கூட ஒக்யொகுல் சிறிய பனிப்பாறை அல்ல. ஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்கவிக்-இன் சுற்றுப்புறங்களில் இருந்தும், சுற்றுச் சாலையின் நீண்ட பகுதிகளில் இருந்தும் உங்களால் காண அதைக் காணமுடியும்; அல்லது உங்கள் கவனத்தைப்...
ஜான் பெல்லமி ஃபாஸ்டரின் ‘இயற்கையின் மீள்வருகை’
2000-ஆம் ஆண்டில் வெளியாகிய முன்னோடி நூலான ஜான் பெல்லமி ஃபாஸ்டரின் மார்க்சின் சூழலியல்* (Marx’s Ecology), மார்க்சியம் தனது தொடக்க காலம் முதலே சூழலியல் பிரச்சனைகளுடன் அக்கறைக் கொண்டிருந்ததை எடுத்துரைத்தது. அதன் தொடர்ச்சியாக...
பற்றி எரியும் கேள்வி: காலநிலை மாற்றத்தின் இலக்கியம் எங்கே?
காலநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தற்போது மொழியிலும், அதிகரிக்கும் வெப்பத்திலிருந்தும் உணரமுடிகிறது. கனடாவின் வடக்கு ஆர்க்டிக்கில் அமைந்துள்ள பாங்க்ஸ் தீவில் சுற்றுச்சூழல் மாற்றங்கள் வெகு வேகமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன; தங்களைச் சுற்றிக் காண்பவற்றை விவரிக்க...