சிறுகதைகள்

வாழ்வின் பெருமகிழ்வு

௧ ‘ஃபிரான்சின்’ தென்கிழக்குப் பகுதியின் ஓரம், ‘காட் த’அஸுர்’ எனப்படும் ‘ஃப்ரெஞ்சு ரிவியராவில்’, ‘நீஸ்’ நகரின் பகுதிகளான ‘வில்லினவ்’ மற்றும் ‘லூபே’ என்ற இரண்டு கிராமங்கள் ஒருங்கிணைந்து அமைந்த ‘வில்லினவ் லூபே’ பகுதியில், ஒரு...

தலைப்புச்செய்தி

இரவு உணவுக்குப் பின்னர் சோபாவில் உட்கார்ந்து அரைத் தூக்கத்தில் கரகம் ஆடிக் கொண்டிருந்தான் சுதாகரன். எதிர்ச்சுவரில் மாட்டியிருந்த தொலைக்காட்சியில் நின்றபடி தலைப்புச் செய்திகளை வாசித்துக் கொண்டிருந்தாள் ஜீன்சும் டீசர்ட்டும் அணிந்த இளம் பெண்....

பக்குவத்தின் கதை

ஐந்து மணித்தியாலங்களைக் கடந்தும் இரண்டரைப் பனைமர உயரமுள்ள அந்த ஆலமரத்தின் உச்சியிலிருந்து வடக்கு நோக்கி நெற்றியில் கையை வைத்து ஒளியை மட்டுப்படுத்தி கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் சந்திரலிங்கம். அவரது மனைவி தலையில் பெரிய...

ஏதேன் காட்டின் துர்க்கந்தம்

போதையின் உச்சத்தில் சரிந்து கிடப்பதைப் போன்றதொரு சிலை, அந்த மதுக் கூடத்தின்  வாயிலருகில் அமைக்கப்பட்டிருக்கும். அதன் தோரணையிலிருக்கும் லயிப்பே கிறங்கடிக்கச் செய்வதாக முன்னரும் சில முறைகள் அவனுக்குத் தோன்றியிருக்கிறது. அப்படி விழுந்து கிடப்பதில்...

போதிசத்வா -விஜய ராவணன்

“அந்த மரத்தின் கனிகள் மிகுந்த ருசியாகவும் அபூர்வமான நறுமணம் வீசக்கூடியதாகவும் இருந்ததால் அதில் வசித்த குரங்குகளாகிய நாங்கள் மிகுந்த அக்கறையோடும் எச்சரிக்கையோடும் இருந்தோம். எந்த நிலையிலும் ஒரு பழமும் கீழே விழ அனுமதித்ததில்லை....

மூக்குத்தி – சரவணன் சந்திரன்

காவல்துறையில் நடித்துக் காட்டுவது என்பது ஒருசடங்கு. திருடர்கள் மாட்டிக் கொண்டபிறகு, எப்படித் திருடினார்கள் என்பதைச் சம்பந்தப்பட்ட இடத்துக்கே சென்று நடித்துக் காட்டச் சொல்லி அதைப் பதிவு செய்து கொள்வது சிவப்புநாடா நடைமுறை. குரங்கினைப்...

அலவர்த்தனம்

அமாவாசை வானம் துடைத்து வைக்கப்பட்டிருந்தது. ஆட்டோவில் இருந்து இறங்கி நடந்தபோது, வரிசையாக இடம் பிடித்திருந்த சைவ அசைவ சாப்பாட்டுக் கடைகள் கலைகட்டிக் கொண்டிருந்தன. சைக்கிள் பின் கேரியரில் நின்றிருந்த கேனிலிருந்து நெகிழி டம்ளர்களை...

ஒரு நாள் கழிந்தது

அமுதா கண்திறக்க வேண்டும் என்று நினைத்தாள். கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஒரு மாதத்துக்கு முன்னர் தான் அவளுடன் கட்டிட வேலை செய்யும் அபிராமியின் வழியாகக் குடிக்கப் பழகினாள். அபிராமிக்கு மேஸ்திரியை மயக்கி தினம்...

மீண்டும் நீளும் தேவதையின் கைகள்

          கண் விழித்தேன். இனிய புன்னகையோடு முன்னே தேவதை நின்றாள். கைகளை நீட்டினாள், அப்போது நான் நிலத்தில் கிடந்தேன்.  பெரும் காற்று சுழன்று அனைத்தையும் தன்னுள் அடக்கி உயர்ந்தது....

ஸீடீஎன்/√(5 ஆர் X க)= ரபெ – சிறுகதை

“நமஸ்காரம், டாக்டர் கோஸ்வாமி!” “நமஸ்காரம். டாக்டர் என்று சொல்லத் தேவையில்லை. வெறுமே கோஸ்வாமி என்று சொன்னாப்போதும்”. “ஏன் அயல் நாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்று உங்கள் தகுதியை ஆராய்ந்து கொடுத்திருக்கிறபட்டமாச்சே அது!” “என்ன பிரயோசனம்? என் திட்டம் இப்படிச்...