ரோஜாப்பூக்கள்
மொட்டைமாடியிலிருந்து ஒவ்வொரு கையிலும் ஒவ்வொரு பூந்தொட்டியை விளிம்பைப் பிடித்தபடி எடுத்துக்கொண்டு படியிறங்கி வந்தவனைப் பார்த்து “ஒனக்கு எதுக்குடா சுப்பையா இந்த வீண்வேல?” என்று கேட்டார் கந்தசாமி.
”தண்ணி ஊத்தி வளத்தவனே, செடியும் வேணாம், கொடியும்...
இந்திர நீலம்
காலையில் இருந்து நிதானம் தவறியது. உடம்புக்கு என்னவென்று உணரமுடியவில்லை. காய்ச்சல் இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக் கொண்டேன். உடம்பு குளிர்ந்திருந்தது. உள்ளுக்குள் அனலாகத் தகித்தது. தலைவலி இல்லை. உடம்பு வலி இல்லை. சளி...
ஸ்ரீவள்ளி கவிதைகள்
சிலவற்றைச் சரி செய்ய முடியாது
திடீரென
ஒரு நாள்
சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும்
மறைந்துவிடுகின்றன
அப்படியொரு நாளுக்குப்பின்
மீண்டும் சூரியன் முளைக்கிறது
சந்திரன் முளைக்கிறது
நட்சத்திரங்கள் பல்லைக் காட்டுகின்றன
ஆனால் இது பழகிய வானமல்ல
தலைக்கு மேல் பெரிய படுதா
இதன் அடியில்
ஒரு மரத்தில்
தூக்குமாட்டிக்கொள்ளக்கூட
முடியாது.
தன்னோடிருத்தல்
தன்னந்தனிமையில்
ஒரு வீணை...
அடையாளம்
விருப்ப ஓய்வு பெற்றபோது முப்பத்தைந்து வருட வங்கிப் பணியை நிறைவு செய்திருந்தேன். எத்தனை சம்பவங்கள், எத்தனை விதமான வாடிக்கையாளர்கள், எத்தனை விதமான உரசல்கள். எத்தனையெத்தனை அனுகூலங்கள், எத்தனையெத்தனை இழப்புகள். எத்தனையெத்தனை அவமானங்கள்...
பழைய பத்துரூபாய்...
அன்னை
அன்று விடியலே அவளுக்கு சற்று விநோதமாக இருந்தது. விடியலின் ஒலிகளற்ற காலை அவளுக்கு விநோதம்தான். படுக்கையறையில் சன்னலையொட்டியிருந்த பெரிய கட்டிலில் தாராளமாகப் புரண்டபோது முன்னறையிலிருந்த வெளிச்சம் அவளை திடுக்கிட வைத்தது. திரைச்சீலையை இழுத்து...
தஸ்தயெவ்ஸ்கி கதைகள்
நோய் என்னும் துயர் பெருந்தொற்று நோயைக் காட்டி அச்சுறுத்தியும் உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டும் மனித குலத்தில் பாதிப்பேர் தனிமையில் இருக்கும் காலகட்டம் இது.
இந்த நெருக்கடியான காலகட்டத்தில், புனைவுகளை வாசிப்பது, சக...
பெருந்தேவி குறுங்கதைகள்
அழுமூஞ்சிகளின் ஊர்
அந்த ஊரில் எல்லாரும் அழுதுகொண்டே இருப்பார்கள். அதாவது இருபத்திநான்கு மணி நேரமும். நல்ல வெயிலடித்தால் “ஐயோ கொளுத்துகிறதே” என்று அழுவார்கள். மழை பெய்தால் “சனியன் பெய்து தொலைக்கிறதே” என்று அழுவார்கள். வெயிலடிக்காமல்...
சொற்ப மீன்கள்
"எப்போதும் நமக்குள் வன்முறை இருந்து கொண்டேதான் இருக்கிறது" இதை லெனினா என்னிடம் சொன்ன போது நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். என் மீதிருந்த அவளது பார்வையைத் திருப்பியதும் அவளது முதுகுக்குக் கீழ் புதைந்திருந்த...
இறுகிப்போன பாறையைச் செதுக்கும் உளிகள்
கவிச்சி அடித்துக் கிடக்கிறது சமூகம். வத்தி கொளுத்திக் கையில் பிடித்தபடி ‘வாக்கிங்‘ போகிறோம். அநியாயத்தை அனுசரித்துப் போவதற்குக் கல்வி கற்றுத் தருகிறது. பெரியவர்கள் அறிவுரை தருகிறார்கள். சகித்துக் கொள்வதற்காகவே சம்பளம். பாவத்தின் சம்பளமென்றாலும்...
வேறுபாடுகளின் உரையாடல்: நவீன விமர்சன மொழியின் அகஉருக்கள்
*(விமர்சனக் கோட்பாட்டு வரலாறு)
மொழியென்னும் பெரும் பிரவாகத்துக்குள் அதன் உள்விழிப்பாக ஆழ்தளப் பிரக்ஞையாக கலை இலக்கியங்கள் செயல்டும்போதே அதனை வேவு பார்க்கவும், உளவறியுமான ஒரு இணைகோடான எதிர்ப் பிரக்ஞையாக விமர்சன மனம் செயல்படத்தொடங்கி விடுகிறது....















