ரவி சுப்பிரமணியன் கவிதைகள்
ஞானம்
போதும் போதும் இருந்ததென
அப்போதுதான் உதிர்ந்தது மரத்திலிருந்து
இன்னும் ஒரு நாளோ
இரு நாளோ
புகாரேதுமின்றி
வான் நோக்கிக் கிடக்கிறது
வெயிலையும் வாங்கிக்கொண்டு
காற்றுக்கு அசையும் அதை அதன் சொற்ப வாழ்வில்
என் கரங்களும் ஸ்பரிசிக்கட்டுமேயென
எடுத்தேன்
எத்தனை மருது, வண்ணம், வாசனை, வடிவம்.
தான்மை...
நிகழ்ந்துவிட்ட அற்புதம்: சார்ள்ஸ் ப்யூகோவ்ஸ்கி
1.
சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கியை சில தசாப்தங்களுக்கு முன்னர் அறிந்திருந்தாலும் அவரை விரிவாக வாசித்துப் பார்த்தது என்றால் மூன்று/நான்கு வருடங்களுக்கு முன்னராகத்தான் இருக்கும். அந்தக் காலப்பகுதியில் ஒரே தொடர்ச்சியில் அவரது எல்லா நாவல்களையும் வாசித்து முடித்திருந்தேன்....
மெட்ராஸின் சிவப்பு நிற பேரழகு கட்டிடங்கள்- 3
கார்டில் கட்டிடம் ( பாரத் இன்சூரன்ஸ் கட்டிடம் )
மெட்ராஸின் அடையாளங்களென வரிசையில் முதலில் நிற்பது சிவப்பு நிற கட்டிடங்களே அதில் பத்துக்கும் குறைவான கட்டிடங்களே வெள்ளை நிற கட்டிடங்கள் என்பது உலகறிந்த ஒன்றுதானென்றாலும்,...
செத்துப்போனவர்
தூங்குகிற மனிதனை ஐஸ் பெட்டிக்குள் ஏன் வைத்தார்கள் என்று பார்க்கிறவர்கள் பதறுகிற அளவுக்கு , எண்ணெய் தேய்த்துக் குளித்த அசதியில் அசந்து தூங்குவது போல் இருந்தார் அவர்.
ஒரே ஒரு வித்தியாசம்தான். தூங்கும்போது அவர்...
புதுமைப்பித்தனின் படைப்புலகம்
புதுமைப்பித்தனின் படைப்புலகம்
சங்குக்குள் அடங்கிவிடாத புதுவெள்ளம்
புதுமைப்பித்தனின் கதைத் தொகுப்பு நூலை எடுத்துப் புரட்டும் போதெல்லாம் ஒரே ஆண்டில் 45 கதைகளை எழுதி வீசிவிட்ட அவரின் அசுரத்தனமான வேகத்தின் பட்டியலை ஒவ்வொருமுறையும் பார்ப்பேன். அதைப் பார்க்கும்...
மாயச்சுவர் -குறுங்கதை
புலக்காட்சிக்குள் நிறுத்தி தொட்டுணர முடியா சுவரொன்றின் எழுச்சி எல்லா வீடுகளுக்குள்ளுமாய் இருக்கக்கூடும். எப்போதுமாய் இல்லையென்றாலும் எப்போதாவது அதன் உருவாக்கம் நிகழ்ந்து ஓரிரு நொடிகளுக்குள் சரிந்து பஸ்மமாகும் சந்தர்ப்பங்களும் அமையக்கூடும்.
தன் வீட்டிலும் அடிக்கடி எழத்தயாராயிருந்த...
கொவிட் 19 ம் ஆயுர்வேதமும்
(புனர்வசு ஆத்ரேயர் பாஞ்சாலத்தின் தலைநகரான காம்பில்யத்தில், ஒரு கோடை காலத்தில், கங்கைக்கரையில் சீடர்களுடன் காட்டில் உலாவிக் கொண்டிருக்கிறார்)
ஆத்ரேயர்- (அவருடைய சீடரான அக்னிவேஷரை நோக்கி )-
‘ஒ அக்னிவேஷா, நட்சத்திரங்களில், கோள்களில், சூரிய சந்திரன்களில், காற்றில்,...
கடவுளும் காமமும்: உமையாழின் மூன்று கதைகள்
எழுதப்படும் இலக்கியப் பனுவல்கள் எழுதியவருக்குச் சில அடையாளங்களை உருவாக்கித் தருகின்றன. உருவாக்கப்படும் அடையாளங்களுக்குக் காரணமாக இருப்பதில் முதல் இடம் எதை எழுதுகிறார்கள்? என்பதாகத் தான் இருக்கும். அதனைக் கொஞ்சம் விளக்கிச் சொல்ல நேர்ந்தால்...
சதி
எமி அலுவலக அறையில் தனது இருக்கையில் அமர்ந்த இடத்தில் இருந்தே ஜாக்கின் அம்மாவைப் பார்க்க முடிந்தது.
பள்ளி விட்டு அதன் கோலாகலம் முடிவதற்கு முன்பே ஜாக் வகுப்பறையில் இருந்து வெளியேறி கால்களைத் தேய்த்துக் கொண்டு...
ஞா.தியாகராஜன் கவிதை
எழுந்து வந்தோம்
அதன்பிறகு நான் யாருக்கும் லைனில் கிடைக்கவில்லை
இருபது வருடங்கள் கழித்து புதிதாகப் பிறப்பதில் சிரமமிருக்கிறது
அது சாவு போல இருந்தாலும்
நீ புறப்பட்ட தருணம் போல வலிக்கவில்லை
பத்து வருடங்களுக்குப் பிறகு கதவை திறக்கும்போது
எதிர் வீட்டில் நீ...















